இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசை நிறுவிய கோழை முஹம்மது கோரி - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 16 July 2016

இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசை நிறுவிய கோழை முஹம்மது கோரி

ஷாஹாபுதீன் முஹம்மது கோரி அல்லது முயிஸ் அத்-தீன் எனும் துர்க்க இனத்து முஹம்மதியன்,கஜினி(Ghaznavid) ராஜ்ஜியத்தை தோற்கடித்து,ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினான். இவனே முஹம்மதிய ஆட்சியை இந்தியாவில் முதன் முதலில் நிறுவியவன்.12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவன்,வட இந்தியாவை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கினான்.பல ராஜபுத்திர அரசர்களுடன் போரிட்டான்.

முதலில்,சாலுக்கியர்களுடன் போர் தொடுத்தான் முஹம்மது கோரி.பொது ஆண்டு 1178இல்,குஜராத் மீது பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வந்தான்..அப்பொழுது இளவரசராக இருந்தவர்  மூலராஜர் என்பவர்.அவர் பாலகராக இருந்தமையால்,அவரின் தாயார் ராணி நைகிதேவி ,அந்தப் பாலகனை சுமந்துக்கொண்டு, சாலுக்கிய படைக்கு தலைமைத் தாங்கி முஹம்மது கோரியை எதிர்த்தார்.அபு மலை அடிவாரத்தில் நடைபெற்ற இந்த போரில்,சாலுக்கியப் படை துருஷ்கப் (முஹம்மதிய) படையை தோற்கடித்தது.பிரிஷ்ட்டா(Firishta) எனும் பாரசீக முஹம்மதிய வரலாற்றாசிரியர் கூறுகிறார் " குஜராத்தின் அரசர்,முஹம்மதிய படையை எதிர்த்துப் போரிட்டு,அவர்கள் படை மீது பெரும் சேதம் உண்டாக்கி தோற்கடித்தார்.கஜினியை அடைவதற்குமுன் அவர்கள் (முஹம்மதியப் படை) பல இன்னல்களை சந்தித்தனர்".குஜராத்தில் கிடைக்கப்பட்ட ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டில்,மூலராஜர் கர்ஜனகர்களை (கஜினி வாசிகள்) ஜெயம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.மற்றொரு கல்வெட்டோ,மூலராஜரின் ஆட்சில்,ஒரு பெண் கூட ஹமிராக்களை (அமீர்/முஹம்மதிய ஆட்சியாளன்) தோற்கடிக்க முடியும் என்று கூறுகிறது .இந்தப் போரின் தாக்கத்தால் அச்சமடைந்த முஹம்மது கோரி,12 ஆண்டுகளுக்கு,எந்த ஒரு "ஹிந்து" அரசன் மீதும் போர் தொடுக்கவில்லை.

கஜினி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கிய கோரி,1186இல்,லஹூரை வந்தடைந்தான். இந்தக் காலக்கட்டத்தில் தான் சௌஹன் ராஜ்ஜியத்தின் மிகப்பிரசித்திப் பெற்ற பிரித்திவிராஜ் சௌஹனை எதிர்த்துப் போரிடும் தருவாயில் உள்ளான் முஹம்மது கோரி.பிரித்திவிராஜ் விஜயம் எனும் நூல் கூறுகிறது,கர்ஜனையை (கஜினி) கைப்பற்றி,வடமேற்கில் ஆட்சி புரியும் கோ மாமிசம் புசிக்கும் கோரி எனும் மிலேச்சனின் எழுச்சியில் கவனமாய் இருந்தார் பிரித்திவிராஜர் என்று கூறுகிறது.நயச்சந்திர சூரியின் ஹம்மீர காவியத்தில் பிரித்திவிராஜர் முஹம்மது கோரியை ஏழு முறை தோற்கடித்ததாக கூறப்படுகிறது.மேருதுங்கரின் பிரபந்த சிந்தாமணியும் சந்த் பர்தையின் பிரித்திவிராஜராஸோ போன்ற நூல்களோ,பிரித்திவிராஜர் கொரியை 21 முறை போரிகளத்தில் தோற்கடித்தார் என்று கூறுகின்றனர்.எனினும் முஹம்மதிய வரலாற்றாசிரியர்களான மின்ஹாஜ்,பிரிஷ்ட்டா போன்றோரோ, இருவருக்கும் நடந்த இரு போர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.தசரத சர்மா என்பவர்,இந்த இரு தரப்பினரின் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்த்து,கூரிட் அரசின் தளபதிகள்,சௌஹன் அரசுக்கு உட்பட்ட பல பகுதிகள் மீது 1186இல் இருந்தே தாக்குதல்களை நடத்தினர் என்றும்,அவர்களை ஒவ்வொருமுறையும் சௌஹன் படை தோற்கடித்ததாகவும் கூறுகிறார்.இந்த முஹம்மதிய தாக்குதல்களை முஹம்மதிய சரித்திராசிரியர்கள் கண்டுக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்.

