November 2016 - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Friday, 4 November 2016

ஆர்யத் தமிழன் என்ற வைணவரின் கட்டுரைக்கு பதிலடி

November 04, 2016 5
துலுக்க நாச்சியார் பற்றி,குரு ஜி என்பவரின் முகநூல் பதிவில் காரசாரமான விவாதம் நடந்தது.அதில் நானும் பங்குக்கொண்டேன்.அப்பதிவுக்கு மறுப்பாக,ஆர்யத் தமிழன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.அதனை இங்குப் படிக்கலாம்.அதில் சரித்திரப் புரட்டையும் சைவ விரோதமாகவும் பல கருத்துக்களை சேர்த்துள்ளார்.அதற்கு பதிலடி கொடுக்கவே இந்தப் பதிவு.

// கஜினி படையெட்டுப்பு பொ.ஆ.பி. 1001 பஞ்சாபில் ஜயபாலனை வென்றது. (the oxford history of India by win cat A.Smith Cie 1921) 1019 கானோஜ் பிடிபட்டது 1024 – 25ல் சோம்நாத் சிவன் கோயில் இடிக்கப்படுகிறது, 1030 கஜினி இறந்துவிடுகிறான். அதன் பின் முதல் மசூத் (1030-41) முகமது (1941), மதூத் 1041-1048, இரண்டாம் மசூத் (1048), அலி (1048-1049), அப்துல் ரஜீத் 1049-52), தோகுமூல் 1052-53, பரூக் ஜாத் 1053-59, இப்ராஹீம் 1059-1099, மூன்றாம் மசூத் (1099- 1115) மூன்றாம் மசூத் தலைநகர் லாகூர், மூன்றாம் மசூத்தின் பெண்ணின் பெயர் பீவி.

     1097 -1100 காலத்தில் டெல்லியை உள்ளடக்கிய  கசானாவிட் முஸ்லீம்கள் ஆட்சி கீழ் வந்துவிட்டது. ஸ்ரீ ராமானுஜம் பத்ரிகையில் என். ஜீயபங்கார் தந்த தகவலினை Wikipedia உறுதி செய்கிறது தேவையெனில் Ghazanavit என பதிவுசெய்து பார்க்கவும்.    //



கஜ்னவித் அரசுப் பற்றி விக்கிபிடியாவில் தில்லியை ஆண்டதாக ஒன்றும் கூறப்படவில்லை : https://en.wikipedia.org/wiki/Ghaznavids ...
கஜ்னவித் ராஜ்யம் தில்லியை ஆண்டதாக எந்த ஆதாரமும் இல்லை.இந்த அரசு,பெருவாரியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கியதாகவே இருந்தது.வட இந்தியாவில் கஜ்னவித் அரசு எந்த பகுதியையும் ஆக்கிரமிக்க முடியவில்லை.ஆர்யத் தமிழ் என்ற இந்த வைணவ கட்டுரையாசிரியர் கூறும் 1097 -1100 காலக்கட்டத்தில்,தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வட இந்தியப் பகுதிகளை பால ராஜ்யத்தின் கீழ் இருந்தது. பால ராஜ்யத்தைப் பற்றி இங்கு படிக்கலாம் : https://en.wikipedia.org/wiki/Pala_Empire .

 தில்லியை 12ஆம் நூற்றாண்டுவரை பால அரசின் கீழ் இருந்த தில்லி,பிறகு பிரித்திவிராஜ் சௌஹன் கைக்கு மாறியது.அதே 12ஆம் நூற்றாண்டில்,முஹம்மது கோரி என்ற துர்க்க இனத்து முஸ்லிம் அரசன் தான் முதன் முதலில் தில்லியை கைப்பற்றினான். ( பிரித்திவிராஜ சௌஹன்-கோரி போரைப் பற்றி விரிவாகப் படிக்க இங்குச் செல்லவும் ). ஆக,12ஆம் நூற்றாண்டு வரை தில்லி,ஹிந்து அரசர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.தில்லியை முஸ்லிம்கள் 12ஆம் நூற்றாண்டில் தான் முதன் முதலாக கைப்பற்றுகின்றனர்.வட நாட்டுப் பகுதிகளை ஆக்கிரமிக்கவே முடியாமல் தினறிய முஸ்லிம் மன்னர்கள்,11ஆம் நூற்றாண்டில் தில்லி வரை ஆட்சி புரிந்தனர் என்றால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.ஆக,ராமானுஜர் வாழ்ந்தக் காலத்தில், தில்லியில் முஸ்லிம் மன்னர்களது ஆட்சி நடக்கவில்லை என்பது நன்கு தெரிகிறது.

