சிவமயம்
இஸ்லாம் கிருத்துவம் போன்ற புற சமயங்கள்,தங்கள் சமயத்தில் தான் ஒற்றுமை உண்டு என்றும் சைவத்தில் அதில்லை என்றும் கூறிக்கொண்டு வருகின்றனர்.ஆனால் இது எவ்வளவு ஒரு பொய் !!! இவர்கள் சமயங்களில் எவ்வளவு பெரிய பிரிவினைவாதம் உண்டு என்று சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் புரியும்.. அந்த பிரிவினை வாதத்தால் ஓடிய ரத்த சரித்திரத்தையும் மூடி மறைக்கின்றனர்….
உதாரணத்திற்கு,இஸ்லாத்தில் ஷியா-சுன்னிப் போர்,1320 வருஷத்துக்கும் மேலாக நடந்து வருகிறது….இஸ்லாம் தோன்றி வெறும் 1400 வருஷங்கள் தான் ஆகின்றன…அதில்,1320 வருஷங்களை,சுன்னி-ஷியா போரில் செலவழித்திருக்கின்றனர்.இன்றும் இந்தப் போர் நடக்கிறது..இவர்களா,ஒற்றுமையைப் பற்றி பேச தகுதியுடையவர்கள் ??
கிருத்துவத்தில்,ரோமன் கத்தொலிக்க பிரிவுக்கும் புரோடெஸ்டன் பிரிவுக்கும் பல போர்கள் நடந்திருக்கின்றன….ஐரோப்பாவில்,ஒரு மன்னன் ரோமன் கத்தொலிக்கன் என்றால்,புரோடெஸ்டன் மக்களை கொன்று குவிப்பான்…அவ்வாறே,புரோடெஸ்டன் மன்னன்,ரோமன் கத்தொலிக்கர்களை கொன்று குவிப்பான்…இன்றும்,இந்த இரண்டு கிருத்துவப் பிரிவும் ஒற்றுமையாக இல்லை…இப்படிப்பட்ட இவர்களா நம்மைப் பார்த்து,ஒற்றுமை இல்லாதவர் என்று சொல்ல தகுதியுடையவர் ???
சைவத்தில் பல பிரிவுகள் உண்டு…ஆனால்,இஸ்லாம் கிருத்துவம் போன்று,தமக்குள் போர் புரிந்ததாக வரலாறே கிடையாது…உண்மையான,ஒற்றுமை,சைவத்தில் மட்டுமே உண்டு….எல்லா சைவப் பிரிவு அடியவரும் ஓர் குடும்பம் போல்…இந்த ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு பிரமாணத்தைப் பார்ப்போம்…
பரிந்து பாசுபதரையும் பண்புறஇதன் பொருள் “பாசுபதத் துறவிக்கு விருப்பத்தோடு அமுது உண்ணச் செய்தவர்களும்,மாவிரதிகளுக்கு அன்புடன் உணவளித்து உண்ணும்படி செய்தவர்களும் சிவ உலகைப் பொருந்தி வாழ்வார் ” ….
வருந்து வித்தவர் தாமு மரன்புரி
பொருந்தி வாழ்வர் புரிவுடன் பிச்சையை
அருந்த மாவிரதர்க் களித்தாருமே (சிவதருமோத்தரம் 1161)
சிவ உலகு என்பது சாலோகத்தைக் குறிக்கும்…பாசுபதர் மற்றும் மாவிரதிகள் என்போர்,சைவப் பிரிவுகளில் ஒரு வகையினர் …..பாசுபதமும் மாவிரதமும்,அகப் புற சமயத்தை சார்ந்தவர்கள்…சைவ சித்தாந்தப் பிரிவை சார்ந்தவர்,இந்த இருவரையும் நிந்தை செய்யக் கூடாடு,மாறாக இவர்களுக்கு உணவளித்தால்,சாலோகம் அடையலாம்…மாவிரதிகளும் பாசுபதத் துறவிகளும் சிவனடியார்களே…ஒரு சைவ சித்தாந்தி,அல்லது வீரசைவனோ, ஒரு மாவிரதியை கொன்றதாக சரித்திரம் உண்டா ?? கிடையவே கிடையாது…
பரமசிவ மயம் உணர்ந்த பாசுபதர்இதன் பொருள் “மேலான சிவபெருமானுடைய தன்மையை உணர்ந்த பாசுபதர்,சைவர்,காபாலர்,மாவிரதர் ,உண்மையான தவத்தினையுடையோ ஆகியோர் முன் சொன்ன வடிவத்தைப் பெற்று ,அதே கிழக்குத் திசை வாசல் சன்னிதியிலிருந்து பணிசெய்வர்; தென் திசை வாசல் சந்நிதியில் விஷ்ணுவின் தொப்புழாகிய தாமரையில் தோன்றிய பிரமனும் உண்மையான சரஸ்வதியும் முனிவர் தலைவரான அங்கிராவும் பணிபுரிவர் ” …
சைவர் காபாலர் பான்மை
விரதியர் மெய்த்தவர் என்னும் அவர்
தாமும் மேல்உரைத்த மேனிமேவி
விரவுவர்அத்திசை தன்னில் வியன்கமலத்து
அயன்தென்பால் விரவ மெய்ம்மைச்
சரசுவதி முனிவரர்க்குத் தலைமைய வங்கிரர்
இவரும் சார்வர் அங்கு ( சிவதருமோத்தர 1092 )
இதன் மூலம்,பாசுபதர் ,காபாலிகர்,மாவிரதர் போன்ற சைவப் பிரிவுகளை சார்ந்த சிவனடியார்கள் சிவன் உலகை அடைவார்கள் என்பது தெரிகிறது…எல்லா சைவப் பிரிவுகளுக்கும் சிவனுலகில் இடம் உண்டு என்று நாம் உணரலாம்…ஆனால்,மாற்று சமயத்தவர்கள்,குறிப்பாக இஸ்லாம் கிருத்துவத்தில் இந்த ஒற்றுமையை நாம் காண முடியாது…”நாங்கள் மட்டுமே சொர்க்கத்துக்கு செல்வோம்,மற்ற பிரிவுகளை சார்ந்தவர் நரகத்துக்குப் போவார்” என்று தான் இந்த சமயங்களின் ஒவ்வொரு பிரிவும் கூறுகின்றன…ஆனால், சைவ சமயம் அதன் எல்லா பிரிவினரையும் அரவணைக்கிறது…
சைவப் பிரிவுகளிடையே சில கொள்கை வேற்றுமை இருப்பினும்,எல்லோரும் சிவனடியார்களே எனும் கருத்து தான் மேலோங்கி இருக்கும்…ஆகையினால்,உண்மையான ஒற்றுமை சைவத்தில் மட்டுமே உண்டு..
நமச்சிவாய வாழ்க
ReplyDeleteஎதேச்சையாக இப்போது இந்த பகுதியை படித்தேன் . என்ன சொல்ல அருமை சிவபெருமானை பற்றி இப்படி படிக்க மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . சிவ சிவ