சைவ சித்தாந்தம் தமிழ் நாட்டுச் சமயமா ? - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 9 July 2016

சைவ சித்தாந்தம் தமிழ் நாட்டுச் சமயமா ?


சிவமயம்


சைவ சித்தாந்தம் இன்று எதோ தமிழ் நாட்டு சமயம் போல் பலர் பேசிக் கொண்டு வருகின்றனர்..ஆனால்,சரித்திரத்தைப் பார்த்தால்,இது எவ்வளவுப் பெரிய தப்பான அபிப்பிராயம் என்று தெரிய வரும். "The Saiva Siddhantha philosophy is the choicest product of Dravidian intellect " என்று ஜீ.யூ.போப் எனும் ஒரு பாதிரியார் கூறியிருக்கிறார்..இந்த கருத்தை,சைவப் பெரியார்,சிவபாதசுந்தரனார் "இது ஓர் மூட நம்பிக்கை" என்று கண்டிக்கிறார்.உண்மை,சைவ சித்தாந்தத்தை எந்த தமிழரும் கண்டுபிடிக்கவில்லை,எந்த வட நாட்டவரும் கண்டுபிடிக்கவில்லை.அது சிவபிரானால் நமக்கு அருளப்பட்டது...சைவ சித்தந்தத்தை,வேத சிவாகமங்கள் மூலம் சிவபிரான் அருளினார்....அந்த சிவாகம கருத்துககளை, பரத கண்டத்திலுள்ள பல தேசங்களைச் சார்ந்த ஆச்சாரியர்கள்,மக்களுக்கு தெரிவிக்க ,சிவாகமங்களுக்கு உரைகளை மற்றும் சிவாகம கருத்தை கூறும் பல நூற்களையும் அருளினார்கள்.... ஆக,பாரதம் முழுவதும் பல ஆச்சாரியர்கள் சைவ சித்தாந்தத்தை பரப்பினார்கள் என்பதும்,சைவ சித்தாந்தம் தமிழ் நாட்டில் மட்டும் இருக்கும் ஓர் சமயம் இல்லை என்பதும் தெளிவாகிறது..சைவ சித்தாந்தத்தை பாரதம் முழுவதும் பரப்பிய,அப்படிப்பட்ட ஆச்சாரியர்கள் சிலரை பார்ப்போம் : -

குஜராத் : உத்துங்கசிவன், பிரம்மசிவன்

காசி : பூர்ணசிவன், வித்யாந்தசிவன்

மும்பாய் அருகில் :  சர்வாத்மசீவிகர்

வங்காளம் : ஸ்ரீகண்ட சிவன், தியானசிவன்

மத்திய பிரதேசம் : போஜ தேவர், விஸ்வேஸ்வரசிவன்

காஷ்மீர் : சத்யோஜோதி , ஸ்ரீகண்டர், நாராயண கண்டர், முதலாம் ராமகண்டர்,இரண்டாம் ராமகண்டர், ப்ரிஹஸ்பதி, சங்கர நந்தனர் ,                                                      வித்யாகண்டர் ,விபூதிகண்டர், நீலகண்டர்  

உஜ்ஜைனி : ருத்ரசம்பு

தமிழ் நாடு : மெய்கண்ட சிவன்,வாகீச முனிவர்,அருணந்தி சிவன், மறைஞானசம்பந்த சிவன் (14ஆம் நூற்றாண்டு)  ,உமாபதி சிவன்,   உய்யவந்த   தேவன் ( திருவியலூர்) , உய்யவந்த தேவன் (திருக்கடவூர்)  , மனவாசகங்கடந்தார் ,அகோரசிவன், திரிலோசனசிவன் ,  திருமூல தேவன், சிவாக்கிர யோகிகள், மறைஞான சம்பந்த தேசிகர் (16ஆம் நூற்றாண்டு )


