ஆர்யத் தமிழன் என்ற வைணவரின் கட்டுரைக்கு பதிலடி - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Friday, 4 November 2016

ஆர்யத் தமிழன் என்ற வைணவரின் கட்டுரைக்கு பதிலடி

துலுக்க நாச்சியார் பற்றி,குரு ஜி என்பவரின் முகநூல் பதிவில் காரசாரமான விவாதம் நடந்தது.அதில் நானும் பங்குக்கொண்டேன்.அப்பதிவுக்கு மறுப்பாக,ஆர்யத் தமிழன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.அதனை இங்குப் படிக்கலாம்.அதில் சரித்திரப் புரட்டையும் சைவ விரோதமாகவும் பல கருத்துக்களை சேர்த்துள்ளார்.அதற்கு பதிலடி கொடுக்கவே இந்தப் பதிவு.

// கஜினி படையெட்டுப்பு பொ.ஆ.பி. 1001 பஞ்சாபில் ஜயபாலனை வென்றது. (the oxford history of India by win cat A.Smith Cie 1921) 1019 கானோஜ் பிடிபட்டது 1024 – 25ல் சோம்நாத் சிவன் கோயில் இடிக்கப்படுகிறது, 1030 கஜினி இறந்துவிடுகிறான். அதன் பின் முதல் மசூத் (1030-41) முகமது (1941), மதூத் 1041-1048, இரண்டாம் மசூத் (1048), அலி (1048-1049), அப்துல் ரஜீத் 1049-52), தோகுமூல் 1052-53, பரூக் ஜாத் 1053-59, இப்ராஹீம் 1059-1099, மூன்றாம் மசூத் (1099- 1115) மூன்றாம் மசூத் தலைநகர் லாகூர், மூன்றாம் மசூத்தின் பெண்ணின் பெயர் பீவி.

     1097 -1100 காலத்தில் டெல்லியை உள்ளடக்கிய  கசானாவிட் முஸ்லீம்கள் ஆட்சி கீழ் வந்துவிட்டது. ஸ்ரீ ராமானுஜம் பத்ரிகையில் என். ஜீயபங்கார் தந்த தகவலினை Wikipedia உறுதி செய்கிறது தேவையெனில் Ghazanavit என பதிவுசெய்து பார்க்கவும்.    //



கஜ்னவித் அரசுப் பற்றி விக்கிபிடியாவில் தில்லியை ஆண்டதாக ஒன்றும் கூறப்படவில்லை : https://en.wikipedia.org/wiki/Ghaznavids ...
கஜ்னவித் ராஜ்யம் தில்லியை ஆண்டதாக எந்த ஆதாரமும் இல்லை.இந்த அரசு,பெருவாரியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கியதாகவே இருந்தது.வட இந்தியாவில் கஜ்னவித் அரசு எந்த பகுதியையும் ஆக்கிரமிக்க முடியவில்லை.ஆர்யத் தமிழ் என்ற இந்த வைணவ கட்டுரையாசிரியர் கூறும் 1097 -1100 காலக்கட்டத்தில்,தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வட இந்தியப் பகுதிகளை பால ராஜ்யத்தின் கீழ் இருந்தது. பால ராஜ்யத்தைப் பற்றி இங்கு படிக்கலாம் : https://en.wikipedia.org/wiki/Pala_Empire .

 தில்லியை 12ஆம் நூற்றாண்டுவரை பால அரசின் கீழ் இருந்த தில்லி,பிறகு பிரித்திவிராஜ் சௌஹன் கைக்கு மாறியது.அதே 12ஆம் நூற்றாண்டில்,முஹம்மது கோரி என்ற துர்க்க இனத்து முஸ்லிம் அரசன் தான் முதன் முதலில் தில்லியை கைப்பற்றினான். ( பிரித்திவிராஜ சௌஹன்-கோரி போரைப் பற்றி விரிவாகப் படிக்க இங்குச் செல்லவும் ). ஆக,12ஆம் நூற்றாண்டு வரை தில்லி,ஹிந்து அரசர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.தில்லியை முஸ்லிம்கள் 12ஆம் நூற்றாண்டில் தான் முதன் முதலாக கைப்பற்றுகின்றனர்.வட நாட்டுப் பகுதிகளை ஆக்கிரமிக்கவே முடியாமல் தினறிய முஸ்லிம் மன்னர்கள்,11ஆம் நூற்றாண்டில் தில்லி வரை ஆட்சி புரிந்தனர் என்றால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.ஆக,ராமானுஜர் வாழ்ந்தக் காலத்தில், தில்லியில் முஸ்லிம் மன்னர்களது ஆட்சி நடக்கவில்லை என்பது நன்கு தெரிகிறது.

