6ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மிஹிரகுலர்(Mihirakula) என்பவர் ஒரு ஹூன(Hun) இனத்து சைவ மன்னர்.குப்த சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்து,பாரதத்தின் பல பகுதிகளை கைப்பற்றினார்.இவரது தந்தை,தோரமண்ணர்(Toramanna) ,பாரதத்தீன் பஞ்சாப் தேசத்தில் ஹூன சாம்ராஜ்யத்தை உருவாக்கி,குப்தர்களுடன் போரிட்டு வந்தார். குப்த மன்னனுடனான போரில்,தோற்கடிப்பட்டார்.அவருக்குப் பின்பு,மிஹிரகுலர் ஆட்சிக்கு வந்தார்.வெற்றிக்கு மேல் வெற்றி அவரிடம் வந்து குவிந்தன.
பௌத்தர்கள்,மன்னர்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு,சைவ சமயத்துக்கு எதிராக பெருந்தீங்கு செய்தனர்.ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில்,பௌத்தத்தின் சகோதர் சமயமான ஜைனமும்,தமிழ் நாட்டில் ஆதிக்கம் பெற்று தொடர்ந்து நீண்ட காலத்துக்கு சைவ சமயத்தை எதிர்த்து,சைவர்களை நசுக்கி வந்தது.இன்று திராவிட கழகத்தவர் சைவ சமய நிந்தை செய்வதை அன்றே செய்தவர்கள் பௌத்த ஜைனர்கள்.வேதத்தை இறை நூல் இல்லை என்றும்,சைவ அனுஷ்டானங்களை பழிப்பதுமாய் திரிந்தனர் பௌத்த ஜைனர்கள்.இதற்கு பழிக்கு பழியாகவே சில சைவ மன்னர்கள் சினமுற்று பௌத்த ஜைனத்தை எதிர்த்தனர்.அவர்களில் மிஹிரகுலரும் ஒருவர்.
மிஹிரகுலர் 1600 பௌத்த விஹாரங்களை,ஸ்தூபங்களை மற்றும் ஆசிரமங்களை தரைமட்டமாக்கினார் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப்,காஷ்மீர் காந்தாரம் போன்ற பகுதிகளிலிருந்து பௌத்த சமயத்தை அழிக்க முற்பட்டார் மிஹிரகுலர். காந்தாரத்திலிருந்து (இன்றைய ஆப்கானிஸ்தான்) பல்லாயிரம் பிராமணர்களை அழைத்து,காஷ்மீரில் குடுயமர்த்தினார் மிஹிரகுலர்.
மிஹிரிகுலர் ஒரு சிறந்த சிவபக்தர் என்பதால்,காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் மிஹிரேஸ்வரர் ஆலயத்தை கட்டினார்.மேலும்,மிஹிரிகுலரின் நாணயங்களின் பின்னால் ரிஷபச் சின்னமும் திரிசூலமும்,"ஜயது வ்ருஷப" (ரிஷபமே வெல்லும்) ,"ஜயது வ்ருஷத்வஜ" என்று பொறிக்கப்பட்டிருக்கும்.
பௌத்த அபிமானியான யசோதர்மன் மிஹிரகுலரை போரில் தோற்கடித்து ,கைதியாக தன் முன் நிறுத்தினான்.இதை யசோதவர்மனின் ஒரு கல்வெட்டு இவ்வாறு குறிப்பிடுகிறது :
"ஸ்தானுவைத் (சிவபிரான்) தவிர,வேறு எவர் முன்பும் தலை வணங்காத மிஹிரகுலர்,இன்று யசோதவர்மன் முன் அவர் தலை சாய்கிறது" .

No comments:
Post a Comment