|| சிவாத்பரதரம் நாஸ்தி ||
மஹ்ஹம்மதிய கர்வ பங்கம்- பாகம் 1
பவிஷ்ய புராணத்தில் முஹம்மது அறிவிக்கப்பட்டுள்ளாரா ? இஸ்லாத்தை பவிஷ்ய புராணம் புகழ்ந்துள்ளதா ?
முஸ்லிம்கள், நம்மிடம் அடிக்கடி முன்வைக்கும் ஒரு விஷயம் ,பவிஷ்ய புராணத்தில் முஹம்மது அறிவிக்கப்பட்டுள்ளார் மற்றும் அதில் இஸ்லாம் புகழப்பட்டுள்ளது என்பதாம்.
முதலில் முஸ்லிம்கள் பவிஷ்ய புராணத்தை படிக்காமல் ஜாகிர் நாயக் போன்ற வேத,புராண அறிவு இல்லாத போலிகளின் புரட்டை நம்பியே நம்மிடம் இதை கூறி வருகின்றனர்.பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ள உண்மையான செய்தியை இனி பார்ப்போம் .பவிஷ்ய புராணம்,பிரதிசர்க பர்வம்,3ஆம் அத்தியாயம் :
....அக்காலக்கட்டத்தில்,அந்த (சாலிவாஹன ) ராஜ பரம்பரையின் பத்தாவது மன்னராக இத்தரணியில் திகழ்ந்தார். நற்பண்புகள் குறைந்துக்கொண்டு வருவதை கண்ணுற்ற அரசர்,காளிதாசரை தளபதியாகக் கொண்ட பத்தாயிரம் வீரர்களால் ஆன ஒரு படையைக் கொண்டு,திக்விஜயம் புரிய புறப்பட்டார்.காந்தார தேசத்தவர்,மிலேச்சர்,சாகர்..... போன்றோரை அவர் வெற்றிக் கொண்டார்.அவர்களைத் தண்டித்து, பெரும் செல்வத்தை ஈட்டினார்.அதன் பின்,மஹமதா எனும் மிலேச்ச தர்ம ஆச்சாரியனுடன் தமது பிற சேவகர்களுடனும் பாலைவனத்தில் வீற்றிருந்த சிவபிரானை தரிசிக்கச் சென்றார்.சிவபிரானை (சிவலிங்கம்) கங்கை நீரைக்கொண்டு அபிஷேகம் செய்து,தனது அகத்தில் ,பஞ்சகவ்வியத்தைக் கொண்டு (அகப்) பூஜை செய்தார்.சிவபிரானை ஸ்தோத்திரங்களால் வழிபட்டு திருப்த்திபடுத்தினார்.
சூத முனிவர் கூறினார் : அரசனின் ஸ்தோத்திரங்களுக்கு செவிமடுத்த சிவபிரான் கூறினார் : போஜராஜனே ! மஹாகக்கேஸ்வரம் எனும் இடத்துக்குச் செல்லவும்,அவ்விடம் வாஹிகம் என்றழைக்கப்படுகிறது.மிலேச்சர்களால் அசுத்தம் செய்யப்பட்டுள்ளது.அந்தக் கொடும் தேசத்தில்,தர்மம் அழிந்துவிட்டது.நான் முன்பு சாம்பராக்கிய திரிபுராசுரன் எனும் ஓர் அசுரன் ஒருவன் உள்ளான்,பலியின் கட்டளையால் மறுபடியும் உருவெடுத்துள்ளான்.பிசாசைப் போன்ற செயல்களை உடைய அவன் பெயர் மஹமதாம்.அதனால்,இந்தத் தீய இடத்துக்கு நீ செல்லக்கூடாது,அரசனே ! எனது அனுக்ரஹத்தால் உன் புத்தி தூய்மையாகும்.இதைக் கேட்ட அரசரும் தனது தேசத்துக்குத் திரும்பினார், மஹமதாவும் அவர்களுடன் சிந்து நதியின் கரையை வந்தடைந்தான்.அவன் மாயையில் கைத்தேர்ந்தவனாகையால்,அரசரிடம் கூறினான் : சிறப்பு மிக்க அரசரே ! இதோ பாரும்,உமது இறைவன் எனது அடிமையாகிவிட்டான்,அதனால் எனது எச்சங்களை உண்பதைப் பாரும். இதனைக் கண்ணுற்ற அரசர்,ஆச்சரியம் உள்ளவராய் ஆனார்.ஆத்திரமடைந்த காளிதாசர், "மூடனே,அரசரை ஏமாற்ற மாய வித்தை ஒன்றை உருவாக்கியுள்ளாயே ! உன்னை கொலை செய்துவிடுவேன் ! மிக இழிந்தவன் நீ "
மதினா என்பது அவர்களின் புனித க்ஷேத்திரமாம்.மாய வித்தையில் கைத்தேர்ந்த மஹமது,ஒரு பூதத்தின் உருவை எடுத்துக்கொண்டு, போஜ ராஜர் முன் ஓர் இரவு தோன்றினான். "அரசே ! உமது (சைவ) சமயமே அனைத்துச் சமயங்களிலும் சிறந்ததென அறியப்படுகிறது. எனினும் இறைவனது (பரசிவம்) ஆணைக்கிணங்க,நான் ஒரு கொடூரமான பைசாச மதத்தை உருவாக்கப்போகிறேன். எனது மதத்தைப் பின்பற்றுபவர்களது அறிகுறிகள் யாதெனில்,அவர்கள் தங்களது ஆண்குறியை வெட்டிக் கொள்வர்,சிகை வைத்துக் கொள்ள மாட்டார்கள்,தாடியை வைத்துக்கொள்வர்,அதிக சப்தம் இட்டு அனைத்தையும் உண்பார்கள்.சுத்தி செய்யாமல் உணவை உண்பார்கள்.தர்மத்தை அழிக்கும் அவர்கள் முசல்மான்கள் என்றழைக்கப்படுவர்".இவற்றை எல்லாம் கேட்ட அரசர் தனது இருப்பிடம் திரும்பினார்,அந்த பிசாசும் (மஹமதா) தனது இருப்பிடம் திரும்பியது.