இந்த  சரித்திரக் குறிப்பு ஒன்றே போதும்,துலுக்க நாச்சியார் கதை முழுவதுமாக நொறுங்கி விழுகிறது.இருப்பினும்,ஆர்யத் தமிழன் மேலும் சீண்டும் விதமாக சில கருத்துக்களைத் தெரிவித்ததால்,அவற்றுக்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது.அவற்றையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

//சிவனே பரதெய்வம் என சொல்லும் ஒரு தமிழ் சங்க இலக்கியம் நீர் காட்டமுடியுமா? //

விஷயம் தெரியாமல் வாய்ச் சவடால் விடுவது இவர் போன்ற வைணவ வெறியர்களுக்குப் புதிது அல்ல.இருப்பினும் சங்க இலக்கியங்களில் சிவபிரானே பரம் என்று கூறும் பாடல்கள் ஆயிரக்கணக்கில் உண்டு.முதலில் பரிபாடலில் விஷ்ணு தான் இறைவன் என்று கூறப்படவில்லை.சிவாம்சமான முருகனைத் தான் இறைவன்/பரமாத்மா என்று கூறுகிறது.விரிவான விளக்கம் இங்கு உள்ளது .

சங்க இலக்கியம் சிலவற்றில் சிவபிரானே இறைவன் என்று கூறும் பாடல்கள் இதோ :

நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்  (புறம் 166)

பொருள் :  பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினையுடைய முதிய
இறைவனது வாக்கை விட்டு நீங்காது அறமொன்றையே
மேவிய நான்கு கூற்றையுடைத்தாய்  ஆறங்கத்தாலும் உணரப்பட்ட
ஒரு  பழைய நூலாகிய வேதத்துக்கு...

கருத்து :வேதத்தை உருவாக்கிய வேத நாயகன்,இறைவன் சிவபிரான்

சங்க இலக்கியங்களில் உன்னத இடத்தைப் பிடித்திருப்பது திருக்குறள்.அதுவே ஒரு சைவ நூல் என்பதை சான்றொர் பலர் நிறுவிட்டனர்.திருக்குறளின் உரைகளில் சிகரமாய் உள்ள பரிமேலழகர் உரையும்,திருக்குறள்,சிவாகமங்களின் கருத்தைக் கூறுவதாக வஜ்ர மலை என ஸ்தாபித்து விட்டது.சில குறள்களைப் பார்ப்போம் :

1. "கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" - (திருக்குறள் - 9)

பொருள் : எண்குணத்தை உடையவனின் திருவடிகளை வணங்காத தலை,புலன்கள் இல்லாத பொறிகளைப் போல் (இருந்தும் பயனில்லை.)

விளக்கம் :இறைவனை எண்குணத்தான் என்கிறார் திருவள்ளுவர்.எண்குணத்தான் எனும் பெயர் சிவபிரானுக்கு மட்டுமே உரியப் பெயர்.விஷ்ணுவுக்கு எண்குணத்தான் என்றப் பெயர் கிடையாது. வைணவ ஆகமங்களிலும் அப்படி கூறப்படவில்லை.சிவாகமங்களில் மட்டுமே இறைவனுக்கு எட்டு குணங்கள் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.அதனால் தான் ஸ்ரீ பரிமேலழகர் தமது உரையில் "இவ்வாறு சைவாகமத்திற் கூறப்பட்டது" என்றார்.

அந்த எட்டு குணங்கள் :

1. தன்வயத்தனாதல் - சுவதந்திரத்துவம்

2. தூயஉடம்பினனாதல் - விசுத்ததேகம்

3. இயற்கை உணர்வினனாதல் - நிராமயான்மா

4. முற்றுமுணர்தல் - சருவஞ்ஞத்துவம்

5. இயல்பாகவே பாசங்களினீங்குதல் - அனாதிபோதம்

6. பேரருளுடைமை - அலுப்த சத்தி

7. முடிவிலாற்றலுடைமை - அநந்த சத்தி

8. வரம்பிலின்பமுடைமை - திருப்தி.

