ஷைத்தான் என்பது தீய எண்ணங்களின் குறியீடா அல்லது ஒரு தனி நபரா ? - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Sunday, 8 January 2017

ஷைத்தான் என்பது தீய எண்ணங்களின் குறியீடா அல்லது ஒரு தனி நபரா ?

|| சிவாத்பரதரம் நாஸ்தி ||

ஷைத்தான் என்பது ஒரு குறியீடு என்றும், தீய எண்ணங்களுக்கு உவமையாக கூறப்படுகிறது என்றும்,அது ஒரு தனி நபரைக் குறிக்கவில்லை என்றும் முஸ்லிம்களில் சிலர் கூறுகின்றனர்.இது ஏனெனில்,ஹதீஸில் பரவலாகக் கிடக்கும் புளுகு மூட்டைகளையும் மூட நம்பிக்கைகளையும் முஸ்லிம் அல்லாதோர் இன்று அறியத்தொடங்கியதாலும்,ஹதீஸ் பக்கமே போகாத,தெரியாத  முஸ்லிம்கள் பலர் ஹதீஸ்களின் முட்டாள்தனத்தை அறிந்துக்கொண்டு,எங்கே அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவர் என்பதாலும் சில முஸ்லிம்கள் இப்படி ஹதீஸ்களுக்கு புதிய வியாக்யானம் செய்து வருகின்றனர்.

உண்மையிலேயே ஷைத்தான் என்பது ஒரு தனி நபரைத் தான் குறிக்கும்.இதற்கு ஆதாரம் ஹதீஸிலேயே உள்ளது.

Narrated Abu Huraira:
The Prophet once offered the prayer and said, "Satan came in front of me and tried to interrupt my prayer, but Allah gave me an upper hand on him and I choked him. No doubt, I thought of tying him to one of the pillars of the mosque till you get up in the morning and see him. Then I remembered the statement of Prophet Solomon, 'My Lord ! Bestow on me a kingdom such as shall not belong to any other after me.' Then Allah made him (Satan) return with his head down (humiliated)."  [ Sahih Bukhari,Volume 2,Book 2,Hadith Number 301 ]


இதன் மொழிபெயர்ப்பு :

தொழுகை நடத்தும்போது இவ்வாறு   முஹம்மது அறிவித்ததாக அபு ஹுரைரா அறிவித்தார் : "ஷைத்தான் என் முன் தோன்றி என் தொழுகையை கலைக்க முயற்சித்தான். அல்லாஹ் என் கை ஓங்கும்படிச் செய்ய,அவன் கழுத்தை நெறித்தேன்.காலையில் நீங்கள் அவனை காணுமாறு, அவனை மசூதியின் ஒரு தூணில் கட்டிப்போட எண்ணினேன்.ஆனால் நபி சுலைமானின் ,"ஆண்டவா ! எனக்குப் பிறகு வேறொருவர் கைக்கு போகாத ராஜ்யத்தை எனக்கு அருள்வாயாக !" என்று ஒலிக்கும் வாசகத்தை எண்ணிப் பார்த்தேன்.(அவமானத்தால்) குனிந்தத் தலையுடன் ஷைத்தான் திரும்பும்படி அல்லாஹ் செய்வித்தான்." [ சஹிஹ் புக்ஹாரி, தொகுதி 2,புத்தகம் 2 , எண் 301 ]


ஷைத்தான் என்றால் தீய எண்ணம் என்று சாக்குப் போக்குக் கூறிய அதே முஸ்லிம்கள்,இதற்கு ஒரு சமாதானம் கூறுவார்கள்.அதாவது, முஹம்மது தொழுகை நடத்துங்காலம்,ஷைத்தான் அவர் தொழுகையை கலைக்க முயற்சித்தம் அந்த ஷைத்தானை முஹம்மது வீழ்த்தியற்கும் விளக்கம் யாதெனில் தொழுகையிலிந்து அவரை விலக்க தீய எண்ணங்கள் தோன்றியதற்கும் அல்லாஹ்வின் உதவியால் அத்தீய எண்ணத்தை அவர் வெற்றிக்கண்டதற்கும் உவமை என்பதாகும்..

மேலோட்டமாகப் பார்த்தால் இது சரிபோல் தோன்றும்.ஆனால் உற்று நோக்கினள் அதன் பொறுத்தமில்லா தன்மை புரியும்.இந்த ஹதீஸில் தெளிவாக கூறப்பட்டுள்ளது,ஷத்தானை வீழ்த்தியதும்,அவனை தூணில் கட்ட முஹம்மது முயற்சித்தார் என்று.தீய எண்ணங்களுக்கு உருவம் இல்லாதபோது,அவற்றை நாம் எப்படி கைகளால் பிடிக்க முடியும்,கயிற்றால் கட்ட முடியும் ? மேலும்,ஷைத்தானை பிறர் பார்க்கும்படி தூணில் கட்ட தாம் நினைத்ததாகவும் முஹம்மது கூறியிருக்கிறார்.உருவமில்லா தீய எண்ணத்தை பிறர் எப்படி பார்க்க முடியும் ?
மேலும், முஹம்மது அப்பழுக்கற்றவர்,தவறே செய்யாதவர் (மாஸும்/ma'sum) என்பது தான் இஸ்லாத்தின் கொள்கை.ஆக, முஹம்மதுக்கு தொழுகையின்போது தீய எண்ணம் ஏற்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே கேள்வி கேட்பதாகும்.

ஆக,ஷைத்தான் என்பது தீய எண்ணங்களுக்கு உவமை அல்ல,மாறாக அது ஒரு தனி நபர் தான் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்