விஷ்ணு விபூதி ருத்ராக்ஷம் அணிபவரே- ஆழ்வார்களின் பாடல்களிலிருந்து ஆதாரங்கள் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Friday, 4 November 2016

விஷ்ணு விபூதி ருத்ராக்ஷம் அணிபவரே- ஆழ்வார்களின் பாடல்களிலிருந்து ஆதாரங்கள்


 விஷ்ணு தேவர் விபூதி அணிபவர் என்று வேதம்,புராணம்,இதிஹாசம்,ஸ்மிருதிகள் மட்டும் கூறவில்லை,ஆழ்வார்களின் பாடல்களும் கூறுகின்றன.
“தாழ்சடையு நீண்முடியு மொண்மழுவுஞ் சக்கரமுஞ்
சூழரவும் பொன்னாணுந் தோன்றுமாற் -குழுந்
திரண்டருவி பாயுந் திருமலைமே லெந்தைக்
கிரண்டுருவு மொன்றா யிசைந்து” –   (நம்மாழ்வார்)
“பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்
பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து ” – (திருமங்கையாழ்வார்)
மேலுள்ள நம்மாழ்வார் பாடலில் சிவபெருமானும் விஷ்ணு மூர்த்தியும் ஒவ்வோர் பாதித் திருமேனியை உடையவராய்ச் சேர்ந்து ஒரு வடிவராய் இருக்கின்றனர் என்று அறியலாம்…திருமங்கையாழ்வார் பாடலில் வலப்பாகத் திருமேனி சிவபெருமானாகவும் இடப்பாகத் திருமேனி நாராயண மூர்த்தியாக இருக்கின்றனர் என்று உள்ளது…
வலப்பாகம் ஆண்பால் என்றும் இடப்பாகம் பெண்பால் என்று கொள்ளும் வழக்கத்தின்படி,சிவபிரான்,ஆண் தன்மையுடைய சக்திமான் என்றும்,நாராயணமூர்த்தி பெந்தன்மையுடைய நால்வகை சக்திகளுள் ஒன்றான சக்தி வடிவினர் என்று அறியலாம்…நாராயணர்,சிவனாரின் நால்வகை சக்திகளில் ஒருவர் என்பதை கந்தபுராணம் இவ்வாறு கூறுகிறது :
“நால்வகைப்பட்ட நண்ணிய சத்தியுண் – மாலு மொன்றாதலின் மற்றது காட்டுவான்”
ஆக,சிவபிரானுடைய திருமேனி முழுவதும் திருநீறு பூசப்பட்டிருப்பதால்,அவர் திருமேனியில் இடப்பக்கத்திலுள்ள நாராயணர் திருமேனியிலும் திருநீறு பூசப்பட்டிருக்கும் என்ற உண்மையை நாம் அறியலாம்…
மேலும் நம்மாழ்வார் இவ்வாறு கூறுகிறார் :
கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு
அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே
இந்தப் பாடலின் முதல் வரியின் கருத்து “நாராயணமூர்த்தி,சிவசின்னங்களுள் ஒன்றான திருநீற்றைத்,தன் கரியத் திருமேனியில்,நன்றாக பிரகாசிக்கும்படி தரிந்த்திருக்கிறார்”  …
“உடையார்ந்த வாடையன் கண்டிகை யன்உ டை நாணினன்
புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி யன்மற்றும்பல் கலன்” -(ஏழாம் திருவாய்மொழி)
இந்தப் பாடலின் கருத்து “நாரயண மூர்த்தி,ருத்ராக்ஷ மாலை அணிந்திருக்கிறார்” என்று அறியலாம்…கண்டிகை என்றால் ருத்திராக்ஷம் என்று பொருள்…
எறிய பித்தினோ டெல்லா வுலகு கண்ணன் படைப்பென்னு
நீறு செவ்வே யிடக்காணி னெடுமா லடியா ரென்றோடு
நாறு துழாய் மலர் காணி னாரணன் கண்ணி யீதென்னுந்
தேறியுந் தேறாது மாயோன் றிறத்தின ளேயித் திருவே – (நான்காம் திருவாய்மொழி)
தணியும் பொழிதில்லை நீரணங் காடுதி ரன்னைமீர்
பிணியு மொழிகின்ற தில்லைப் பெருகு மிதுவல்லான்
மணியி லணிநிற  மாயன் றமரணி நீறு கொண்டு
வணிய முயலின்மற் றில்லைகண் டீரிவ் வணங்குக்கே   -( ஆறாம் திருவாய்மொழி)
இந்தப் பாடல்களின்வழி விஷ்ணு மூர்த்தியின் அடியவர்கள் அன்புடன் தரிப்பதற்கு உரியவை திருநீறு அணிபவர் என்றும் அதனால் மற்ற சின்னமாகிய ருத்ராக்கமும் அணிவார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக உள்ளன…

