முழுமுதல் தன்மை தமக்கே இருப்பதால்,இறைவன் "சிவன்" என்றழைக்கப்படுகிறான்."சிவ" என்றால் மங்கலம் என்றுப் பொருள்.
முற்றறிவு உடைமை,வரம்பில்லாத இன்பம் உடைமை,இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்,தன்வயத்தன் ஆதல்,பேரருள் உடைமை,அளவில்லாத ஆற்றல் உடைமை என்ற மங்கள குணங்கள் ஆறும் தன்பால் உள்ளவர் என்பதனைச் "சிவ" எனும் திருப்பெயர் விளக்குகின்றது.அன்றியும் உயிர்களுக்குள்ள ஆணவம்,கன்மம்,மாயை எனும் மும்மலங்களையும் அநாதியே தன்பால் இன்மையாகிய சுத்த தன்மை உடையவர் ஆதலால் அவர் "சிவன்" எனப்பட்டார்.இதற்கு ஆதாரம்,வாயு சம்ஹிதை :
1) அதவாசேஷ கல்யாண குணைககந ஈஸ்வர :|
சிவ இத்யுச்யதே ஸத்பி : சிவதத்வாந்த வேதிபி :||
2)அநாதிமல ஸம்ச் லேஷப்ராகபாவாத் ஸ்வபாவத :|
அத்யந்த பரிசுத்தத் மேத்யதோயம் சிவ உச்யதே :||
Post Top Ad
Saturday, 30 July 2016
Subscribe to:
Post Comments (Atom)
சைவ க்ஷத்திரியத்வம்
இணையத்தள உரிமையாளன்
சைவத்தின் போர்வாள் (வேதாசலம் பிள்ளை)

No comments:
Post a Comment