காஞ்சி மடத்தின் சந்திரமௌலீஸ்வர பூஜையின் பின்னனி - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 9 July 2016

காஞ்சி மடத்தின் சந்திரமௌலீஸ்வர பூஜையின் பின்னனி


 உ
சிவமயம்


கேலடி ஆட்சியாளர்கள் வீர சைவ சமயத்தை சார்ந்தவர்கள்...இருப்பினும்,சிருங்கேரி மடத்து அதிபதிகளிடம் நல்ல மதிப்பு உடையவர்களாக இருந்தனர்...அவர்களின் தொடர்பால்,சிருங்கேரி மடத்து தலைவர்களும் ரேவணசித்தர் எனப்படும் வீர சைவ பரமாச்சாரியரை பின்பற்றுபவர்களாக மாறினர்...இந்த காரணத்தால் தான்,ஆதி சங்கரர் சிவ விஷ்ணு பேதத்தை கூறாதவராக இருந்தாலும்,அவருடைய சம்பிரதாயத்து மடாதிபதிகள்,இன்றும் தங்கள் மடங்களில் சைவ வழிபாட்டுக்கே,விஷ்ணு வழிபாட்டைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ...


சிருங்கேரி மட வரலாற்று நூல்களே,அவர்கள் வழிபடும் சந்திரமௌலீஸ்வர லிங்கம்,வீர சைவர்களிடமிருந்து பெறப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கின்றனர்...சிருங்கேரி பீடம் 800 ஆண்டுகளுக்கு செயலற்றுக் கிடந்தது..அந்த காலத்தில் தான் போலும்,அந்த மடம்,வீர சைவர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது...வித்ய சங்கரருக்கு  (கிபி 569)  பின் வந்த சிருங்கேரி மடாதிபதிகள் ,வீர சைவ சமயத்தால் ஈர்க்கப்பட்டு,அதன் சில பழக்க வழக்கங்களை,சிருங்கேரி பீடத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கலாம்..இவர்கள்,வீர சைவ சமயத்துக்கு மதம் மாறி,தன்னுடைய பூர்வ சமயமான மாயாவாதத்தை நிராகரித்திருக்கலாம்... ஆதி சங்கரரால் சிருங்கேரி மடத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சந்திரமௌலீஸ்வர லிங்கம்,காணாமல் போயிருக்கலாம்...அதனால்,வீர சைவர்கள் வழிப்பட்ட ஒரு லிங்கம் புதிதாக அங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கலாம்...அல்லது,ஆதி சங்கரர் ஸ்தாபித்த லிங்கம்,வீர சைவர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கலாம்..


14 நூற்றாண்டில்,காஞ்சி மடத்தின் அதிபதியாக இருந்தவர் வித்யா தீர்த்தர்...பிற்காலத்து விருபாக்ஷி மடத்தின் அதிபதியான வித்யாரண்யரின் குரு,இந்த வித்யா தீர்த்தர் தான்..இவர்,சிருங்கேரி மடத்தை,மறுபடியும் ஒரு வலுவான மடமாக ஸ்தாபிக்க முயற்சிகள் மேற்கொண்டார்...சிருங்கேரி மட மறுசீரமைப்பு பணியில்,அவர் முதலில் செய்ய விரும்பிய பணி,சந்திரமௌலீஸ்வர வழிபாட்டை சிருங்கேரி மடத்தில் மறுபடியும் உயிரூட்ட வேண்டுமென்பதே...ஆனால்,சிருங்கேரியில் இருந்த சந்திரமௌலீஸ்வர லிங்கமோ,வீர சைவர்களின் கைக்கு போய்விட்டது...அதனால்,அவர்களிடம் அந்த லிங்கத்தை பெறவேண்டிய கட்டாயத்துக்காளாக்கப்பட்டார்,வித்யா தீர்த்தர்..வீர சைவர்களிடம்,அந்த சிவலிங்கத்தை பெற வேண்டுமாயின்,வீர சைவ வழிபாட்டு கிரியைகளை சிருங்கேரி மடத்தில் அநுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அவர் சம்மதம் தெரிவித்திருக்கலாம்...


குறிப்பு : ஆதி சங்கரர்,கிபி 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதே சைவர்களது கருத்து.இந்த நூலில்,ஆதி சங்கரரின் காலம் அதற்கும் முந்தையது என்று கூறப்படுவதால்,இதில் நமக்கு உடன்பாடில்லை.



உதவிய நூல் :  The Traditional Age of Sankaracharya and the Mathas

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்