காஷ்மீர் சைவ சிம்மம் லலிதாதித்ய முக்தபீடர் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Thursday, 28 July 2016

காஷ்மீர் சைவ சிம்மம் லலிதாதித்ய முக்தபீடர்

பாரத சரித்திரத்தில்,மிகப் பெரும் பரப்பளவை கொண்ட சாம்ராஜ்ஜியம் கார்கோட்ட சாம்ராஜ்ஜியம்.முகாலய அரசை விட இருமடங்கு பெரியதாம்.மௌர்ய பேரரசைவிடவும் பெரியதாம்.இந்த கார்கோட்ட  ராஜியத்தின் அதி உன்னதமான சக்ரவர்த்தி லலிதாத்ய முக்தபீடர்.இவர் ஒர் சைவ அரசர்.இவரின் தாயான நரேந்திர பிரபா,நரேந்திரேஸ்வரர் ஆலயத்தை கட்டுவித்தார்.லலிதாதித்யர் ஜ்யேஷ்ட்ட ருத்ரர் ஆலயத்தை கட்டுவித்து,அதன் பராமரிப்புக்கு பல கிராமங்களையும் மானியமாக கொடுத்தார்.பூதேசர் ஆலயத்திற்கும் பெருமான்யங்களை கொடுத்தார்.அவர் சற்பாதையில் அவரது மந்திரியான மித்திரசர்மன்,பிறகு அவரது குருவான ஆச்சாரியர் பப்பட்டர் போன்றோர் பல சிவாலயங்களை எழுப்பினர்.


7ஆம் நூற்றாண்டில்,பாரத கண்டத்தின் மீது துருஷ்க (முகமதிய) மிலேச்சர்கள்,தங்களின் துருஷ்க மிலேச்ச மதத்தை பரப்ப,பல முணைகளில் படையெடுத்தனர்.காஷ்மீரில், அல்-முக்மினின் (பாரத சரித்திராசிரியர்கள் இவனை மும்முனி என்று அழைக்கின்றனர்) காஷ்மீர் மீது பெரும்படையுடன் வந்தான்.அவனை மூன்று முறை போர்களத்தில் தோற்கடித்தார் லலிதாதித்ய முக்தபீடர்.தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட துருஷ்க படையினரை,அவர்களின் தோல்வியின் சின்னமாக,அவர்களது தாடிகள் பாதி வெட்டப்பட்டு,அவமானப்படுத்தப்பட்டனர் என்று பரிஷ்டா என்ற பாரசிக சரித்திராசிரியர் தனது " தரீக்-இ-பிரிஷ்டா" என்ற நூலில்  கூறுகிறார்.17ஆம் நூற்றாண்டு சரித்திராசிரியரான ஹைதர் மலீக் சதுரா,தனது நூலில் குறிப்பிடுகிறார் :

 " பாரதத்தை முழுமையாக தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததும்,கபுல்(ஆப்கானிஸ்தான்) வழியாக துர்கிஸ்தான் மீது படையெடுத்தார்.அப்பொழுது புக்காராவின் (உஸ்பெகிஸ்தான்) ஆட்சியாளன் முக்மின் நான்கு முறை அவரை எதிர்த்து போரிட்டான்.ஆனால்,அவரை வீழ்த்த தனக்கு போதிய பலம் இல்லா சமயம் நெருங்கியதும்,தனது உயிருக்கு பயந்து லலிதாத்யரை சந்தித்து,அவருக்கு வரியும் கப்பமும் தான் செலுத்திவிடுவதாக ஒப்புக்கொண்டான்.இதன் காரணமாக,மவரா-அல்-நர்(மத்திய ஆசியாவின் ஒரு பகுதி) மற்றும் துர்கெஸ்தானின் உள்ள ஆட்சியாளர்கள் அனைவரும்,லலிதாதியருக்கு அடிபணிந்தனர்."

வட பாகிஸ்தான்,வட கிழக்கு ஆப்கானிஸ்தான்,காஷ்மீர்,துர்கேஸ்தான்,உஸ்பெகிஸ்தான்,தஜிகிஸ்தான்,தென் கிரிகிஸ்தான் மற்றும் தென் மேற்கு கஜக்ஸ்தான் போன்று தென் மற்றும் மத்திய ஆசியாவின் பல பகுதிகளை கைப்பற்றி," பாரதத்தின் அலெக்சாண்டர்" என்று வர்ணிக்கப்படுகிறார் லலிதாதித்ய முக்தபீடர்.

நாம் இழந்த இந்தியா,ஆப்கானிஸ்தான்,நேபாளம்,பாகிஸ்தான்,வங்காளதேசம்,இலங்கை,தெற்கிழக்காசி,காஷ்மீர் போன்ற பகுதிகளை மீட்க மீண்டும் ஒரு லலிதாதித்ய முக்தபீடர் உருவாகுவார்.

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்