இக்காலத்தில் சிலர்,நீறு என்பதற்கு சாந்து,ஊர்த்தவ புண்டரம் என்றெல்லாம் அர்த்தம் கூறுகின்றனர்…இருப்பினும், ஊர்த்தவ புண்டரத்துக்கு நீறு எனும் பெயர் வடமொழி மற்றும் தென்மொழி நிகண்டுகளான அமரம்,திவாகரம்,பிங்கலந்தை,சூடாமணியில் கூறப்படவில்லை…நீறு என்றால்,விபூதியையும் கண்டிகை என்றால் ருத்ராக்ஷத்தையும் மட்டுமே குறிப்பன…
மேலும்,நம்மாழ்வார்கள் போன்றோர்,ராமானுஜருக்கு முந்தையவர்கள்..ராமானுஜர் தான் ஊர்த்தவபுண்டரத்தை உருவாக்கியவர்…இதற்கு ஆதாரம் :
1. “ஸ்ரீ பெரும்பூதூரில்  இவ்வருஷத்திற்கு 870 வருஷமான கலி நாலாயிரத்து நூற்றெட்டுக்கு பிங்கள வருஷம்…திருவவதரித்தருளிய ஸ்ரீ பாஷ்யக்காரர் காலத்திற்கு முன்பு இப்போதுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் பஸ்மாதிதாரணராய் இருந்தார்கள்…அப்படியிருந்த இவ்வைஷ்ணவர்களுக்கு ச்வேத பீத வர்ண புண்டரங்களையும் -நூதனமாக வெளியிட்டு அவைகளை திக்விஜயஞ் செய்வித்து தாபித்தார் கிடாய்..அதற்கு முன் இவர்களுக்கு திருமண்ணேது சிவந்த  ஸ்ரீ  சூர்ண  மேது காண் ” (உடையவர் சூர்ண விளக்கம்)
2. “சகவர்ஷம் ஆயிரத்திருபத்தொன்றான பகுதான்ய வர்ஷம் பங்குனி மாதத்தில் -திரு நாராயணப் பெருமாளைக் கண்டு  திருமஞ்சனஞ் செய்வித்துக் கல்யாண ஸரஸின் வட மேற்கில் திருமண்ணையும் கண்டெடுத்துக் கோயில் நகர் முதலியவைகளைத் திருத்தி ” .(வடகலைக் குருபரம்பரை )
ஆக,ராமானுஜருக்கு முந்தைய ஆழ்வார்கள் ஊர்த்தவப் புண்டரத்தைப் பற்றி பாடவில்லை…அதனால் தான் அவர்கள்,விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் பற்றி பாடுகின்றனர்…
ஆகையினால்,விஷ்ணு மூர்த்தி,விபூதியையும்  ருத்ராக்ஷத்தையும் அணிந்தவர் என்பதே ஆழ்வார்களின் கருத்து…ஆகையினால்,விஷ்ணு மூர்த்தி சிவபக்தரே….

உதவிய நூல் : “சைவ பூஷண சந்திரிகை” (சைவ மஹாசரபம் நா.கதிரைவேற்பிள்ளை)

13 comments:

  1. விஷ்ணுவின் கருணையால் மட்டுமே முக்தி

    சிவபெருமானின் பெயர்களில் ஒன்று, முக்திநாதர், “முக்தியளிப்பவர்.” ஆயினும், அவர் கிருஷ்ணரின் கருணையால் அவரது சார்பாகவே அச்செயலைச் செய்கிறார். சுதந்திரமாக முக்தி வழங்க சிவபெருமானால் இயலாது.
    (பிருஹத் பாகவதாம்ருதம் 1.2.84)

    காசியில் இறப்பவர்களுக்கு சிவன் மோக்ஷம் கொடுக்கின்றார் என்பதை பெரும்பாலானோர் அறிவர். ஆனால் அவர் எவ்வாறு மோக்ஷம் கொடுக்கின்றார் என்பதை வெகு சிலரே அறிவர் ஒருவர் காசியில் மரணத்தைத் தழுவுவதற்கு சற்று முன்பு, அவரது காதுகளில், சிவபெருமான் ராம நாமத்தை ஓதுகிறார்.