1191இல் தான் முஹம்மது கோரி, முஹம்மதியப் படையை திரட்டிக் கொண்டு மறுபடியும் படை எடுத்தான்..சிர்ஹிந்தில் ஆட்சிபுரியும் ஒரு சிற்றரசனை தோற்கடித்து அவன் கோட்டையை கைப்பற்றியது முஹம்மதியப் படை.அந்த சிற்றரசன்,பிரிதிவிராஜரின் ஆளுமை கீழ் உள்ளவனாதலால், கோரி மீது பிரித்திவிராஜர் தாமே தலைமை ஏற்று போர் தொடுத்தார்.இரண்டுப் படைகளின் பலத்தையும் நாம் இனி காண்போம்.முஹம்மது கோரியின் படை 35 000 குதிரைப் படைகளைக் கொண்டது. அதோடு சேர்த்து ஒட்டகப் படை,காலாட்ப்படை மற்றும் யானைப்படையும் இருந்தன.ஆனால் அவற்றின் எண்ணிக்கை அறியமுடியவில்லை.பிரித்திவிராஜ் சௌஹனின் படையின் மொத்த எண்ணிக்கை 50 000.இதில் குதிரப் படை 20 000 தான்.ஆக,ஏறக்குறைய பிரித்திவிராஜின் படை கோரியின் படையும் சம எண்ணிக்கை அல்லது கோரியின் படை அதிக எண்ணிக்கை உடைய படையாக இருந்துள்ளது.இரண்டுப் படைகளும் போர்களத்தில் சந்தித்தன.இந்தப் போரே முதலாம் தரைன் போர் என்று வழங்கப்பட்டது.பிரித்திவிராஜரின் ஆக்ரோஷமான தாக்குதல் முன்னால் கோரியின் வலது மற்றும் இடது புற படைகள் சின்னாபின்னமாகி,புறங்காட்டி ஓடத் துவங்கின. கோரியோ தன் குதிரையின் கீழிருந்து சரிந்து விழுந்தான். ஒரு கல்ஜி இனத்து ஆடவன் தான் கோரியை பாதுகாப்பாக கொண்டு சென்றான்.தங்களின் தலைவனை காணாத முஹம்மதியப் படை,அச்சத்தாலும் குழப்பத்தாலும் உற்சாகமிழந்து ஓடத் துவங்கினர்.இங்கு தான் பிரத்திவிராஜரின் படைகள் தவறு செய்துவிட்டனர்.தப்பித்தோடும் முஹம்மதியப் படையை சின்னாபின்னமாக்கியிருக்கலாம்,ஆனால் அவர்களை அப்படியே விட்டு விட்டனர். மற்றொரு காரணம், பிரித்திவிராஜரிடம் வேகமாக செல்லும் படை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது.அவரது குதிரைப் படை மிகவும் சிறியதே.அதனாலும் கோரியின் படையை விரட்டிக் கொண்டு செல்ல முடியாமல் இருந்தது. பாலைவனப் பகுதி மற்றும் குதிரைகள் இல்லாத பகுதிகளை ஆட்சி செய்வதால்,பிரித்திவிராஜருக்கு பெரும் குதிரைப் படை இருக்க வாய்பில்லை,அவருக்கு இருந்த குதிரைகளும் இறக்குமதி செய்யப்பட்டவையே.முஹம்மது கோரியோ,குதிரைகள் வளமிக்க மத்திய மற்றும் மேற்கு ஆசியா தன் கட்டுப்பாட்டில் இருந்ததால், பெரும் குதிரைப் படையை திரட்ட சுலபமாக இருந்தது.