ஆக,நண்பர்களே மேலே உள்ள பகுதியில் கூறப்பட்டுள்ள செய்தி,இஸ்லாத்தின் ஸ்தாபகர் முஹம்மதை குறிப்பிடுகிறது என்றால் ,முஹம்மது திரிபுராசுரனின் மறுபிறப்பு என்பதையும்,இஸ்லாம் ஒரு பிசாசு மதம் என்பதையும், முஹம்மது மாய வித்தைகள்,பில்லி,சூன்னியத்தில் கைத்தேர்ந்தவர் என்பதையும்,சைவ சமயமே உண்மை சமயம் என்பதையும்,இஸ்லாம் மக்களை வழிகெடுக்க சிவபிரான் அனுமதியுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் முஸ்லிம்கள் ஏற்க வேண்டும்.இதை முஸ்லிம்கள் ஏற்கத் தயாரா ?
மேலும், இந்தப் பகுதியை இடைக்கால இந்தியச் சரித்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்,சில உண்மைகள் தெரியும்.11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் போஜராஜ எனும் சைவ மன்னர் .இவர் சபையில்,ஆந்திரக் காளிதாசர் என்பவர் பண்டிதர்,கவியாகவும் உற்ற நண்பராகவும் திகழ்ந்தார்.இதே காலக்கட்டத்தில் தான் கஜினியை மையமாக் கொண்டு மஹ்முத் (Mahmud of Ghazni) எனும் துர்க்க இனத்தவன் ஆண்டான்.இந்த மஹ்முத் தான் இஸ்லாத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் சிந்து தேசத்தில் வலுக்கட்டாயமாக பரப்பியவன்.ஒருவேளை இவன் ,ஆங்கிலத்தில் black magic என்றழைக்கப்படும் பில்லி,சூன்னியம் போன்ற ஒழுக்கமில்லா வழிபாட்டில் ஈடுபாடுள்ளவனாக இருந்திருக்கலாம். சோமநாதர் ஆலயத்தை அசுத்தப்படுத்தியவன் இவனே.இதைத் தான் ,சிவபிரான் தன் எச்சங்களை திண்ணுவதுபோல் மாயை ஒன்றை உருவாக்கினான் என்று புராணம் கூறுகிறதோ என்னவோ. இவன் மீது ஆத்திரம் கொண்ட போஜ தேவர்,இவனை ஒழிக்க பெரும்படை திரட்டி வந்ததும் வரலாற்று உண்மையே.இதைத் தான் போலிருக்கு,காளிதாசர் இவனை கண்டித்ததாக புராணம் கூறுகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால்,இது 11ஆம் நூற்றாடில் வாழ்ந்த போஜ தேவர் மற்றும் கஜ்னி மஹ்முத் பற்றிய செய்தியாகவே திகழ்கிறது.
இஸ்லத்தின் ஸ்தாபகர் முஹம்மது சிந்து தேசத்துக்கோ இந்தியாவுக்கு வந்ததாகவோ அல்லது எந்த இந்திய மன்னனையும் சந்தித்ததாகவோ எந்த இஸ்லாமிய சீரா (முஹம்மதின் வரலாற்று ) நூலோ அல்லது ஹதீஸோ குறிப்பிடவில்லை.எது எப்படியோ, இந்த பவிஷ்யப் புராணத்தை முஸ்லிம்கள் ஏற்றால், முஹம்மது மற்றும் இஸ்லாத்தின் மீது அது வைக்கும் பழிகளையும் ஏற்க வேண்டும். ஏற்க முன்வருவீர்களா முஸ்லிம்களே ?
1. மிலேச்சன் : பண்பாடு இல்லாத காட்டுமிராண்டி, பசுமாமிசம் உண்பவன்,இறை நூல்களுக்கு எதிராக பேசுபவன் (நாத்திகன்) , பாவி,இழிவானவன்
2.பைசாச தர்மம் = பிசாசு மதம் . அநாச்சாரங்களை,ஒழுக்க இன்மையை உடைய மதம்
Post Top Ad
Sunday, 8 January 2017
Home
இஸ்லாம்
சிவ தர்மம்
முஹம்மது
பவிஷ்ய புராணத்தில் முஹம்மது அறிவிக்கப்பட்டுள்ளாரா ? இஸ்லாத்தை பவிஷ்ய புராணம் புகழ்ந்துள்ளதா ?
பவிஷ்ய புராணத்தில் முஹம்மது அறிவிக்கப்பட்டுள்ளாரா ? இஸ்லாத்தை பவிஷ்ய புராணம் புகழ்ந்துள்ளதா ?
Tags
# இஸ்லாம்
# சிவ தர்மம்
# முஹம்மது
About சிவபாத சேகரன்
முஹம்மது
Labels:
இஸ்லாம்,
சிவ தர்மம்,
முஹம்மது
Subscribe to:
Post Comments (Atom)
சைவ க்ஷத்திரியத்வம்
இணையத்தள உரிமையாளன்
சைவத்தின் போர்வாள் (வேதாசலம் பிள்ளை)
No comments:
Post a Comment