February 2017 - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Tuesday, 7 February 2017

வைஷ்ணவம் என்பது புதியச் சமயமே,இந்த நாட்டின் மெய்யானச் சமயம் சிவதர்மம் மட்டுமே !

February 07, 2017 0




                                                            || சிவாத்பரதரம் நாஸ்தி ||


பாரதத்தின் அடையாளம் சைவ சமயமே.இதற்குச் சான்றாக இருப்பது வேதம்.வேதம் சிவபிரானை இறைவனாக வழிபடுவதை மட்டுமே வலியுறுத்துகிறது.சிவபிரானின் அடியவர்களான ரிஷிகளையும் ,விஷ்ணு,பிரம்மன்,இந்திரன் போன்ற தேவர்களையும் மரியாதை செய்யவே கூறியுள்ளது.ஆனால் கலிகாலத்தின் கோரத்தால்,சிவபிரானின் ஓர் அடியவரான விஷ்ணுவை இறைவனாக்கி ,வைஷ்ணவம் எனும் ஒரு புதிய மதமே உருவாக்கப்பட்டது.இந்த வைஷ்ணவம் எனும் நவீன மதத்தைப் பரப்ப,ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் இதிஹாசங்களிலும் பல இடைசெருகல்கள் புகுத்தப்பட்டிருக்கின்றன.சைவ ஆச்சாரியரும் பண்டிதர்கள் இக்கருத்தைப்,தங்களது பல சாஸ்திரங்களில் ஆயிரக்கணக்கான சான்றுகளுடன் நிறுவியுள்ளனர்.அதேப் போல்,சைவத்தைச் சாராத மாயாவாத("அத்வைத") மற்றும் வெளி நாட்டு ஆராய்ச்சியாளர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம் .



I) "History of civilization in Ancient India based on Sanskrit Literature" by Romesh Chander Dutt (ரோமேஷ் சந்தர் தத் என்பவர் இயற்றிய "சம்ஸ்க்ருத நூல்களின் ஆதாரத்தினால் எழுதப்பட்டதாகிய பூர்வீக இந்தியா" )

1. "Krishna worship ,which is of later origin ,has been bodily transplanted into the ancient narrative of the Kuru-Panchala war." (Page 130)

மொழிபெயர்ப்பு : க்ருஷ்ணனைத் தெய்வமாக வழிபடுவது புதியதே.அது குரு-பாஞ்சால யுத்தமாகிய பூர்வசரிதையில் (மஹாபாரதம்) முழுதும் சேர்க்கப்பட்டது . ( பக்கம் 130)


2. "The Vaishnava religion,in many of its forms ,seems only a survival of the Buddhist religion" (Page 654)

மொழிபெயர்ப்பு : பலவகைப்பட்ட (பல சம்பிரதாயம்,பிரிவுடைய) அவ்வைணவம் முன்னிருந்த ,இறந்த பௌத்தத்தின் எச்சமாகவே காணப்படுகிறது (பக்கம் 654)

3."Dr. Buler maintains that the whole work (VishnuSmriti) was recast by an adherent of Vishnu ; and that the final and introductory chapters (in verse) were composed by another and a still later writer. The period in which the work was thus repeatedly recast is between the fourth and the eleventh century A.D. " (Page 657)

மொழிபெயர்ப்பு : பியுலர் என்னும் பண்டிதர் விஷ்ணுஸ்மிருதி முழுதும் வைஷ்ணவ அபிமானமுள்ள ஒருவனால் மாற்றப்பட்டதென்றும் ,அவனுக்கு வெகுகாலத்துக்குப் பின் உதித்த மற்றொருவனால் உபோற்காத அத்யாயமும் இறுதி அத்தியாயமும் செய்யுள்ளாகச் செய்யப்பட்டன என்றும் ஸ்தாபித்திருக்கிறார்.இவ்விதம் அந்த ஸ்மிருதி அடிக்கடி மாற்றி எழுதப்பட்டது - கிபி 4ஆம் நூற்றாண்டுக்கும் 11ஆம் நூற்றாண்டுக்கும் மத்தியகாலக்கட்டத்தில் தான் (பக்கம் 657)

4."The whole story of Krishna- a deity.... appears to be a very modern interpolation " (Page 137)