    அந்த இராம நாமமே ஒருவருக்கு முக்தியைக் கொடுக்கின்றது (பார்க்க, பத்ம புராணம், பாதாள காண்டம், மதுரா-மஹாத்மியம்), சிவபெருமானின் தனிச் சக்தி அல்ல. இதனை சிவபெருமானே ஒப்புக் கொள்கிறார்:

    முக்தி-ப்ரதாதா ஸர்வேஷாம் விஷ்ணுர் ஏவ ந ஸம்ஷய:,
    “விஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் முக்தியளிக்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”

    சிவபெருமான் ஒரு விஷ்ணு பக்தர். வழிபாட்டு முறைகளில் சிறந்தது எது என்ற தனது மனைவியின் கேள்விக்கு சிவபெருமான் பின்வரும் பதிலை பத்ம புராணத்தில் வழங்குகிறார்:
    ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம்,

    “எல்லாவித ஆராதனைகளிலும் சிறந்தது பகவான் விஷ்ணுவை
    வழிபடுவதே.”

    மேலும், சாஸ்திரங்களில் பல்வேறு இடங்களில் சிவபெருமான் விஷ்ணுவை வழிபடுவதை நாம் காண்கிறோம். சிவபெருமான் எப்போதும் தியானத்தில் இருக்கின்றார். அவரே முழுமுதற் கடவுள் என்றால், அவர் ஏன் தியானத்தில் இருக்க வேண்டும்? இதை பெரும்பாலான மக்கள் யோசிப்பதில்லை. முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தரான சிவபெருமான் தனது எஜமானரை எண்ணி எப்போதும் தியானத்தில் இருக்கின்றார் என்பதே உண்மை. தனது இருப்பிற்கு மூல காரணமான ஸங்கர்ஷணரை (விஷ்ணுவை) தான் எப்போதும் தியானிப்பதாக சிவபெருமானே ஸ்ரீமத் பாகவதத்தில் (5.17.16) கூறியுள்ளார்.
    எல்லா பக்தர்களிலும் சிவபெருமான் மிகச்சிறந்தவர் என்பதை ஸ்ரீமத் பாகவதம் அறுதியிட்டு கூறுகின்றது:

    நிம்ன-கானாம் யதா கங்கா தேவானாம் அச்யுதோ யதா
    வைஷ்ணவானாம் யதா ஷம்பு: பூராணானாம் இதம் ததா

    “எவ்வாறு நதிகளில் கங்கை மிகச்சிறந்ததோ, கடவுள்களில் அச்யுதர் (விஷ்ணு) மிகச்சிறந்தவரோ, வைஷ்ணவர்களில் சிவபெருமான் மிகச்சிறந்தவரோ, அதுபோல புராணங்களில் இந்த ஸ்ரீமத் பாகவதம் மிகச்சிறந்ததாகும்.”

    சிவபெருமான் ஒரு மிகச்சிறந்த வைஷ்ணவர் என்பதோடு அல்லாமல், வைஷ்ணவ தர்மத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பன்னிரண்டு மஹாஜனங்களிலும் ஒருவராக உள்ளார். (ஸ்ரீமத் பாகவதம் 6.3.20)

    ReplyDelete
    Replies
    1. மகாபாரதம் அனுசாஸன பருவம் கண்டு அடங்குக

      Delete
  2. வைஷ்ணவ சம்பிரதாயங்கள் நான்கு:
    (1) இலக்ஷ்மி தேவியினால் தொடங்கப்பட்ட ஸ்ரீ சம்பிரதாயம்,
    (2) பிரம்மதேவரால் தொடங்கப்பட்ட பிரம்ம சம்பிரதாயம்,
    (3) சிவபெருமானால் தொடங்கப்பட்ட ருத்ர சம்பிரதாயம்,
    (4) பிரம்மாவின் நான்கு குமாரர்களால் தொடங்கப்பட்ட குமார சம்பிரதாயம்.
    - (பத்ம புராணம்)

