சிவபாத சேகரன்
January 08, 2017
0
|| சிவாத்பரதரம் நாஸ்தி ||
சைவரிடையே போலிக் கூட்டங்கள் பல உண்டு.அதில் ஒன்று,மது மாமிசம் புசிப்பது,பரஸ்திரி கமனம் புரிவது,சூதாடுவது என்று அனைத்து அநாச்சாரங்களை செய்வார்கள்.ஆனால் பகலில்,விபூதி ருத்திராட்சம் அணிந்துக்கொண்டு,சிவாலயம் செல்வது,திருமுறை ஓதுவது என்று இருப்பார்கள்.இவர்களின் நடத்தையீனத்தை எடுத்துக்கூறி அறிவுரை கூறினால் நாயன்மார்களும் இது போன்ற அநாச்சாரங்களை செய்தாலும் இறைவர் அருளினார்,அதனால் பக்தி ஒன்றே போதும் என்கின்றனர்.இன்னும் சிலர்,வேதம்,சிவாகமம்,சிவதீட்சை,சைவ சாஸ்திரம் எல்லாம் வேண்டாம்,பக்தி ஒன்றே போதும் என்கின்றனர்.இந்த கீழ்களுக்கு உண்மையில் சிவபக்தியும் இல்லை,குருபக்தியும் இல்லை.தாந்தோன்றித்தனமாக செயல்பட்டுக்கொண்டு அதற்கு குதர்க்கமாக நாயன்மார் சரிதையை உதாரணம் காட்டுவார்கள்.அதனால் இந்த துர்மதிகளின் ஒழுக்கக்கேட்டை நம்பி மக்கள் மயங்காவண்ணம் விளக்கம் கொடுக்கவே இப்பதிவாம்.
நாயன்மார்களில்,கண்ணப்பர் பன்றியிறைச்சியை நிவேதனமாக அளிக்க,சாக்கியர் கல்லால் சிவலிங்கத்தை அடிக்க,மூர்க்கர் சூதாட்டம் செய்ய,இவர்களுக்கு எல்லாம் சிவனருளியது எந்தவகையில் அறம் என்ற கேள்வி எழலாம். புண்ணியங்கள் இருவகை உண்டு.ஒன்று பசு புண்யம்,மற்றொன்று பதி புண்யம்.பசு புண்யம் என்பது சாதாராண தர்மத்தை பின்பற்றினால் கிடைப்பது.அதாவது மது அருந்தாமல் இருப்பது,மிருகவதை செய்து அதன் மாமிசத்தை புசிக்காமல் இருப்பது,பிறருக்கு இன்னல் செய்யாமல் இருப்பது போன்றதாம்.பதி புண்ணியம் என்பது சிவதர்மத்தை நிலை நாட்ட செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் புண்ணியம். சைவப் பகைவர்களை வீழ்த்துதல், சிவதர்ம பிரச்சாரம் செய்தல்,சிவாலய கைங்கர்யம்,சிவனடியாரை காத்தல்,பசுக்காத்தல் போன்றவையாம்.
பதி புண்ணியத்தைப் பெற பசுப்புண்ணியத்தை சில சமயம் மீறலாம்.உதாரணத்திற்கு,ஒருவருக்கு இன்னல் செய்யாமல் இருந்தால் பசு புண்ணியம்.ஆனால்,அந்த நபர் சிவனடியார்களை துன்புறுத்துவது,சிவதர்மத்தை அழிக்க முயற்சி எடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டால்,அவரை கொலை செய்யலாம்.பதி தர்மத்தை நிலை நாட்ட பொது தர்மத்தை மீறலாம் இங்கு.கொலை என்பது பாவக்காரியமாக இருப்பினும், சிவதர்மத்தை நிலை நாட்டவும், பிறர் எதிர்காலத்தில் இதுபோன்ற சைவ விரோத செயலில் ஈடுபட்டு நரக தண்டனை பெறாமல் இருக்கவும்,கொலைப் புரியலாம்.
நாயன்மார்களில் பலர் அப்படிப்பட்டவர்களே. மூர்க்க நாயனார் சூதாடினார்.பொது தர்மத்தின்படி அது தவறு.அவர் தன் சுயநலத்துக்கு பொருளீட்ட அப்படி செய்தால் அது தவறேயாம்.ஆனால் அவரோ ஓர் ஏழை.சிவனடியார்களுக்கு மாஹேஸ்வர பூஜை செய்யவும்,சிவாலய கைங்கர்யம் செய்யவும் பணம் இல்லாததால்,சூதாடினார்.சூதாடி கிடைத்தப் பணத்தை சிவதர்ம விஷயங்களுக்கே செலவு செய்தார்.அதனால்,சிவதர்மத்தைக் காக்க பொது தர்மத்தை அவர் மீறினார்.அதனால் இறைவன் அருளினார் மூர்க்க நாயனாருக்கு.
சிலர்,கண்ணப்பரை வம்புக்கிழுத்து,அவர் ஒரு சாதாரண வேடர்,வேதம் சிவாகமம் அறியாதவர்,தீட்சை பெறாதவர்,இருப்பினும் அவரின் பக்திக்கு தான் இறைவன் அருளினார்,அதனால் தீட்சை,சாஸ்திரம் கற்றல் போன்றவை வேண்டாம் என்கின்றனர் சில மந்தமதிகள்.இவர்கள் சித்தாந்த சாஸ்திரம் படிக்காததால் இப்படி மூடர்களாய் உள்ளனர்.நாயன்மார்கள் சாமு சித்தர் என்று வழங்கப்படுகிறார்கள்.அதாவது சென்றப் பிறவிகளிலேயே சிவதீட்சைகளைப் பெற்று,சிவாகமத்தில் கூறப்பட்ட சரியை,கிரியை,யோகத்தை முடித்து,பிறகு அதே ஞானத்தோடு பிறந்து சிவதர்மம் நிலை நாட்டினர். இதனை தமது சிவஞானபோத உரையான "சிவஞானபோத வசனலங்கார தீபம்" எனும் நூலில்,காசிவாசி சாம்பவஸ்ரீ செந்தில்நாத ஐயர் விளக்குகிறார்.மேலும், சிவதீட்சை இல்லாமல் மோட்சம் இல்லை என்பதே சைவத்தின் கருத்து.இதனை சிவாகமங்கள் மூலமும்,அவற்றின் வழி நூல்களான சைவபூஷணம் போன்ற சைவ சாஸ்திரங்களிலும் காணலாம்.ஆகையால்,நாயன்மார்களும் சென்றப் பிறவிகளில் சிவதீட்சைப் பெற்று,வேத சிவாகமங்களைக் கற்று,சிவபூசையாதிகளைச் செய்தே உள்ளனர்.தீட்சை,சிவாகம கற்றல்,சிவபூசை,சிவபுண்ணியம் செய்தல்,இவை எல்லாம் இல்லாமல் இறையருள் கிட்டாது,முக்தியும் கிட்டாது.