திருக்குறளில் கூறப்பட்ட ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயிலைந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழி அந்தணன் போன்றவை அனைத்தும் சிவபிரானையே குறிக்கிறது.ஏனெனில் எண்குணத்தான் என்று இறைவனை புகழ்ந்த வள்ளுவர்,அந்த இறைவனையே குறிக்கும் பல சொற்களை கையாண்டார்.எண்குணத்தான் என்பது சிவபிரானை மட்டும் குறிக்கும் என்று மேலே நாம் பார்த்தோம்.ஆக,திருக்குறளில் இறைவனை குறிக்கும் சொற்கள் அனைத்தும் இறைவனாகிய சிவபிரானை மட்டுமே குறிக்கும் என்பதே உண்மை.

நான் இங்கு கொடுத்தது சில ஆதாரங்கள் தான்.சங்க இலக்கியத்தில் ஆயிரக்கணக்கில் சிவப்பர பாடல்கள் உண்டு.விஷ்ணு,இந்திரன் போன்ற சாதாரண தேவர்களை சங்க இலக்கியம் புகழ்ந்துள்ளது,ஆனால் சிவபிரான் மற்றும் அவரது அம்சமான ஸ்கந்தப் பெருமான் போன்றவர்களை மட்டுமே இறை ஸ்தானத்தில் சங்க இலக்கியம் வைத்துள்ளது.

//  திருமாலே மோட்சத்தினை தரும் தெய்வம் என வடமொழி வேதமும், சங்கத்தமிழ் இலக்கியம் (பரிபாடல் போன்றவை) கல்வெட்டாக தெரிவிக்கின்றன//

சங்க இலக்கியம்  மட்டுமின்றி,சதுர்வேதமும் சிவபிரான் மட்டுமே இறைவன் என்று ஸ்தாபிக்கின்றன.வேதத்தின் 108 உபநிஷத்துக்களும் சிவபிரானையே இறைவனாக போற்றுகிறது. அதனைத் தனியாக ஒரு பதிவில் பார்ப்போம்.

//  உலகின் எந்த மதமானாலும் அது அத்வைத, விசிட்டாத்வைத, துவைத மதத்தின் சாயல் படியாது இருக்காது என்கிறார் சுதந்திர போராட்ட வீரர் எனது இதயதெய்வம் ஸ்ரீ ஸூப்ரமணிய சிவம் //

சுப்ரஹ்மண்ய சிவா என்ன சமயப் பண்டிதரா ? தேச விடுதலைப் போராட்டத்தில் அவர் சிரேஷ்டர்,சிறந்தவர்.ஆனால் அதற்காக சமய விஷயத்தில் அவர் கருத்தைப் பார்ப்பது நகைப்புக்குரியது.சைவம் என்பது,இந்த மூன்று மதங்களைச் சாராத தனியொரு மதம்.இன்னும் சொல்லப் போனால்,சைவத்திலிருக்கும் சிலக் கொள்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றை மட்டும் முன்னிறுத்தி பரவினதே பிற மதங்கள்.உதாரணத்திற்கு சைவத்தில் உள்ள திருமடம் அமைக்கும் கொள்கையை பௌத்த,சமண மதங்கள் கையாண்டன.சிவாகமங்களில்,நான்கு ஆதிசைவ மடங்கள் பற்றி பல குறிப்புகள் உண்டு.அது மாதிரியே சைவத்தில் உள்ள "இறைவனுக்கு பிறக்கு இறப்பு இல்லை","இறைவனுக்கு உருவம் இல்லை" போன்ற கொள்கைகளை இஸ்லாம் போன்ற மதங்கள் ,சில மாற்றங்களுடன் பின்பற்றுகின்றன.அதே போல்,சைவத்தில் விஷ்ணு தேவர் ஒரு பெரும் சிவனடியார் முதல்வராக போற்றப்படுகிறார்.அவரை இறைவனாக வைணவம் முன்னிறுத்துகிறது. இதைத் தான் வாயவ்விய சம்ஹிதை இவ்வாறு கூறுகிறது : "பிற நூல்களிற் கூறப்பட்டதெல்லாம் சிவாகமத்தில் இருக்கின்றது. சிவாகமத்திற் காணப்படாதது பிறிதோர் இடத்திலும் இல்லை" .இதன் உட்கருத்து,இறைவனான சிவபிரான் அருளிய சிவாகமங்களில் கூறப்பட்ட சிறந்த கொள்கைகள் பிற மதங்களில் நாம் காணலாம்,ஆனால் சிவாகமங்களில் இல்லாத உன்னத விஷயங்களை பிற மதங்களில் காண முடியாது.