மொழிபெயர்ப்பு : க்ருஷ்ணனை தெய்வமாக எழுதப்பட்ட கதைமுழுவதும் (அந்த நூலில்) நூதனமாக நுழைக்கப்பட்டது என்றும் நமக்குத் தோன்றுகிறது (பக்கம் 137)

5. "Padma Purana : The Uttara Khanda which is probably later than the other portions of the Purana,is intensely Vaishnava in its tone : the nature of Bhakti or faith in Vishnu,the use of Vaishnava marks on the body, the legends of Vishnu's incarnations and other construction of images of Vishnu are all explained by Siva to his consort Parvati and they both finish by adoring Vishnu !There can be no doubt much of this sectarian controversy has been added after the Moslem conquest of India.There is mention,even in the earlier books of this Purana,of Mlechchhas flourishing in India,while the last portions of the work Dr.Wilson gives the 15th or 16th century A.D. , as the probable date." (Page 664)

மொழிபெயர்ப்பு : பத்மபுராணத்தின் உத்தரகாண்டமானது (இறுதி அத்யாயம்) அப்புராணத்தின் மற்றைய பாகங்கள் தோன்றிய நெடுங்காலத்திற்குப் பிறகு பெரும்பாலும் வைஷ்ணவ நடையில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது.விஷ்ணு பக்தியின் சொரூபமும் வைஷ்ணவச் சின்ன தாரண பிரயோஜனமும் விஷ்ணுவின் அவதார சரித்திரங்களும் விஷ்ணு விக்கிரகங்கள் செய்யும் விதிகளும் சிவனால் தன் தேவியாகிய பார்வதிக்கு கூறப்பட்டன என்பதும் அவ்விருவருவும் இறுதியில் விஷ்ணுவை வணங்கி நின்றனர் என்பதும் எழுதப்பட்டுள்ளன.  இந்தியாவில் முஹம்மதிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு தான் மதச்சண்டைகள் நடந்ததற்கு அறிகுறியாகிய இவ்விஷயங்கள் எல்லாம் புனையப்பட்டன என்பது சந்தேகமற்ற விஷயம்.இந்த உத்தரகண்டத்தின் சில பூர்வ பாகங்களில் இந்தியாவில் மிலேச்சர் (முஸ்லிம்கள்) பரவிகிடப்பதுவும் குறிக்கப்பட்டுள்ளது.வில்சன் எனும் பண்டிதரும் இந்த இறுதிப்பாகங்கள் பெரும்பான்மையும் கிபி 15-ம் ,16-ம் நூற்றாண்டுகளில் உண்டாயிருக்கலாம் என்று காலவரையறையும் குறித்தார். (பக்கம் 664)

6. "Brahma Kaivarta Purana :- It is divided into four books describing the acts of Brahma,Devi,Ganesa and Krishna respectively.The original character of the work has however been much altered ,the present work is decidely sectarian and prominence is given to Krishna over all other deities.The great mass of the existing work is taken up with descriptions of Vrindavana with endless prayers to Krishna,and with tiresome descriptions of the loves of Radha and the Gopis" (Page 667)

மொழிபெயர்ப்பு : ப்ரஹ்ம கைவர்த்த புராணமானது நான்கு புத்தகங்களாகி முறையே ப்ரஹ்மா,தேவி,கணேசர்,க்ருஷ்ணர் ஆகிய இவர்களின் மகிமைகளைக் கூறுகிறது .அதன் யதார்த்த ரூபம் அதிகமாக மாற்றப்பட்டது .இப்போதுள்ள புராணம் மத அபிமானத்தால் எழுதப்பட்டுக் க்ருஷ்ணனுக்கு பெருமையும் மற்ற தெய்வங்களுக்கு சிறுமையும் கூறுவதாக இருக்கிறது.இப்போதுள்ள நூலின் பெரும்பாகம் பிருந்தாவன வர்ணனைகள் ,அளவற்ற க்ருஷ்ண ஸ்தோத்திரங்களும் ராதை மற்றும் கோபிகா இஸ்திரிகளுடனுமான அளவற்றனவாம் தன்மையால் வெறுக்கத்தக்க விரக தாபவர்ணனைகளும் கூறுவதாயிருக்கின்றது (பக்கம் 667)