    தற்போதைய உலகில் வல்லப சம்பிரதாயம் என்ற பெயரில் அறியப்படும் வைஷ்ணவ சம்பிரதாயம் ருத்ர சம்பிரதாயத்தின் ஒரு பிரிவே. மிகச்சிறந்த வைஷ்ணவர்களான பிரசேதர்கள் விஷ்ணு பக்தியை சிவபெருமானின் கருணையாலேயே பெற்றனர். அவர்களுக்கு வைஷ்ணவ தர்மத்தைக் கற்றுக் கொடுத்தவர் அவரே. சிவபெருமான் விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமானவர் என்றும், நெருங்கிய நண்பர் என்றும், அவருடன் ஏற்பட்ட சகவாசத்தினால் தாங்களும் விஷ்ணு பக்தர்களாக மாறினோம் என்றும் பிரசேதர்கள் கூறியுள்ளனர். (ஸ்ரீமத் பாகவதம் 4.30.38)

    மேலும், கீழ்காணும் பிரபலமான ஸ்லோகத்தில், தான் எப்போதும் ராம நாமத்தை உச்சரித்து அதில் இன்பம் காண்பதாக சிவபெருமான் தனது மனைவியிடம் கூறுகிறார்:

    ராம ராமேதி ராமேதி ரமே ராமே மனோரமே
    ஸஹஸ்ர-நாமபிஸ் துல்யம் ராம-நாம வரானனே

    “தேவி! நான் ராம, ராம, ராம என்று திருநாமங்களை உச்சரித்து அந்த அழகிய ஒலியினால் இன்பமடைகிறேன். இராமரின் இந்த திருநாமம் பகவான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு சமமானதாகும்.”
    - (பத்ம புராணம், உத்தர-காண்டம், பிருஹத்-விஷ்ணு-ஸஹஸ்ர-நாம-ஸ்தோத்ரம் 72.335)

    சிவபெருமானை நிந்திக்கக் கூடாது விஷ்ணுவே முழுமுதற் கடவுள், சிவபெருமான் அவருக்கு கீழிருக்கும் அவரது மிகச்சிறந்த பக்தர் இவற்றை புரிந்துகொள்வதில் கடினம் ஏதும் இருக்கக் கூடாது. இருப்பினும், சிவபெருமானை எக்காரணம் கொண்டும் தரக்குறைவாக நினைத்து இகழ்ந்து பேசுதல் கூடாது. ஜட இயற்கையுடன் தொடர்பு கொண்டுள்ள பகவானின் குண அவதாரமான அவருக்கு நாம் உரிய மரியாதையைச் செலுத்த வேண்டும்.

    பௌதிகச் செயல்களைச் செய்ய விரும்பும் விஷ்ணு, அதனை சிவபெருமானின் மூலமாகச் செய்ம்றார். விஷ்ணுவின் செயல் வடிவமாகத் திகழ்வதால், சிவபெருமானுக்கு நாம் உரிய மரியாதையைச் செலுத்துதல் அவசியம். அவர் ஒரே சமயத்தில் விஷ்ணுவுடன் ஒன்றாகவும் வேறுபட்டும் உள்ளார்.

    புகையினால் சூழப்பட்ட நெருப்பினால் முழு வெளிச்சத்தைக் கொடுக்க முடியாது; அதுபோல, அறியாமையுடன் தொடர்பு கொண்டுள்ள சிவபெருமானின் சக்தியானது விஷ்ணுவின் சக்தியுடன் ஒப்பிட இயலாததாகும். ஒரு எறும்புக்குகூட மரியாதை கொடுக்கும் வைஷ்ணவர்கள் நிச்சயம் சிவபெருமானுக்கு மரியாதை கொடுக்க தவறுவதில்லை.

    ஆரம்ப நிலை பக்தர்கள் தங்களுக்கு பிடித்த தெய்வத்தை மட்டும் வணங்கி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. பட்டை போட்டுக் கொண்ட அனைவரும் பக்குவமான சைவர்களும் அல்ல, நாமத்தை போட்டுக் கொண்ட அனைவரும் பக்குவமான வைஷ்ணவர்களும் அல்ல.
    கூர்ம புராணத்தில் பகவான் விஷ்ணு கூறுவது யாதெனில்,
    “களங்கமற்ற அன்புடன் என்னை வழிபட்டு, அதே சமயத்தில் சிவபெருமானை நிந்திப்பவர்கள் நரகத்திற்குச் செல்வர்.”