//சரபர் ஸ்ரீநரசிம்ஹரை அடக்கியதாக பல வருடமாக பொய்பிரசாரம் செய்வது யார்?  http://aggraharam.blogspot.in/2013/03/blog-post_21.html படித்து உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.//

பிரமாண்டப் புராணத்தில்,நரசிம்மர் சரபரை அடக்கியதாக உள்ளது என்று கூறுகிறார்.முதலில் புராணம் என்பது ஆதார நூல் வரிசையில் கடைக்கோடியில் இருப்பது.புராணங்களில் இடைசெருகல்கள் மிகுதியாக காணப்படுவதால்,புராண ஆதாரத்தை சந்தேகிக்க நேரிடும்.புராணத்தைவிட ஸ்மிருதி வலிமையானது,ஸ்மிருதியைவிட ஸ்ருதி வலிமையானது.நரசிம்மம் சரபத்தை அடக்கியதாக எந்த ஸ்ருதி(வேதம்) ஆதாரமும் இல்லை.ஆனால் நரசிம்மத்தை சரபர் கொன்றதாக வேத ஆதாரம் உண்டு.ஸ்ரீ சரப உபநிஷத்தில் :

1. " எவர் விஷ்ணுவையும் விஷ்ணுவின் அவதாரங்களான மச்சம்,கூர்மம்,வராகம்,நரசிங்கம் முதலியவற்றையும் வாட்டி பீடிக்கின்றாரோ அந்த ருத்ரருக்கு நமஸ்காரம் ஆகுக

2."பயங்கரமான சரப வேஷம் தாங்கி உலக பீடிதமாயிருந்த நரசிம்ஹத்தை ஹிம்சித்தவரும்,பாதங்களால் ஹரியை ஹரிக்கின்றவரும்,புருஷ ரூப விஷ்ணுவை வதம் செய்யாமல் தேவரீரது பராக்கிரமத்தை மாத்திரம் காட்டியருள வேண்டும் என்று சர்வ தேவர்களாலும் மகாராத்திரியில் பின்தொடர்ந்து பிரார்த்திக்கப்பட்டவரும்,கிருபையினால் நரசிங்கத்தின் உடம்பினது  தோலை கிழித்து உரித்து எடுத்து,வஸ்திரமாக அணிந்துக் கொண்டவரும்,மஹாப்லமுள்ள வீரபத்திர மூர்த்தி ஆனவரும், ஆகிய எவர் உண்டோ,அந்த ருத்திரர் ஒருவரே தியேயர்"

இதே போல்,உபநிஷத் வாக்கியம் காட்ட முடியுமா இவர் ? கடைசியில்,சரப உபனிஷத்,பிற்காலத்து இடைசெருகல் என்று அத்வைதிகள்,விசிஷ்டாத்வைதிகள்,மாத்வர்கள் கூறுவது போல் கூறலாம்.ஆக,வேதம் மொத்தத்தையும் எந்தக் கேள்வியோ,மாற்றுக் கருத்தோ இல்லாமல் பின்பற்றுபவர்கள் சைவர்கள் மட்டுமே என்பது வெளியாம்.நாங்கள் வேதத்தின் கர்மகாண்டத்தையும்,ஞானகாண்டமாகிய 108 உபநிஷத்துக்களையும் பின்பற்றுகிறோம்.ஆக,உண்மையான வைதீகர் சைவர் அன்றி பிறர் அல்லர்.

//திருமண் இல்லாவிட்டால் திருமாலையே வணங்குவாராம் சைவத்தின் போர்வாள் சிரிப்புத்தான் வருகிறது. அப்படியானால் ஏசுநாதருக்கு திருமண் இல்லை வணங்குவீரா?//

முட்டாள் தனமான கேள்வியாக இவர் கேட்கிறாரே.வைணவாலயங்களில் விஷ்ணு தேவரின் விக்ரஹம் சர்வ சாஸ்திரங்களிலும்கூறியப்படி விபூதி அணிவிக்கப்பட்டு இருந்தால்நான் அவ்விக்ரஹத்தை வணங்குவேன் என்றுதான் சொன்னேன் ஒழிய நாமம் இல்லாமல் இருந்தால் வணங்குவேன் என்று சொல்லவில்லை.ஏசுவின் விக்ரஹம் நாமம் அணியவில்லை அதேபோல் விபுதியையும் அல்லவா அணியவில்லை.அதை எப்படி வணங்குவது இதை எல்லாம் சிந்திக்க மாட்டாரா சர்வ சாஸ்திரங்களும் விஷ்ணு விபுதி ருத்ராக்ஷம் அணிபவர் என்றே கூறுகின்றன.இங்குபடிக்கவும் :