மறுபடியும் தரைன் மீது போர் தொடுக்க முடிவெடுத்த கோரி,அதற்கு முன்பாக,லாஹூரிலிருந்து , ,பிரித்திவிராஜருக்கு ஒரு ஓலை அனுப்பினான்.அதில் முஹம்மதிய மதத்தை தழுவி,தன்னுடைய ஆளுமையை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தான்.அதுக்கு பதிலாக " எங்கள் ராணுவ வீரர்களின் வீரத்துக்கு நீ அந்நியன் அல்லன், தினமும் பெருகிக்கொண்டே போகும் எங்கள் படையின் எண்ணைக்கு உன் கண்களே சாட்சி, நீ எடுத்திருக்கும் இந்த தீய முடிவுக்காக காலப்போக்கில் நீ வருந்தி திருந்திவிடுவார்,நீ பாதுகாப்பான இடத்துக்கு பின்வாங்க நாங்கள் அனுமதிப்போம்.ஆனால் உன் விதியை எதிர்க்கொள்ள நீ திட்டமிட்டிருந்தால், படைகளை சுக்கு நூறாக்கும் யானைகளுடனும், களத்தை அதிர வைக்கும் குதிரைகளுடனும் போர்வெறி கொண்ட வீரர்களுடனும்,காலை யில் உன் படையை சுக்கு நூறாக்குவோம் என்று உறுதியிடுகிறோம்! " என்று பிரித்திவிராஜர் அனுப்பியதாக பிரிஷ்டா கூறுகிறார்.இனி,பிரித்திவிராஜரை நேருக்கு நேர் வீரத்தில் எதிர்கொள்ள இயலாது என்றறிந்த கோரி,ஒரு சூழ்ச்சியை கையாண்டான்."அரசனான என் சகோதரன் கட்டளைப்படி,அவன் தளபதியாகிய நான் தற்பொழுது இந்தியாவுக்குள் புகுந்துவிட்டேன் . கடமையும் கண்ணியமும் என்னை இந்த செயலை செய்ய வைக்கிறது.இருப்பினும் என் சகோதரிடம் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டும் அவனது கட்டளைக்கு காத்திருக்கும் வரை,சமாதானம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்." என்று ஓலை அனுப்பினான்.இந்த சூழ்ச்சிப் படுகுழியில் பிரித்திவிராஜர் விழுந்தார்.பிரிஷ்டா கூறுகிறார் " சுல்தான் போருக்காக தன் படையை தயார்படுத்திக்கொண்டிருந்தார். நம்பிக்கை அல்லாதோர் ("ஹிந்துக்கள்") படையினர்,உடல் சுத்தி செய்வதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் தங்களின் போர் முகாமை விட்டு வெளியேறும் சமயம் பார்த்து, கோரி தன் படைகளுடன் அங்கு வந்தான். இந்த திடீர் தாக்குதல்களால்  அதிர்ந்து போனார்கள் "ஹிந்துக்கள்" .இருப்பினும் தங்களால் முடிந்த அளவுக்கு தயார்படுத்திக்கொண்டு ,போர் தொடுத்தனர்." .இந்த இரண்டாம் தரைன் போர், மதியம் வரை நீடித்தது.அப்பொழுது "ஹிந்துக்கள்" மிகவும் களைப்புடனும் பசியுடனும் இருந்தனர்.காலை உணவைக் கூட அவர்கள் அருந்தவில்லை.இந்தத் தருணத்தில் தான் கோரி,தான் ஒதுக்கி வைத்திருந்த தனது படையிலேயே மிகவும் பலமிக்க குதிரைப் படைக்கு கட்டளையிட்டு பிரித்திவிராஜரின் படையின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தான்.சுலபமாக வெற்றிபெற்றிருக்க வேண்டிய இந்தப் போரில்,கோரி பெரும் எதிர்ப்பை சந்தித்தான்.இந்த சூழ்ச்சியை மட்டும் கையாளவில்லையெனில்,அவன் இரண்டாம் முறை தோற்றிருப்பான்.