இங்கு நாம் நன்கு கவனித்தால்,காஷ்மீர மற்றும் தமிழ் நாட்டிலும் பெரும்பான்மையான ஆச்சாரியர்கள் இருந்துள்ளனர்..காஷ்மீரும் தமிழ் நாடும் பாரதத்தின் இருவேறு மூலையில் இருப்பவை...இருப்பினும், காஷ்மீரில் தான் சைவ சித்தாந்த ஆச்சாரியர்கள், முதலில் சித்தாந்த நூல்களை இயற்றினர்..அதன் பின்பு, அங்கு சித்தாந்த ஆச்சாரியர்கள் பரம்பரையை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது..இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை..மேலும்,அங்கு காஷ்மீர சைவம் என்ற புதிய சைவப் பிரிவு வலிமையாகத் தொடங்கியது...இதனால், சைவ சித்தந்தத்தின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் காஷ்மீரில்,சைவ சித்தாந்தம் குன்றியது... இதன் காரணமாக,சைவ சித்தாந்தம்,தமிழ் நாட்டில் இன்னும் பிரகாசமாக ஒளிர்விட தொடங்கியது..13ஆம் நூற்றாண்டில்,ஸ்ரீ கயிலாசத்திலிருந்த குருபரம்பரை, தமிழ் நாட்டில் ஸ்ரீ மெய்கண்ட தேசிகர் மூலம் தொடர ஆரம்பித்தது...இதுவே திருக்கயிலாய குருபரம்பரை,ஸ்ரீகயிலாச குருபரம்பரை என அழைக்கப்பட்டது...  திருக்கயிலாய குருபரம்பரை தவிர்த்து,ஸ்கந்தப் பரம்பரை என்ற மற்றொரு சித்தாந்த சம்பிரதாயமும் தமிழ் நாட்டில்,வலுப்பெற்று,சைவ சித்தாந்த பிரச்சாரத்தை வீறுகொண்டு செய்தது...

நம் சைவ சித்தாந்தத்தின் வரலாறு இத்தகைய பெருமையை உடையது...பாரதம் முழுவதும் சைவ சித்தாந்தம் பரவியது..இருப்பினும்,கலி காலத்தில் தர்மம்,அதர்மத்திடம் பெரும்போட்டியை சந்திக்கும் எநும் கருத்துக்கு ஏற்றாற்போல்,  இன்று சைவ சித்தாந்தம்,தமிழ் நாட்டிலும்,இலங்கையும் தான் ஒளி மங்கிய நிலையில் உள்ளது...மற்ற பகுதிகளில்,சைவ சித்தாந்தம் சிறிது கூட இல்லை...மிகவும் அவலமான நிலை இது...இருப்பினும், அன்று ஒரு திருஞானசம்பந்தப் பெருமானும்,வாகீச சுவாமிகளும் சைவ ஸ்தாபனம் செய்தது போல்,என்றாவது ஒரு நாள், சைவ ஆச்சாரியர் ஒருவரை அல்லது லலிதாதித்ய முக்தபீடர் ,ராஜ ராஜ சோழர் மற்றும் போஜ தேவரைப் போல் எவராலும் போர்க்களத்தில் வெற்றிப்பெற முடியாத ஒரு சைவ மாவீரரை உருவாக்கி ,சிவபெருமான் அனுப்பி வைப்பார்,நமக்காக, சிவ தர்மம் எங்கும் பிரகாசிக்கும்படி  செய்வார்.... அன்று நிச்சயம்,நம் பாரத நாடு, சைவஸ்தான் எனும் சிவபூமியாகவே மறுபடியும் உதிக்கும்.... ரிஷபக் கொடி வாணில்,கம்பீரமாக பறக்கும்,சிவாகமங்களே சட்ட நூலாக்கப்படும்,  அப்பொழுது சைவ விரோதிகள் மனதில் ,சைவம் எனும் சிம்மம்,திகிலை உண்டாக்கும்... அன்று,சைவம் எனும் சூரியன் உதித்து, பொய் சமயங்களின் இருளை நீக்கும்...

1 comment:

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்