7."Skanda Purana:- The Utkala Khanda gives an account of the holiness of Orissa and of Jagannatha and is no doubt a later appendage by Vaishnava writers,who thus added an account of a Vsihnava Tirtha to an eminently Saiva Purana" (Page 668)

மொழிபெயர்ப்பு : ஸ்காந்தப் புராணத்தில் உத்கலகண்டமானது ஒட்ரதேசத்தின்(ஒரிஸா) பரிசுத்தத்தையும் ஜகந்நாதத்தின் மகிமையையும் சொல்லும்.இது வைஷ்ணவ வித்வான்களால் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதென்பதற்குச் சந்தேகமில்லை.அவர்கள்,சிறந்த சைவப்புராணமாகிய இதில்,ஒரு வைஷ்ணவ தீர்த்த வைபவத்தையும் சேர்த்து வைத்தனர் (பக்கம் 668)

8."Siva was the first popular God of the Puranik period, as we find in the annals of Orissa and some other provinces,as well as in the classic literature of the Puranik Age.Krishna who is almost unkonwn to Kalidasa ,Bharavi ,Bhanabhatta ,Bavabhuti and other classic authors became the popular god of the Hindus at a later date : Magha and Jayadeva celebrated his deeds in the eleventh and twelth centuries : and all through the Musalman rule, Krishna was no doubt the most favourite deity of the Hindus" (Page 670)

மொழிபெயர்ப்பு : ஒரிஸா முதலிய தேசங்களின் சரித்திரங்களிலும் புராண காலத்தில் ஏற்பட்ட சிறந்த நூல்களிலும் புராணக்காலத்தின் சிறந்த தெய்வமாக மனிதர்களால் வழிபடப்பட்ட தெய்வம் சிவமே .காளிதாசர்,பாரவி,பாணபட்டர்,பவபூதி முதலிய மகாவித்துவான்களால் கூறப்படாத க்ருஷ்ணர் அக்காலத்துக்கு நெடுங்காலத்திற்குப் பிறகு தான் இந்துக்களால் வழிபடப்படும் தெய்வமாகினார் .மாகரும் ஜெயதேவரும் க்ருஷ்ண சரித்ரங்களை 11-12-ஆம் நூற்றாண்டுகளில் கூறினர்.பின்னர் முஹம்மதியர் ஆக்கிரமிப்பு காலமெல்லாம் க்ருஷ்ணர் அன்புடன் ஹிந்துக்களால் வழிபடப்படும் தெய்வமாயினார் என்பதற்கு சந்தேகமில்லை (பக்கம் 670)

II) "Preface to R.C.Dutt's Mahabaratha by professor F.Max Muller"(ரோமேஷ் சந்தர் தத் வெளியிட்ட மஹாபாரதத்துக்கு மாக்ஸ் முல்லர் எழுதிய முகவுரை)

"There is no doubt an introductory chapter of our poem which tells us how with the help of Ganesa,the Mahabaratha was written .But the absence of that chapter in a large number of Mss. more perticularly as Dr.Winternits has shown,in the Mss. of the South of India,speaks for itself." (page VII)

மொழிபெயர்ப்பு :  இந்த நூலின் (மஹாபாரதம்) பீடிகையாகிய அத்யாயத்தில் கணேசரது துணையால் இம்மகாபாரதம் இயற்றப்படதென்பதற்கு எவ்வகையான சந்தேகமும் இல்லை .ஆயினும் அவ்வத்தியாயம் அநேகம் கரலிகிதப் பிரதிகளில் முக்கியமாக விண்டர்நிட்ஸ் எனும் பண்டிதர் எடுத்துக்காட்டியதுபோல் தென்னிந்தியாவின் கரலிகிதப் பிரதிகளில் இது (கணேசர் உதவிய விஷயம்)  இல்லாதிருப்பதன் காரணம் யூகித்துக்கொள்ள முடிகிறது (பக்கம் 7)


