இறைவனை மிக்குச் சோதிக்க வேண்டாம் !!! - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Thursday, 28 July 2016

இறைவனை மிக்குச் சோதிக்க வேண்டாம் !!!

ஸ்ரீ ஞானசம்பந்தகுருப்யோ நம :




இக்காலத்தில் பலர் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகின்றனர்.இது தவறில்லை,இறைவனது குணாதிசயங்கள்,இலக்கணத்தை ஆராய்வதால் இறைவனைப் பற்றி நாம் சற்று தெரிந்துக்கொள்ளலாம்.இருப்பினும் இக்காலத்தில் பெரும்பான்மையினர்,ஆராய்ச்சி செய்வதையே தம் பிறவிப் பயனாய் கொண்டுள்ளனர்.இது தவறான செயலாகும்.

ஒருபொருளைப் பற்றி ஆராய்ந்துக்கொண்டே போனால்,கடைசிவரை நம் சந்தேகங்கள் தீரப்போவதில்லை,மாறாக நம் வாழ் நாள் தான் வீணாளாகும்.உதாரணத்திற்கு,பேருந்தின் மூலம் ஓரிடத்துக்கு போக நேரிட்டால்,பேருந்தில் ஏறி உட்காராமல், "நான் செல்ல வேண்டிய இடத்தை அடைவேனா ? அல்லது ஏதெனும் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுவேனா ? பாருந்து ஓட்டுனர் ஒழுங்காக ஓட்டுவாரா ? பேருந்தில் ஏதெனும் பழுது உள்ளதா ? சாலை நல்லபடியாக உள்ளதா அல்லது பள்ளமும் குழியுமாக இருக்கிறதா ? மொத்தத்தில் பேருந்தில் ஏறுவோமா அல்லது வேண்டாமா ?" என்றெல்லாம் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தால்,எந்த இடத்திற்கும் நாம் பேருந்தில் மட்டும் அல்ல,உலகில் உள்ள எந்த வாகனத்திலும் ஏற முடியாது.இது போல் தான் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சியும்.மேலும் இறைவனை நாம் நூல்களில் மூலம் முழுமையாக அறிந்துவிட முடியாது.இறைவன் நூல்களுக்கு அப்பாற்பட்டவன்.எதோ சில விஷயங்களை மட்டுமே இறைவனை நூல்களின்மூலம் அறியலாம்.நூல்களில் அடைக்கும் அளவுக்கு குணாதிசயங்கள் உடையவர் என்றால் அவர் இறைவன் ஆக இருக்க முடியாதல்லவா ?


அதுபோல் இறைவனைப் பற்றி ஆராய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால்,ஒருபோதும் நாம் இறைவனது பெருமையை உணரமுடியாது.சோதிப்பது தவறில்லை,ஆனால் மிக்கு சோதிக்க வேண்டாம் என்று சைவ சமயத்துக்கு திராவிட தேசத்தில் மறுமலர்ச்சியூட்டிய ஸ்ரீஞானசம்பந்த ஸ்வாமிகள் கூறுகிறார்.அந்தப் பாட்டும் அதன் பொருளும் :



ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.  (3ஆம் திருமுறை,54ஆவது திருப்பதிகம்)

பொருள் : இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன். அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன்.  ( http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=30540&padhi=054&startLimit=5&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC )

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்