சிவமயம்
ராமர்,ராவணனை வதம் செய்தவுடன்,அவருக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டதாகவும்,அதனால் அவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,பிரம்மஹத்தியை போக்கியதாக சைவ நூல்கள் கூறுகின்றன…ஆனால்,வைணவர்கள் கூறுகின்றனர் ,இது சைவர்கள் கட்டிவிட்ட கதையென்றும் ,வால்மிகி ராமாயணத்தில் இல்லையென்றும் பதில் கூறுகின்றனர்…வைணவர்களுக்கு,இராமரின் சிவவழிபாடு எவ்வளவு நிந்திதமோ,அவ்வளவு வந்திதம் ராம நாமத்தின் தாரகத்துவம்…ராம நாமம் தாரக மந்திரம் என்பது உண்மையென்றால்,அதனை கூற வால்மிகி ராமாயணத்தைவிட சிறந்த நூல் இருக்க முடியாது…ஆனால்,வால்மிகி ராமாயணத்திலோ,ராம நாமம் தாரக மந்திரம் என்ற ஒரு சிறு குறிப்புமில்லை…நிலை இப்படியிருக்க,வால்மிகி ராமாயணத்தில் குறிக்கப்படாமல் இருந்து,ராம நாமம் தாரக மந்திரம் என்று பிரசங்கம் செய்யும் இவர்கள்,ஏன் அதே ராமாயணத்தில் குறிக்கப்படாத ராமரின் சிவவடிபாட்டை மட்டும் பொய்யென்று ஏன் நிந்தனை செய்ய வேண்டும் ??
ராமன் சிவலிங்கம் செய்ததாக உள்ள வரலாறு,வால்மிகி ராமாயனத்தில் இல்லை,ஆனால் மற்ற நூல்களில் உள்ளது…ஏனெனில்,வால்மிகி ராமாயணம்,ராமனின் பெருமையை கூற வந்தது…அவருடைய பெருமையை கூறவந்த வால்மிகி,ராமரின் இழிவை கூறக்கூடாது..அப்படியாயின்,சிவவழிபாட்டை ராமர் செய்தார் என்பது இழிவு இல்லையே,அதை ஏன் கூறக் கூடாது என்ற வினா எழலாம்..ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும்,சிவ லிங்கம் ஸ்தாபித்து ராமேஸ்வரத்தில் வழிபட்டார் ராமர் என்று கூறினால்,ஏன் வழிபட்டார் என்ற வினா எழும்…இதற்கு பதிலாக,ராமர் இராவணனை,அவன் பிராமணன் ஆதலால்,கொன்ற பாவத்தை போக்க சிவலிங்க வழிபாடு செய்தார் என்ற பதிலை சொல்ல வேண்டி வரும்…இது ராமருக்கு இழிவை கொடுக்கிறது தானே ??அதனால் தான் ராமரின் சிவலிங்க ஸ்தாபனமும் வழிபாடும் கூறப்படவில்லை.
இப்பொழுது சிலர்,ராவணனை கொன்றதால் ராமனுக்கு எப்படி பிரம்மஹத்தி நிகழும் ,அவர் தந்தை பிராமணர் ஆயினும்,தாய் ஒரு அரக்கி,அதனால் பிராமணத்வம் போய்விட்டதென்று வாதாடுகிறார்கள்…
மனிதர்களைப் போல்,இராக்கதர்களிலும் நால்வருணம் உண்டு….வால்மிகி ராமாயணத்தில்
“அக்நிஹோத்ராச்ச வேதாச்சராக்ஷஸாநாம் க்ருஹே க்ருஹே”என்று வருகிறது..அதாவது இலங்கையில் வீடுதோறும் இராக்கதர்கள் வேதம் ஓதிய செய்தி இந்த சுலோகத்தில் கூறப்படுகிறது…
”ஜாதம் ப்ரஹ்ம குலாக்ரஜோ தனபதிர்ய : கும்பகர்ணாநுஜ…ஸர்வம் நிஷ்பலிதம் தகேதகவிதிநா தைவே பலே துர்ப்பலே ”என்று ஒரு சுலோகம் வால்மிகி ராமாயணத்ததில்,ராவணன் கூறுவதாக வருகிறது… இதன் பொருள்,” நான் பிரம்ம குலத்தில் பிறந்திருந்தும்,கும்பகர்ணாதியரை தம்பியராக கொண்டிருந்தும்….தெய்வபலம் இல்லாததால் எல்லாம் பலிதமில்லாமற் போய்விட்டன ” என்று ராவணன் சொல்வதாக உள்ளது..இதனால் ராவணன்,அரக்கருள் பிராமணன் என்றும் அவனை கொன்றதால் ராமனுக்கு பிரம்மகத்தி பீடித்துக்கொண்டதும் உண்மையே…தாயினால்,ராவணனுக்கு பிராமணத்துவம் போய்விட்டது என்றால்,மச்சகந்தியால் வியாசருக்கு ஏன் பிராமணத்துவம் போகவில்லை ??
உதவிய நூல் :
ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளையவர்களின் “சுலோக பஞ்சக விஷயம்”
 
 
 
 
 
 
நீங்கள் சொவ்லதெல்லாம் சரிதான்.ஆனால் வைஷ்ணவ அக்கினி என்னும் இணையதளம்
ReplyDeleteசைவாகம நூலை மோகன நூல் எனவும்
சிவலிங்கத்தைப் பற்றி அவதூறாகவும் திரிபுர தகனம் விஷ்ணுவினால் தான் ஏற்பட்டது எனவும் விஷ்ணுவை திரிபுர தகனத்திற்காக சிவபிரான் பிரார்த்தித்தாரெனவும் ராமர் சிவபூசை செய்யவில்லை எனவும் மகேஸ்வரசப்தம் விஷ்ணுவிற்குத் தான் உரியதெனவும் பிதற்றுகின்றனர்.இதுமட்டுமின்றி
சரபமூர்த்தி நரசிங்கத்தைக் கொல்லவில்லையெனவும் நரசிங்கம் தான் சரபத்தை அழித்ததெனவும் பொய் புகல்கின்றனர்.இதற்கு தாங்கள் சீக்கிரம் பதிலடி கொடுக்க வேண்டும்.
இது மட்டுமின்றி கங்கை விஷ்ணுவின் பாதநீர் எனவும் அதனைத் தன்தலை மேல் வைத்ததால் தான் சிவபிரான் காபாலித்துவத்திலிருந்து நீங்கப்பெற்றார் எனவும் சிவபிரான் பிரமன் தலையை கிள்ளியதால் பிரம்மஹத்தி வந்ததெனவும் அதனை கோவிந்தன் நீக்கினாரெனவும் பிதற்றுகின்றனர்.இதனைத் தாங்கள் தான் முறியடிக்கவேண்டும்.கங்கையின் பிறப்பை விளக்கவேண்டும்
ReplyDeleteஎப்படியாவது இதற்கு மறுப்பினை எழுதி வைணவர்களின் பாஷாண்டத்தை முறியடிக்க வேண்டுகிறேன்
ReplyDeleteசிவபுராணங்கள் அத்தனையும் சாத்வீகமே என்பதையும் சிவபிரான் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் நிரூபிக்கவேண்டும்
ReplyDelete