    வைஷ்ணவர்களில் சிலர் சிவபெருமானின் நிலையை உணராது அவரை நிந்திப்பதையும், சைவர்கள் விஷ்ணுவின் உயரிய தன்மையை அறியாது அவரை நிந்திப்பதையும் அன்றாடம் காண்ம்றோம். இவையாவும் பக்குவமற்ற அறிவினால் எழுபவை. மற்றுமொரு பக்குவமற்ற நிலையின் வெளிப்பாடே, ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு என்பது. அறியாதவன் வாயில் மண்ணா?

    சிவபெருமான் சாதாரண ஜீவனுமல்ல, விஷ்ணுவிற்கு சமமானவரும் அல்ல அவர் ஜீவ தத்துவத்திற்கும் விஷ்ணு தத்துவத்திற்கும் இடைப்பட்டவர். ஹரியையும் சிவனையும் ஒன்றாகக் காண்பதும், வெவ்வேறு துருவங்களாக காண்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    ஹரி, சிவன் என்று இரு பெயர்கள் இருக்கின்றன; அவர்கள் இருவரும் ஒருவராக இருந்தால் இரு வேறு பெயர்களை ஏன் சாஸ்திரங்கள் உபயோம்த்திருக்க வேண்டும்? ஹரி, விஷ்ணு போன்ற பெயர்கள் பகவானின் இதர அவதாரங்களான மத்ஸர், கூர்மர், வராஹர், நரசிம்மர் போன்றவர்களுக்கும் உபயோகிக்கப்படும்ன்றன, ஆனால் சிவபெருமானுக்கு உபயோகிக்கப்படுவது இல்லையே. இருவரும் ஒருவரே என்றால் ஏன் பெயர்களை மாற்றி உபயோகிப்பதில்லை? பெயர் மட்டுமின்றி, ஹரி, சிவன் ஆகிய இருவரின் குணங்கள், ரூபங்கள், செயல்கள், பக்தர்கள், வாழுமிடம் என எல்லாம் வேறுபட்டு இருக்கும்போது, அவர்கள் வேறுபட்டவர்கள் என்பதை உணர்வது எளிதானதாகும்.

    ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு என்று சொல்வதில் உள்ள பிழைகள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்பும்றோம். சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் அறிதல் அவ்வளவு எளிதல்ல என்றபோதிலும், அடிப்படை அறிவினை இங்கு வழங்கியுள்ளோம். இதற்கு மேலும், யாரேனும், ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு என்று கூறினால், அவ்வாறு சொல்பவரின் வாயில்தான் மண்ணை வைக்க வேண்டும்.
    ஹரியும் சிவனும் ஒன்று, சொல்பவன் வாயில் மண்ணு.

    ReplyDelete
    Replies
    1. சிவ ஏகோத்யேய என்று அதருவசிகை கூறியுமா இந்த மயக்கம் உமக்கு?
      சிவனே தியானிக்கத்தக்கவன் என்று சொல்லியும் உமக்கு மயக்கம் வருவது கலிதோஷமே என்க

      Delete
  3. விஷத்தை அருந்திய சிவபெருமான்

    பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தைக் குடித்து உலகைக் காத்தவர் சிவபெருமான். அதனால் அவர் விஷ்ணுவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று சிலர் வாதிடலாம். ஆனால், அச்யுத, அனந்த, கோவிந்த என்னும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துவிட்டு, அந்த விஷத்தை அவர் அருந்தியதாகவும், அந்த திருநாமங்களே விஷத்தின் பாதிப்பிலிருந்து அவரைக் காப்பாற்றியதாகவும் ஸ்ம்ருதி சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. விஷத்தைக் குடிப்பதற்கு முன்பாக கருடனின் மீதமர்ந்த விஷ்ணுவை சிவபெருமான் தியானித்ததாக பிரம்மாண்ட புராணத்திலும் கருட புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. விஷ்ணுவின் கருணையினால் சிவபெருமான் அத்தகு அதிசய செயல்களைச் செய்ய முடிந்தது என்பதை இதிலிருந்து உணரலாம்.