ஆக,ஹிந்துக்களே ! நம் ஹிந்துக்களின் உண்மையான ஆதி மதம் சைவ சமயமே.இடைக்காலத்தில்,அதுவும் குறிப்பாக 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, முஸ்லிம் வந்தேறிகளின் ஆக்கிரமிப்பில் நம் நாடு இருந்த போது தான்,வைஷ்ணவம் எனும் புதிய மதம் பரப்பப்பட்டது.இந்த வைஷ்ணவர்கள் தங்கள் மதத்தைப் பரப்ப புராணங்களிலும் இதிஹாசங்களிலும் ஸ்மிருதிகளிலும் ஏகப்பட்ட இடைசெருகல்களை புகுத்தி உள்ளனர்.இந்தக் கருத்தைப் பல இந்திய சம்ஸ்க்ருதப் பண்டிதர்களும் மேனாட்டு ஆராய்ச்சியாளர்களும் உறுதி செய்துள்ளதை மேலே உள்ளா பல ஆதாரங்களில் பார்த்தோம்.முஸ்லிம் வந்தேறிகளை 8ஆம் நூற்றாண்டில் அவர்கள் இங்கு கால் வைத்தக் காலத்தில் இருந்தே இங்குள்ள சைவ மன்னர்கள், அவர்களை விரட்டுவதையே தங்களின் மேலான இறைப்பணியாக சிரமேற்கொண்டு செம்மையாக செய்தனர். அல்லும் பகலும், முஹம்மதிய வந்தேறிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தை நடைத்தினர்.அதன் எதிரொலியாக கிபி 7-ம் நூற்றாண்டிலேயே முஸ்லிம்கள் நம பாரதம் மீது படையெடுக்க ஆரம்பித்தாலும், கிபி 12-ம் நூற்றாண்டில் தான் ஒரு இஸ்லாமிய அரசை நம் நாட்டில் ஸ்தாபித்தார்கள்.அதாவது 500 வருஷம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து அரபு முஸ்லிம்கள் இந்தியாவை கைப்பற்றும் எண்ணத்தை அடியோடு மறந்துவிட்டனர்.கிபி 12-ம் நூற்றாண்டில் துர்க்க இனத்து முஹம்மதியனான முஹம்மது கோரியே இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசை நிறுவினான்.ஆக, சைவ மன்னர்கள், தங்கள் உடலில் உள்ள கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை முஹம்மதிய வந்தேறிகளுடன் போர் புரிந்தனர்.12-ம் நூற்றாண்டுக்குப் பின், சைவ சமயம் வட நாட்டில் குன்றியதால் , அங்குள்ள மன்னர்கள் பாதை தவறினர்.அதனால் முஹம்மதிய மன்னர்கள் பல வட தேசப் பகுதிகளைக் கைப்பற்றினர்.எனினும், இங்கு பிரிடிஷ் அரசு கால் பதியும்வரை, முஹம்மதிய மன்னர்களை விரட்டியடிப்பதில் பெரும்பங்காற்றியவர்கள் சைவ அரசுகள் தான்.இதற்கு பல சான்றுகள் உண்டு :

1.
"The Saivas represent the conservative force in the history of Hinduism" [ The Imperial Gazetteer of India (Volume 1,Pg : 421) ]

இந்து மத சரித்திரத்தில்,சைவர்கள் தங்கள் மதத்தை தொன்றுதொட்டு எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாத்துவந்தது தெரிகிறது என்பது அதன் அர்த்தம்.இதனை வேறு விதமாகவும் சொல்லலாம்,அதாவது,ஹிந்து மதத்தை அந்நிய தாக்குதல்களிடம் இருந்து காத்தது,சைவர்களே.

இதேபோல்,Richard H.Davis எழுதிய Lives of Indian Images (Pg : 187) என்ற நூலில்,இவ்வாறு உள்ளது :

1. "Siva served as a "guardian of national resurgence" "

2. "Munshi identifies Somanatha with bith the national and the racial identity of India"


சிவபிரான்,( துலுக்க மிலேச்சர்களை எதிர்த்து,தேசத்தைக் காக்கும்) தேசிய எழுச்சியின் தலைவராக (அல்லது சின்னமாக) திகழ்கிறார் என்ற முதல் வாக்யமும்,

சோமநாதர் (பாரத) தேசிய  மற்றும் (பாரத) இனத்தின் அடையாளமாக முன்ஷி கருதுகிறார் என்று இரண்டாம் வாக்யமும் கூறுகிறது.

