சேரமான் பெருமாள் இஸ்லாத்தில் பிரவேசித்தார் என்ற கட்டுக்கதை - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 30 July 2016

சேரமான் பெருமாள் இஸ்லாத்தில் பிரவேசித்தார் என்ற கட்டுக்கதை




கேரளாவில் இருக்கும் கொடுங்கலூரில் இருக்கும் சேரமான் ஜுமா மஸ்ஜிட் தான் இந்தியாவிலே மிகவும் பழமைவாய்ந்த மசூதியாம்…கிபி 629 இல், மலிக் பின் டினாரால் கட்டபட்டதாக கருதப்படுகிறது…இனி,இந்த மசூதியை சூழ்ந்திருக்கும் வரலாற்று செய்தியை பார்ப்போம்.

இந்த வரலாற்று செய்தி எதோ சரித்திர புஸ்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக நினைத்துவிடாதீர்கள்.இந்த கதை “பொய்மை புகழ்” இஸ்லாமியர்கள் சொன்ன கதை. சரி,கதையென்ன என்பதை பார்ப்போம்.கொடுங்கலூரை ஆட்சி செய்த  சேரமான்   பெருமாள் என்ற    சேர மன்னன்,மக்கா சென்று,இஸ்லாத்தை தழுவி,தாஜுடீன் என்ற முகமதிய   பெயரை பெற்றானம்.ஜடா வை(jeddah)  ஆண்டுக்கொண்டிருந்த ராஜாவின் சகோதரியை மணந்தானாம். பாரதத்துக்கு திரும்பும் போது,மலிக் இப்னு டினார் தலைமை தாங்கிய ஒரு இஸ்லாமி    போதகர் கூட்டத்தை தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்தானாம்.வரும் வழியில்.நோய்வாய் பட்டு, இறந்தானாம்.ஆனால் இறக்கும் முன்பு,கொடுங்கலூரை அடையும் பாதையை ஒரு கடிதத்தில் எழுதி அவர்களுக்கு கொடுத்தானாம்.அந்த கூட்டம், கொடுங்கலூரை அடைந்து,அக்கடிதத்தை அங்குள்ள ராஜாவுக்கு கொடுத்தார்களாம்.அந்த ராஜாவும் அவர்களுக்கு பெரும் வரவேற்பு கொடுத்து,நன்கு கவனித்து,அவர்களின் சமயத்தை அங்கு பரப்ப அனுமதி கொடுத்தானாம்.பல சிற்பிகளை கூப்பிட்டு அங்குள்ள அரத்தாளி கோவிலை இடித்து,ஒரு மசூதியை கட்ட கட்டளையிட்டானாம்.அந்த மசூதிதான் சேரமான் பெருமாள் ஜுமா மஸ்ஜிதாம்.


முஸ்லிம்கள் சொல்லும் இந்த ‘வரலாறு’ ,கேரலோல்பதி எனும் கேரளத்தின் பூர்விகத்தை விவரிக்கும் நூலில் காணப்படுகிறது.இந்த நூலில் ஏகப்பட்ட இடைசெருகல்கள் உள்ளன…ஆகையினால் இதை ஒரு ஆதார நூலாக ஏற்க முடியாது….எந்த பிரசித்தி பெற்ற சரித்திர நூலும் இந்த கதையை கூறவில்லை.நபியின் காலத்தில் ,ஒரு இந்தியர்,இஸ்லாத்தை தழுவினார் என்றால்,ஏன் எந்த சஹிஹ் புக்ஹாரி,சஹிஹ் முஸ்லிம் ஹதீஸில் இது கூறப்படவில்லை ?? இஸ்லாத்தை தழுவிய பலரின் வரலாற்றை கூறும் ஹதீஸ்களில்,ஏன் இந்த வரலாறு இடம் பெறவில்லை ?? எந்த சுன்னி,ஷியா நூலும் இதை கூறவில்லை…என்ன காரணம் ?? ஸ்ரீதர மெனன் என்பவர் சொல்கிறார் :