    விஷத்திலிருந்து உலகைக் காக்கும்படி சிவபெருமானிடம் விஷ்ணுவே வேண்டியது ஏன் என்ற கேள்வியும் எழலாம். விஷ்ணுவினால் நிச்சயம் அச்செயலைச் செய்திருக்க முடியும். ஆனால் தனது பக்தர்களுக்கு புகழை வழங்க விரும்பும் பகவான், அவ்வப்போது இதுபோன்று செயல்படுவதைக் காணலாம். குருக்ஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனையும், இராவணனுடனான யுத்தத்தில் ஆஞ்சநேயரையும் பகவான் உபயோகிக்கவில்லையா! அதுபோலத்தான்

    ReplyDelete
  4. சிவபெருமானின் பாதத்தைப் பார்க்க இயலாத விஷ்ணு:

    சிவபெருமானின் பாதத்தைக் காண்பதற்காக விஷ்ணு பன்றி ரூபத்தையும், அவரது தலையைக் காண்பதற்காக பிரம்மதேவர் அன்ன ரூபத்தையும் ஏற்று இறுதியில் தோல்வி கண்டதாகவும், அதனால் சிவனே முழுமுதற் கடவுள் என்றும் சிலர் கூறுவதைக் கேட்கிறோம். இதனை எவ்வாறு அணுகுவது?
    புராணங்களில் மூன்று வகையுண்டு: ஸாத்வீக புராணங்கள், ராஜஸீக புராணங்கள், மற்றும் தாமஸீக புராணங்கள்.
    புராணங்களுக்கு மத்தியில் ஏதேனும் அபிப்பிராய பேதங்கள் இருப்பின், ஸாத்வீக புராணங்களின் கருத்தினை ஏற்க வேண்டும் என்று மனு தனது ஸ்மிருதி சாஸ்திரத்தில் கூறுகிறார். அதன்படி, எல்லா புராணங்களிலும் விஷ்ணுவின் உயர்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ள சமயத்தில், மேற்குறிப்பிட்ட கதையினை நாம் தாமஸீக புராணமான லிங்க புராணத்தில் காண்கிறோம். விஷ்ணுவே பரம்பொருள் என்னும் வேத ஞானத்தின் இறுதி முடிவிற்கும் ஸாத்வீக புராணங்களின் அதே முடிவிற்கும் இக்கதை முரண்பட்டதாக இருப்பதால், இது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

    இதனை ஸ்கந்த புராணத்தில் சிவபெருமானே முருகனிடம் கூறுகிறார்.
    எனவே, மேற்குறிப்பிட்ட கதையானது அறியாமையினால் கவரப்பட்டு கிருஷ்ணரின் உயர்தன்மையை அறிய இயலாமல் இருக்கும் சிவபெருமானது பக்தர்களிடம் நம்பிக்கையை அதிகரிப்பதற்கானதாகும். ஏதேனும் ஒரு தேவரின் மீது வைக்கப்படும் நம்பிக்கை அவர்களை படிப்படியாக உயர்த்தும் என்பதால், அந்த நம்பிக்கையை கிருஷ்ணரே பலப்படுத்துகிறார் என்பதை நாம் கீதையில் (7.21) காண்கிறோம்.

    ReplyDelete
  5. இராமர் சிவனை வழிபட்டது ஏன்?

    இராமேஸ்வரத்தில் இராமர் ஏன் சிவனை வழிபட்டார் என்று தனது பக்தர்களின் மீது திருப்தியுற்று, அவர்களின் மீதான அன்பின் காரணத்தினால், சில சமயங்களில் பகவான் தனது பக்தர்களை வழிபடுவது உண்டு. அதை வைத்து பகவானை எடை போடக் கூடாது. விஸ்வாமித்ரர், அகஸ்தியர் உட்பட பல்வேறு ரிஷிகளையும் இராமர் வழிபட்டுள்ளாரே! சமுத்திர தேவனையும் வழிபட்டாரே! கிருஷ்ண அவதாரத்தில் நாரதரையும் குசேலரையும் வழிபட்டுள்ளாரே! பகவான் அவர்களை வழிபட்டதால், அவர்கள் பகவானாகி விட்டார்களா? அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியதால் அர்ஜுனன் பகவானாகி விட்டாரா?