ஆக,ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமாகவும் முஹம்மதிய மிலேச்சனை எதிர்த்து நடத்தப்பட விடுதலைப் போராட்டத்துக்கும் அடையாளமாகவும் ஒன்றிணைக்கும் சின்னமாகவும் சைவம் திகழ்ந்துள்ளது என்று தெள்ளத் தெளிவாக உள்ளது.சைவ சமயத்தவர் முஸ்லிம் வந்தேறிகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வந்தக் காலக்கட்டத்தில்,எந்த அரசியல் பலமும் இல்லாமல் இருந்த வைஷ்ணவர்கள், இதைச் சாதகமாகப் பயன்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்பினர்.ஏறத்தாழ 16ஆம் நூற்றாண்டில், புராணங்கள்,இதிஹாசங்கள்,ஸ்மிருதிகள் என்று இப்படிப்பட்ட நூல்களில் வைஷ்ணவ சமய கருத்துக்களைப் புகுத்திவிட்டனர்.அதோடு,மஹாபாரதத்தில் உள்ள சிவவழிபாட்டின் மேன்மையை உணர்த்தும் பல பகுதிகளையும் நீக்கிவிட்டனர்.இதை மேலே மாக்ஸ் முல்லர் போன்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் மூலம் நாம் அறியலாம்.

சைவம் மற்றும் வைஷ்ணவம்,இந்த இரு சமயங்களைச் சாராத மாயாவாதியான ("அத்வைதி") விவேகானந்தர் கூட என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ?

" Be proud that you are an Indian" , "Oh India, forget not that your ideal woman is Sita,Savitri,Damayanti; forget not that your ideal God is the great ascetic of ascetics,Umanath Sankar."  (Preface of " Swami Vivekananda : A collection of his speeches and writings with potraits",Second edition)

"விவேகானந்த ஸ்வாமிகளின் உபந்நியாசங்களும் அவர் செய்த நூல்களும்" எனும் நூலின் முகவுரையில் " ,  " நீ ஒரு ஹிந்துவா இருப்பதற்கு செருக்குற்றிரு" ," ஓ ஹிந்துக்களே ! சீதை,சாவித்திரி,தமயந்தி என்பவர்கள் ஸ்திரிகளின் லக்ஷணங்கள் முழுவதும் அமையப்பெற்றவர்கள் என்பதையும் ; ரிஷிகளும் மஹரிஷி எனும் அபிதானமுற்ற உமாகாந்தராகிய சங்கரரே (சிவன்) உங்களின் உயர் இறைவன் என்பதை மறவாதிருங்கள் !" என்றும் விவேகானந்தர் நமக்கு அறிவுறுத்துகிறார்.

ஆக,இத்தேசத்தின் ஒரே நிரந்தர மதம்,அடையாளம்,சின்னம் - சைவ சமயம் மட்டுமே ! வைஷ்ணவம் என்பது மிக பிற்காலத்தில் அதுவும் சுமார் 500 வருஷங்களுக்கு முன் தான் ஒரு பெரும் மதமாக வளர்ந்துப் பரவியது,அதுவும் சைவர்களுக்கும் வந்தேறி முஹம்மதியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் போது,இந்த குழப்பமானக் காலக்கட்டத்தைப் பயன்படுத்தியே, நமது நூல்களில் வைஷ்ணவ சிந்தனையை இடைசெருகலாக புகுத்தியுள்ளனர் வைணவர்கள்.ஆதலால்,ஹிந்துக்களே ! நாம் ஏன் இன்று அரசியல் அனாதையாகவும், அடிமைச் சமூகமாகவும் உள்ளோம் தெரியுமா ? நமது அடையாளமான சிவதர்மத்தை விடுத்து,உண்மை இறைவனாம் பரசிவத்தை வணங்குவதை விடுத்து, வைஷ்ணவம்,சிறுதெய்வ வழிபாடு என்று முற்றிலும் நம் தேசத்துக்கு ஒத்துவராத வழிபாடுகளை எல்லாம் நாம் கடைபிடிப்பதால் தான் ! நமது நன்றி மறந்த இந்தச் செயலுக்கே இறைவன் நமக்குத் தண்டனையாக இந்த இழி நிலையை அளித்துள்ளான். நமசிவாய !


*பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ ஸ்வாமிகள் இயற்றிய "சைவ சமய சரப"த்தில் உள்ள ஆதாரங்களைத் தழுவி எழுதப்பட்டது




Read More

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்