ஸ்ரீ வாகீச ஸ்வாமிகள் (திருநாவுக்கரசர்) வாழ்ந்த 7ஆம் நூற்றாண்டில்,சிவதர்மத்தில் உள்ள பல பிரிவுகளைச் சார்ந்த சிவனடியார்கள் ஒற்றுமையோடு,இறைவனை வணங்குதலையே கருத்தாகக் கொண்டு,திருவாரூர் சிவாலயத்தில் இவர்கள் அனைவரும் வணங்கும் காட்சியை,அப்படியே நமக்கு ஒரு பாடல் மூலம் காட்டுகிறார்,அப்பர் ஸ்வாமிகள்.அப்பாடல் இதோ :
அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப் பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூர் அம்மானே.
பொழிப்புரை : விலை உயர்ந்த மணிகளாலாகிய பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வாரோடு, கோயில் பணி செய்பவர்கள். ஆதி சைவர்கள், சிவகணத்தார், விரிந்த சடையை உடைய, விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே!
குறிப்புரை :
உரிமையில் தொழுவார் - ஆதிசைவர் ; சிவனுக்கே உரிமையான உருத்திர கணிகையர்
உருத்திர பல்கணத்தார் - உறவாவார் உருத்திர பல்கணத்தினோர்கள்
விரிசடை விரதிகள் :- துறவிகள் ; மாவிரதிகள்
அந்தணர் :- ஆதிசைவர் முதலோர்
பாசுபதம் :- மாயை, கன்மம் என்னும் இரண்டும் இசைந்து ஆணவம் இல்லை என மறுத்து, இறைவன் தன் குணங்களைச் சாத்திர முறைப்படி பெற்ற தீக்கையால் ஞானம் பற்றியவனிடத்தில், பற்றுவித்துத் தன் அதிகாரத்தின் ஒழிவு பெற்றிருப்பன் என்னும் அகப்புறச் சமயத்தார். (சங்கிராந்த சமவாதி)
கபாலிகள் :- மாவிரதர் போலவே ஆன்ம வியல்பு கொண்டவர். பச்சைக்கொடி ஒன்று கைக்கொண்டு நாடோறும் மனிதத் தலையோட்டில் பிச்சையேற்றுண்பவர்.(ஆவேச சமவாதி)
தெருவினிற் பொலிதல் :- வழிபடற் பொருட்டுத் தலத்தில் வாழ்ந்து திருக்கோயிலுக்குச் செல்லுதலும் மீளுதலும் நிகழ்த்துவதால் ஆன காட்சியும் பெருமான் திருவுலாக் கண்டு மகிழ்ந்து வரும் தோற்றமும் ஆம்.
இந்தப் பாடல் மூலம்,ஆதி சைவர்கள்,ருத்திர கணிகையர் (தேவ தாசிகள்) போன்ற பொதுவான சிவனடியார்களும்,சைவர் (சைவ சித்தாந்தி முதலானோர்),பாசுபதர், மாவிரதிகள் ,கபாலிகர்கள் போன்ற பல சைவப் பிரிவைச் சார்ந்த சிவனடியார்களும் திருவாரூர் தெருக்களில் கூட்டமாக வாழ்ந்ததும், இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக சிவவழிபாட்டை திருவாரூர் ஆலயத்தில் செய்ததையும் நாம் தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த மாதிரி ஒற்றுமையான காட்சி வேறு சமயங்களில் உள்ளதா ? மசூதியை சுன்னி மசூதி,ஷியா மசூதி என்று பிரித்துக்கொண்டு,ஒரு பிரிவு மசூதியில் மற்றொரு மிரிவு முஹம்மதியன் வழிபட மாட்டான்.சர்ச்சுக்களும் ரோமன் கத்தொலிக் சர்ச்சு,புரோடஸ்டன் சர்ச்சு என்று நூற்றுக்கணக்கில் பிரிந்து கிடக்கின்றன.இந்த சமயங்கள் தத்தமடு சமயத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் ஒன்றுசேர ஆதரிக்கவில்லை.இஸ்லாத்தில் சுன்னி-ஷியா போர்,1320 வருஷங்களுக்கு மேலக இன்றுவரை நடந்து வருகிறது.இஸ்லாம் தோன்றி 1400 வருஷம் ஆகியதென்றால்,அதில் 1320 வருஷம் பிரிவுப் போர் நடக்கிறது என்றால் இச்சமயம் சகோதரத்துவ சமயம் என்பது வெறும் வாய் ஜாலமே.இவ்வாறே கிருத்தவத்திலும் நடக்கிறது.
இஸ்லாம்,கிருத்தவத்தில் உள்ள இந்த குறை சிவதர்மத்தில் மட்டுமே இல்லை.ஆக,உண்மையான சகோதரத்துவ மார்க்கம் இறை மார்க்கமான சிவதர்மம் மட்டுமே !
பி.கு :
குறிப்புரை : மதுரகவி முத்து சு.மாணிக்கவாசக முதலியார்
பொழிப்புரை : வித்வான் தி.வே.கோபாலய்யர்
Post Top Ad
Saturday, 6 August 2016
சிவதர்மம் எனும் சகோதரத்துவ மார்க்கம்
Tags
# இஸ்லாம்
# கிருத்தவம்
# சிவ தர்மம்
# திருநாவுக்கரசர்
# திருமுறை
About சிவபாத சேகரன்
திருமுறை
Labels:
இஸ்லாம்,
கிருத்தவம்,
சிவ தர்மம்,
திருநாவுக்கரசர்,
திருமுறை
Subscribe to:
Post Comments (Atom)
சைவ க்ஷத்திரியத்வம்
இணையத்தள உரிமையாளன்
சைவத்தின் போர்வாள் (வேதாசலம் பிள்ளை)
No comments:
Post a Comment