தியோபந்தி,பரெல்வி,அஹ்லுல் ஹதீத் என்று இந்தியாவில் பல தீவிர இஸ்லாமிய இயக்கங்கள் உண்டு. சிரியாவில் 13ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு,18ஆம் நூற்றாண்டில் சவுதி அரபியாவில் பிரபலமாக்கப்பட்ட வஹாபிய இஸ்லாம் எனும் இஸ்லாத்தின் மிக தீவிரமானப் பிரிவை பின்பற்றுபவர்கள் இந்த இயக்கங்கள்.
இவர்களது நூல்களை அவப்போது நான் படிப்பதுண்டு.முஹம்மது அப்துல்லாஹ் இப்னு வஹாபின் அத்-தௌஹீத் மற்றும் சில தியோபந்தி நூல்களையும் ஆராய்ச்சி செய்வேன் அவப்போது.இந்த தியோபந்தி போன்ற இந்திய இஸ்லாமிய இயக்கங்கள் குரானைவிட ஹதீஸுக்கு அதிக முக்யத்வம் கொடுக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. ஹதீஸ் என்றால் என்னவென்று கேட்கிறீர்களா ? வேறொன்றும் இல்லை, கர்ணப்பரம்பரை அல்லது செவிவழிச் செய்திகளை சேகரித்து நூலாக்கப்பட்டதே ஹதீஸ்.ஒரு உதாரணம் சொல்கிறேன்.
நான் ஒரு சைவப் பண்டிதர் என்று வைத்துக்கொள்வோம்.எனது மானச குரு,200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்.அவரது போதனைகளை சேகரிப்பதற்காக,யாழ்பாணம் ,இந்தியா முழுவதும் பயணித்து,அங்குள்ள மக்களிடம் விசாரிக்கிறேன்.அவர்களில் பலர்,இந்த வகையில் பதிலிளிப்பார்கள். " எனது தாத்தாவின் தகப்பனாரின் தனது அண்டைவீட்டுக்காரரிடம் கேட்டது,அவரோ(அண்டைவீட்டுக்காரர்) தனது சகோதரரிடம் கேள்விப்பட்டது என்னவென்றால், அச்சகோதரர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் வகுப்பில் படிக்கும்போது, நாவலர் ஒரு பீடத்தின் மீது அமர்ந்துக் கொண்டு ,இவ்வாறுச் சொன்னார் "........." . " ..இப்படி ஒவ்வொருவரும் நாவலர் கூறியதாக பல செய்திகளைச் சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.இவற்றை எல்லாம் நான் சேகரிக்க,அது பல ஆயிரமாக குவிகிறது.அவற்றில் சிலவற்றை இது நாவலர் வாக்கு அல்ல என்று ஒதுக்கி,சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன்.ஏற்றுக்கொண்ட செய்திகளை ஒன்றுதிரட்டி வைத்துள்ளேன்.பிறகு இறந்துவிடுகிறேன்.எனது சீடரில் ஒருவர் அந்தச் செய்திகளை பட்டியலிட்டு ஒரு நூலாக உருவாக்குகிறார்.இதை அவரது சிஷ்யர்களுக்கும் பொது மக்களுக்கும் அனுப்பி பரப்புகிறார்.இவ்வாறு நாவலரின் போதனைகள் என்று கூறப்படும் செய்திகள் மக்களால் பின்பற்றப்படுகிறது.இங்கு கவனிக்கத்தக்கது,நான் ஏற்றுக்கொண்டச் செய்திகள் உண்மையிலேயே நாவலர் வாக்கா என்று உறுதிச் செய்ய என்னால் முடியாது.வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அதை ஏற்றுக்கொண்டேன்.
இப்பொழுது ஹதீஸ் கதைக்கு வருவோம்.ஹதீஸும் இது போலவே உருவாக்கப்பட்டது.புஹாரி என்ற இஸ்லாமிய பண்டிதன்,ஊர் ஊராக சுற்றி,200 வருஷத்துக்கு முன்பு வாழ்ந்த முஹம்மதின் போதனைகளை மக்களிடம் கேட்டு சேகரித்தான்.சஹிஹ் புக்ஹாரி எனும் ஹதீஸை அவந்து மாணவன் நூலாக்கி வெளியிட்டான்.ஹதீஸ் இல்லை என்றால் முஸ்லிம்கள் நடத்தும் தொழுகை,நோன்பு போன்ற 99% கிரியைகளை செய்ய முடியாது,ஏனெனில் இக்கிரியைகளுக்கு குரானில் விளக்கம் இல்லை.அப்படியெனில்,இது உண்மையிலேயே முஹமதின் போதனையா என்று உறுதிச் செய்ய முடியாத செய்திகளை,மூட நம்பிக்கை அடிப்படையில் முஸ்லிம்கள் கடைபிடிக்கிறார்கள் என்று தானே அர்த்தம் ?
இன்று முஸ்லிம்கள் செய்யும் 99% கிரியைகள் ஹதீஸில் இருந்து வருபவை.ஹதீஸின் பயன்பாடு குரானின் இந்த வாக்கு பொய்யாகிறதே.குரானில் இருந்து எந்தச் செய்தியும் அல்லாஹ் விட்டுவிடவில்லை எனில் ஹதீஸ்கள் எதற்கு :
".....(இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை..." (6:38)
முஸ்லிம்களே,உண்மை என்னவெனில்,உலமாக்கள்,ஏக போக வாழ்க்கை வாழத்தான் ஹதீஸ்களை உருவாக்கியுள்ளனர்.முஸ்லிம் பொதுமக்களை அடிமைப்படுத்தி,அதில் குளிர்காயும் குள்ள நரிகள் தான் உலமாக்கள்,இஸ்லாமிய இயக்கம் எல்லாம்.சிந்தித்து,இஸ்லாம் எனும் மூட நம்பிக்கை,அடிமைத் தளையிலிருந்து விடுபடுங்கள் ! வேதம் கூறும் சத்ய மார்க்கத்தின் சர்வேஸ்வரனான இறைவனை வணங்க வாருங்கள் !
குர்ஆனின் விளக்கம் என்றுதான் ஹதீஸை எடுத்துக் கொள்ள வேண்டும். எவையெல்லாம் குர்ஆனின் கருத்துகளுக்கு முரணாக வருமோ அவைகளை முஹம்மதின் வார்த்தைகள்,செயல்கள், அனுமதிக்கப்பட்டவைகள் என்ற வரைமுறைக்குள் வராது.
ReplyDeleteகட்டுக்கதைகளை வைத்தே சித்தாந்தஙகளை நிர்மாணிக்கும் உங்களுக்கு authenticity பற்றி தெரிய வாய்ப்பில்லை