இன்று,பாலஸ்தீன் தேசத்தின் ஒரு பகுதியை,யூதர்கள் கைப்பற்றி விட்டனர்,என்றெல்லாம் முஸ்லிம்கள் புலம்புகின்றனர்…பாலஸ்தீன் உண்மையிலேயே முஸ்லிம்களின் நாடா அல்லது முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடா என்பது வேறு விஷயம்….அதை வேறு ஒரு பதிவில் பார்வையிடுவோம்…பாலஸ்தீனத்தை யூதர்கள் கைப்பற்றி தான் இஸ்ராயில் எனும் தேசத்தை உருவாக்கிக் கொண்டனர் என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டினாலும்,யூதர்களுக்கு ஜெருசலம் முதலான பகுதிகளை எவர் குடியிருப்புக்களாக வழங்கினார் என்று நாம் உற்று நோக்கினால்,ஆச்சரியமாக இருக்கும்…யார் அவர் என்பதை தொடர்ந்து பார்போம்…
யூதர்களுக்கு ஜெருசலம் போன்ற இடங்களை வழங்கியவர்,வேறு யாரும் இல்லை,இன்றைய சவுதி அரபியாவின் மன்னர் பரம்பரையின் முதல் மன்னரான , சுல்தான் அப்துல் அஸிஸ் தான் …மேலே உள்ள படம்,மன்னர் அப்துல் அஸிஸ்,பிரிட்டனின் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சர் பெர்ஸி ஸக்கரியா காக்ஸ் (Major General Sir Percy Zachariah Cox) என்பவருக்கு அனுப்பிய கடிதத்தை குறிக்கிறது..அந்த கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
“சுல்தான் அப்துல் அஸிஸ் பின் அப்துல் ரஹ்மான் அல்-சவூத் அல்-பைஸாலாகிய நாம் , பாலஸ்தீனத்தை ஏழை யூதர்களுக்கோ அல்லது யூதர்கள் அல்லாதோருக்கு,கொடுப்பதை, ,பிரிட்டன் பிரதிநிதியாகிய ,சர் பெர்ஸி காக்ஸிடம் ஆயிரம் முறை அங்கிகரிக்கிறோம்,என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்..அதனோடு,நாம், பிரிட்டன் கட்டளையையும் மீறமாட்டோம் “இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி,அதனை சுல்தான் அப்துல் அஸிஸ் அவர்களே கையொப்பமிட்டிருக்கிறார்…ஆக,பாலஸ்தீனத்தை யூதர்கள் ஆக்கிரமிக்கவில்லை,மாறாக,யூதர்களுக்கு ஒரு முஸ்லிம் மன்னரான அப்துல் அஸிஸே வழங்கியுள்ளார் என்பதே உண்மை…இந்த உண்மை வரலாற்றை அறியாத முஸ்லிம்கள் , யூதர்கள் தான் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர் என்று கோஷமிடுகின்றனர்…. இன்றைய சுன்னி இஸ்லாமிய உலகின் தலைமை இடமான சவுதி அரபியா,எவ்வளவு தூரம் பிரிட்டனின் அடிமையாக இருந்துள்ளது என்பதை பல முஸ்லிம்கள் அறியவில்லை….சவுதி அரபிய ஷேக்குகள்,அமெரிக்கா பிரிட்டன் போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகளுடன் நெருக்கமான நட்பை பாராட்டிக் கொண்டு,சுக போகமாக வாழ்கின்றனர்…கடைகோடி இஸ்லாமிய தொண்டன் தான்,அமெரிக்கா பிரிட்டனுக்கு எதிராக போர் கொடி தூக்குகிறான்…படித்த உலாமாக்களோ,அல்லது அரபியர்களோ,முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதில்லை….ஏழை முஸ்லிம்கள் தான் இப்படி தூண்டப்படுகின்றனர்…

மிக அருமையான தகவல், தொடரட்டும் எழுத்துப்பணி..
ReplyDelete