மேலும் கோரியின் படை,பிரித்திவிராஜரின் படையைவிட ஐந்து மடங்கு பெரியதாக இருந்தது.முஹம்மது கோரியின் படையில் 52 000 குதிரைகள் இருந்தன.12 000 குதிரை வீரர்களை தன் தலைமையிலும்,எஞ்சி இருக்கும் 40 000 குதிரைகளை நான்கு பிரிவாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தலா 10 000 குதிரைகள் என்று வியூகம் வகுத்தான்.52 000 குதிரைகளோடு சேர்த்து, ஒட்டகம்,காலாட்படை யானைப்படையையும் வைத்திருந்தான்.இவற்றின் எண்ணிக்கைகளை முஹம்மதிய சரித்திர நூல்கள் கூறவில்லை.பிரித்திவிராஜின் படையோ மொத்த எண்ணிக்கையே வெறும் 30 000 தான்.அதில் குதிரைப் படை வெறும் 10 000 தான்.முஹம்மது கோரியின் குதிரைப் படையே பிரித்திவிராஜரின் மொத்தப் படையைவிட பெரியதாக இருந்தது.இதுவும் முஹம்மது கோரிக்கு சாதகமாக இருந்துள்ளது.அதனால் தில்லியைக் கைப்பற்றி,இந்தியாவில் முஹம்மதிய ஆட்சியை தொடக்கி வைத்தான்.


பிரித்திவிராஜர் மற்றும் பிற ராஜபுத்திர அரசர்களின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.முஹம்மதியர்களின் சூழ்ச்சிகளை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர் . போரில் தோற்கடிக்கப்பட்டு புறம் காட்டி ஓடும் முஹம்மதியப் படைக்கு பெருத்த சேதம் கொடுக்காமல் இருந்துள்லனர் ஹிந்து அரசர்கள்.இதனால்,முஹம்மதியர்கள்,தங்கள் படையை பலப்படுத்திக்கொண்டு மறுபடியும் தாக்குதல் நடத்த வழிவகுத்தது.தோற்று ஓடு முஹம்மதிய படையினரை பிந்தொடர்ந்து அவர்களை முற்றிலும் அழித்திருந்தால், அவர்கள் இந்தியாவின் மீது தாக்குதல்களை நடத்தியிருக்க மாட்டார்கள்.மேலும், முஹம்மதியர்களின் சூழ்ச்சிகளை ஆழமாக யோசிக்காமல்,அவர்களை நம்பியது ஒரு பெரும் முட்டாள் தனம் தான்.எல்லாத்தையும்விட, முஹம்மது கோரியின் காலத்தில் மூன்று வலுவான ஹிந்து ராஜ்ஜியங்கள் இருந்துள்ளன.அவை சௌஹன்,சாலுக்கியர் மற்றும் காஹதவாத்துக்கள்.இவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்திருந்தால், பஞ்சப்,முல்தான்,சிந்து போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துள்ள முஹமதிய மிலேச்சர்களை மட்டுமல்ல,ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த கஜ்னவி (Ghaznavid) மற்றும் கூரித்(Ghurid) முஹம்மதிய அரசுக்களையும் அழித்தொழித்திருக்க முடியும்.ஆனால் அவர்களோ தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர். முஹம்மதிய தாக்குதல்கள் நடந்தப் போதும்,உதவிப் படை அனுப்பாமல் இருந்துவிட்டனர்.இதுவே கோரிக்கு சாதகமாக இருந்தது.

உதவிய நூல்கள் :

1. World Famous Wars and Battles
2.Heroic Hindu Resistance to Muslim Invaders

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்