1. http://swordofsivadharma.blogspot.my/2016/11/blog-post_4.html

2.http://swordofsivadharma.blogspot.my/2016/07/blog-post_30.html



Read More

விஷ்ணு விபூதி ருத்ராக்ஷம் அணிபவரே- ஆழ்வார்களின் பாடல்களிலிருந்து ஆதாரங்கள்

November 04, 2016 13

 விஷ்ணு தேவர் விபூதி அணிபவர் என்று வேதம்,புராணம்,இதிஹாசம்,ஸ்மிருதிகள் மட்டும் கூறவில்லை,ஆழ்வார்களின் பாடல்களும் கூறுகின்றன.
“தாழ்சடையு நீண்முடியு மொண்மழுவுஞ் சக்கரமுஞ்
சூழரவும் பொன்னாணுந் தோன்றுமாற் -குழுந்
திரண்டருவி பாயுந் திருமலைமே லெந்தைக்
கிரண்டுருவு மொன்றா யிசைந்து” –   (நம்மாழ்வார்)
“பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்
பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து ” – (திருமங்கையாழ்வார்)
மேலுள்ள நம்மாழ்வார் பாடலில் சிவபெருமானும் விஷ்ணு மூர்த்தியும் ஒவ்வோர் பாதித் திருமேனியை உடையவராய்ச் சேர்ந்து ஒரு வடிவராய் இருக்கின்றனர் என்று அறியலாம்…திருமங்கையாழ்வார் பாடலில் வலப்பாகத் திருமேனி சிவபெருமானாகவும் இடப்பாகத் திருமேனி நாராயண மூர்த்தியாக இருக்கின்றனர் என்று உள்ளது…
வலப்பாகம் ஆண்பால் என்றும் இடப்பாகம் பெண்பால் என்று கொள்ளும் வழக்கத்தின்படி,சிவபிரான்,ஆண் தன்மையுடைய சக்திமான் என்றும்,நாராயணமூர்த்தி பெந்தன்மையுடைய நால்வகை சக்திகளுள் ஒன்றான சக்தி வடிவினர் என்று அறியலாம்…நாராயணர்,சிவனாரின் நால்வகை சக்திகளில் ஒருவர் என்பதை கந்தபுராணம் இவ்வாறு கூறுகிறது :
“நால்வகைப்பட்ட நண்ணிய சத்தியுண் – மாலு மொன்றாதலின் மற்றது காட்டுவான்”
ஆக,சிவபிரானுடைய திருமேனி முழுவதும் திருநீறு பூசப்பட்டிருப்பதால்,அவர் திருமேனியில் இடப்பக்கத்திலுள்ள நாராயணர் திருமேனியிலும் திருநீறு பூசப்பட்டிருக்கும் என்ற உண்மையை நாம் அறியலாம்…
மேலும் நம்மாழ்வார் இவ்வாறு கூறுகிறார் :
கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு
அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே
இந்தப் பாடலின் முதல் வரியின் கருத்து “நாராயணமூர்த்தி,சிவசின்னங்களுள் ஒன்றான திருநீற்றைத்,தன் கரியத் திருமேனியில்,நன்றாக பிரகாசிக்கும்படி தரிந்த்திருக்கிறார்”  …
“உடையார்ந்த வாடையன் கண்டிகை யன்உ டை நாணினன்
புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி யன்மற்றும்பல் கலன்” -(ஏழாம் திருவாய்மொழி)
இந்தப் பாடலின் கருத்து “நாரயண மூர்த்தி,ருத்ராக்ஷ மாலை அணிந்திருக்கிறார்” என்று அறியலாம்…கண்டிகை என்றால் ருத்திராக்ஷம் என்று பொருள்…
எறிய பித்தினோ டெல்லா வுலகு கண்ணன் படைப்பென்னு
நீறு செவ்வே யிடக்காணி னெடுமா லடியா ரென்றோடு
நாறு துழாய் மலர் காணி னாரணன் கண்ணி யீதென்னுந்
தேறியுந் தேறாது மாயோன் றிறத்தின ளேயித் திருவே – (நான்காம் திருவாய்மொழி)
தணியும் பொழிதில்லை நீரணங் காடுதி ரன்னைமீர்
பிணியு மொழிகின்ற தில்லைப் பெருகு மிதுவல்லான்
மணியி லணிநிற  மாயன் றமரணி நீறு கொண்டு
வணிய முயலின்மற் றில்லைகண் டீரிவ் வணங்குக்கே   -( ஆறாம் திருவாய்மொழி)
இந்தப் பாடல்களின்வழி விஷ்ணு மூர்த்தியின் அடியவர்கள் அன்புடன் தரிப்பதற்கு உரியவை திருநீறு அணிபவர் என்றும் அதனால் மற்ற சின்னமாகிய ருத்ராக்கமும் அணிவார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக உள்ளன…