” இந்த     சேரமான் கதையை எந்த சரித்திர நூலும் அங்கீகரிக்கவில்லை, ஆதரவு தரவில்லை.கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் எவரும் தங்களின் பயண நூல்களில் இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டவில்லை,குறிக்கவில்லை.சுலைமன், அல் பிருணி, துலேடா பெஞ்சமின் , அல் கஜ்வினி, மார்கொ போலோ, பிராயர் ஓடொரிக், பிராயர் ஜொர்டனஸ், இப்னு  பத்துத்தா, அப்துர் ரசாக்,நிக்கொலொ-கொந்தி போன்ற பிரசித்தி பெற்ற பயணிகளும் தங்களின் பதிவுகளில் இந்த சம்பவத்தை குறிக்கவில்லை.”


இந்த சேரமான் பெருமாள் கதை ,16-ஆம் நூற்றாண்டில்,ஷைக் ஜைனுடின் எழுதிய துஹபாத் -உல்-முஜஹிதீன் என்ற நூலில் குறிபிடப்பட்டுள்ளது.ஆனாலும் அந்த நூலாசிரியரே அதை உண்மையென   சொல்லவில்லை,அவரும் அதை சந்தேகிக்கிறார்.இந்த நூலும்,இஸ்லாமிய நூல் அல்ல…குரான் ஹதீஸ் கருத்தை கூற வந்த நூல் அல்ல..மாறாக கேரளாவில் உள்ள மாப்பிள்ளை முஸ்லிம்களுக்கும் போர்துகிஸ்யர்களுக்கும் நடந்த போராட்டத்தை கூறும் ஒரு இஸ்லாமிய சரித்திர நூல்….இது சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு ஆதார நூலும் இல்லை…ஸ்ரீதர  மெனன் மேலும் குறிப்பிடுகிறார் கேரளாவில் சேரமான் பெருமாள் என்ற அரசனே இல்லையென்று.ஆனால்,சைவத்தில் சேரமான் பெருமாள் என்ற நாயனார் ஒருவர் இருந்திருக்கிறார்,ஆனால் இவர் சிவலோக பதவியடைந்தது கிபி 825,அதாவது ,முகமது இறந்து 200 வருஷங்கள் பிறகு.


பார்த்தீர்களா முகமதிய முல்லாக்களின் புளுகுகளை. இந்த அல்லாவை கும்பிடும் இந்த முல்லாக்கள் குல்லாவை போட்டால்,மூளையை பயன்படுத்தவே மாட்டேங்கிறார்கள். புளுகினாலும் இடம் தெரிந்து, செய்தி தெரிந்து புளுக   வேண்டாமா ?  வேறு ஒன்றுமில்லை, ‘இந்துக்களை’ தங்களின் சமயத்துக்கு இழுக்கத்தான் இம்மாதிரியான சூழ்ச்சிகளை கையாளுகிறார்கள்.இந்த   பொய் கதையை, இன்றும் இஸ்லாமிய புளொகுகளில் பார்க்கலாம். இஸ்லாத்தின் ‘மேன்மையை’ முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணர்த்தவும், ‘இந்துக்களே’ இஸ்லாத்தின் ‘புனிதத்தை’ உணர்த்து அதை ஏற்றுக்கொண்டதாகவும், முஸ்லிம்கள் அவர்களை வற்புறுத்தி மதம் மாற   செய்யவில்லையென்றும் அப்பாவி மக்களுக்கு காட்டி,அவர்களை ஏமாற்றத் தான் இந்த தந்திரம்.  இஸ்லாமிய மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை மறைத்து மனித   நேயத்தையும் சேர்த்து மறைக்கப்பார்க்கிறார்கள்..மேலும்,சேரமான் பெருமாள் என்ற இந்திய மன்னர்,இஸ்லாத்தை ஏற்றதாக எந்தவிரு இஸ்லாமிய ஆதார நூலும் கூறவில்லை..ஆகையினால்,இது புனையப்பட்ட ஒரு கட்டுக்கதையே என்பதை உணர்வது நலம்…

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்