    ReplyDelete
    Replies
    1. http://aggraharam.blogspot.in/2013/04/blog-post.html

      Delete
  6. “தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
    சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்- சூழும்
    திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
    இரண்டுருவு மொன்றாய் இசைந்து”

    (இந்த பாசுரம் நம்மாழ்வாருடையது என தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் அது தவறு பேயாழ்வாருடையது மேலும் தாங்கள் படித்த நூல் கதிர்வேற்பிள்ளை போன்ற சிறந்த தமிழ் பண்டிதரால் எழுதப்பட்டதால் அப்படியேன் பதிவு செய்துவிட்டீர்கள் . மேலும் எந்த பதிவானாலும் எந்த நூல் என்பதுடன் எந்த ஸ்லோகம் பாடல் அத்யாயம் என்பதையெல்லாம் குறித்தால்தான் அதை ஆராய்சி மனப்பான்மையுடன் தேடுபவர்களுக்கு உதவும் இல்லையென்றால் நேர வியரயம் இனியாவது இந்தக் குறையை திருதிக்கொள்ளவும் மேலும் நீங்கள் குறிப்பிடும் உபநிஷத் எந்த வேதத்தில் எந்த பாகத்தில் வந்துள்ளது என குறிப்பிட்டால் உதவும் , முதலில் நீங்கள் படிக்கும் நூலில் சூட்டியுள்ள ஆதாரம் அந்த ஆதார நூலில் உள்ளதா என நீங்கள் உறுதிப்படுத்திக்கொண்டு பதிவுசெய்வது நல்லது )



    பேயாழ்வாரின் மூன்றாந் திருவந்தாதியில் 63 வது பாசுரம்.

    ReplyDelete
  7. http://aggraharam.blogspot.in/2017/04/blog-post.html ஹரியும் சிவனும் ஒன்று என ஆழ்வார் பாடியுள்ளாரா?

    ReplyDelete
  8. http://aggraharam.blogspot.in/2017/05/blog-post.html விபூதி அணிந்திருந்தாரா திருமால் ?

    ReplyDelete
  9. தாங்கள் குறிபிட்டுள்ள பாசுரங்களின் எண் சரியாக இருக்கும் இடத்தில் கூட பாசுர பகுதி தவறாக உள்ளது உதாரணமாக தணியும் பொழுதில்லை என்னும் பாசுரம் ஆறாம் திருவாய்மொழி என குறித்துள்ளீர்கள் தவறு ஆறாம் திருமொழி என்று இருக்கவேண்டும் திருவாய்மொழி நம்மாழ்வாருடையது திருமொழி திருமங்கையாழாருடையது ஆதாரம் என கூறி அது சேதாரமாகிவிட்டதே?!

    ReplyDelete
  10. சென்ற coment இல் typing சேதலில் சில வார்த்தைகள் / வரிகள் தவறாக உள்ளது அதை இப்படி திருத்தி வாசிக்கவும் " குறிபிட்டுள்ள பாசுரங்களின் எண் மற்றும் எந்த ஆழ்வாருடையது என்பதை உறுதிப்படுத்தினால் உதவியாக இருக்கும்" மேலும் பாசுரத்தின் முழுவரிகளையும் தராவிட்டாலும் முதல் மூன்று வார்த்தைகளை மட்டுமாவது குறிபிட்டு இப்படி துவங்கும் இந்த ஆழ்வாரின் இந்த எண் கொண்ட பாசுரம் என குறிப்பிட்டால் நேரம் மிச்சமாகும் . திருமொழி என்று பெரியாழ்வாரும் பெருமாள் திருமொழி என்று குலசேகர் ஆழ்வாரும் , பெரியதிருமொழி என்று திருமங்கையாழ்வாரும் பாடியுள்ளதால் வித்தியாசம் அறியவேண்டியதில் நேரம் அதிகமாகும் என்பதால் சொல்கிறேன் தாங்கள் பதிவுசெய்ததை வைத்து தாழ்ஸடையும் நம்மாழ்வாரிடம் தேடினால் அது பேயாழ்வாரிடம் கிடைக்கிறது ஆதாரம் என கூறுவது சேதாரமாகிவிட்டதே என யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதால் ...

    ReplyDelete

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்