இக்காலத்தில் சிலர்,நீறு என்பதற்கு சாந்து,ஊர்த்தவ புண்டரம் என்றெல்லாம் அர்த்தம் கூறுகின்றனர்…இருப்பினும், ஊர்த்தவ புண்டரத்துக்கு நீறு எனும் பெயர் வடமொழி மற்றும் தென்மொழி நிகண்டுகளான அமரம்,திவாகரம்,பிங்கலந்தை,சூடாமணியில் கூறப்படவில்லை…நீறு என்றால்,விபூதியையும் கண்டிகை என்றால் ருத்ராக்ஷத்தையும் மட்டுமே குறிப்பன…
மேலும்,நம்மாழ்வார்கள் போன்றோர்,ராமானுஜருக்கு முந்தையவர்கள்..ராமானுஜர் தான் ஊர்த்தவபுண்டரத்தை உருவாக்கியவர்…இதற்கு ஆதாரம் :
1. “ஸ்ரீ பெரும்பூதூரில்  இவ்வருஷத்திற்கு 870 வருஷமான கலி நாலாயிரத்து நூற்றெட்டுக்கு பிங்கள வருஷம்…திருவவதரித்தருளிய ஸ்ரீ பாஷ்யக்காரர் காலத்திற்கு முன்பு இப்போதுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் பஸ்மாதிதாரணராய் இருந்தார்கள்…அப்படியிருந்த இவ்வைஷ்ணவர்களுக்கு ச்வேத பீத வர்ண புண்டரங்களையும் -நூதனமாக வெளியிட்டு அவைகளை திக்விஜயஞ் செய்வித்து தாபித்தார் கிடாய்..அதற்கு முன் இவர்களுக்கு திருமண்ணேது சிவந்த  ஸ்ரீ  சூர்ண  மேது காண் ” (உடையவர் சூர்ண விளக்கம்)
2. “சகவர்ஷம் ஆயிரத்திருபத்தொன்றான பகுதான்ய வர்ஷம் பங்குனி மாதத்தில் -திரு நாராயணப் பெருமாளைக் கண்டு  திருமஞ்சனஞ் செய்வித்துக் கல்யாண ஸரஸின் வட மேற்கில் திருமண்ணையும் கண்டெடுத்துக் கோயில் நகர் முதலியவைகளைத் திருத்தி ” .(வடகலைக் குருபரம்பரை )
ஆக,ராமானுஜருக்கு முந்தைய ஆழ்வார்கள் ஊர்த்தவப் புண்டரத்தைப் பற்றி பாடவில்லை…அதனால் தான் அவர்கள்,விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் பற்றி பாடுகின்றனர்…
ஆகையினால்,விஷ்ணு மூர்த்தி,விபூதியையும்  ருத்ராக்ஷத்தையும் அணிந்தவர் என்பதே ஆழ்வார்களின் கருத்து…ஆகையினால்,விஷ்ணு மூர்த்தி சிவபக்தரே….

உதவிய நூல் : “சைவ பூஷண சந்திரிகை” (சைவ மஹாசரபம் நா.கதிரைவேற்பிள்ளை)
Read More

பரிபாடலில் விஷ்ணுவே இறைவன் எனும் புரட்டுக்கு பதிலடி

November 04, 2016 0
          



ஆதாரம் : சித்தாந்த பண்டித பூஷணம்,ஆ.ஈஸ்வர மூர்த்தி பிள்ளையவர்களின் "சமய சாதனம்" பத்திரிக்கை,மலர் 3-இதழ் 6

பி.கு. : படங்களில் உள்ளதைப் படிக்க,படத்தை அழுத்தவும் (click)

Read More

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்