இந்த  சரித்திரக் குறிப்பு ஒன்றே போதும்,துலுக்க நாச்சியார் கதை முழுவதுமாக நொறுங்கி விழுகிறது.இருப்பினும்,ஆர்யத் தமிழன் மேலும் சீண்டும் விதமாக சில கருத்துக்களைத் தெரிவித்ததால்,அவற்றுக்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது.அவற்றையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

//சிவனே பரதெய்வம் என சொல்லும் ஒரு தமிழ் சங்க இலக்கியம் நீர் காட்டமுடியுமா? //

விஷயம் தெரியாமல் வாய்ச் சவடால் விடுவது இவர் போன்ற வைணவ வெறியர்களுக்குப் புதிது அல்ல.இருப்பினும் சங்க இலக்கியங்களில் சிவபிரானே பரம் என்று கூறும் பாடல்கள் ஆயிரக்கணக்கில் உண்டு.முதலில் பரிபாடலில் விஷ்ணு தான் இறைவன் என்று கூறப்படவில்லை.சிவாம்சமான முருகனைத் தான் இறைவன்/பரமாத்மா என்று கூறுகிறது.விரிவான விளக்கம் இங்கு உள்ளது .

சங்க இலக்கியம் சிலவற்றில் சிவபிரானே இறைவன் என்று கூறும் பாடல்கள் இதோ :

நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்  (புறம் 166)

பொருள் :  பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினையுடைய முதிய
இறைவனது வாக்கை விட்டு நீங்காது அறமொன்றையே
மேவிய நான்கு கூற்றையுடைத்தாய்  ஆறங்கத்தாலும் உணரப்பட்ட
ஒரு  பழைய நூலாகிய வேதத்துக்கு...

கருத்து :வேதத்தை உருவாக்கிய வேத நாயகன்,இறைவன் சிவபிரான்

சங்க இலக்கியங்களில் உன்னத இடத்தைப் பிடித்திருப்பது திருக்குறள்.அதுவே ஒரு சைவ நூல் என்பதை சான்றொர் பலர் நிறுவிட்டனர்.திருக்குறளின் உரைகளில் சிகரமாய் உள்ள பரிமேலழகர் உரையும்,திருக்குறள்,சிவாகமங்களின் கருத்தைக் கூறுவதாக வஜ்ர மலை என ஸ்தாபித்து விட்டது.சில குறள்களைப் பார்ப்போம் :

1. "கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" - (திருக்குறள் - 9)

பொருள் : எண்குணத்தை உடையவனின் திருவடிகளை வணங்காத தலை,புலன்கள் இல்லாத பொறிகளைப் போல் (இருந்தும் பயனில்லை.)

விளக்கம் :இறைவனை எண்குணத்தான் என்கிறார் திருவள்ளுவர்.எண்குணத்தான் எனும் பெயர் சிவபிரானுக்கு மட்டுமே உரியப் பெயர்.விஷ்ணுவுக்கு எண்குணத்தான் என்றப் பெயர் கிடையாது. வைணவ ஆகமங்களிலும் அப்படி கூறப்படவில்லை.சிவாகமங்களில் மட்டுமே இறைவனுக்கு எட்டு குணங்கள் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.அதனால் தான் ஸ்ரீ பரிமேலழகர் தமது உரையில் "இவ்வாறு சைவாகமத்திற் கூறப்பட்டது" என்றார்.

அந்த எட்டு குணங்கள் :

1. தன்வயத்தனாதல் - சுவதந்திரத்துவம்

2. தூயஉடம்பினனாதல் - விசுத்ததேகம்

3. இயற்கை உணர்வினனாதல் - நிராமயான்மா

4. முற்றுமுணர்தல் - சருவஞ்ஞத்துவம்

5. இயல்பாகவே பாசங்களினீங்குதல் - அனாதிபோதம்

6. பேரருளுடைமை - அலுப்த சத்தி

7. முடிவிலாற்றலுடைமை - அநந்த சத்தி

8. வரம்பிலின்பமுடைமை - திருப்தி.

திருக்குறளில் கூறப்பட்ட ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயிலைந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழி அந்தணன் போன்றவை அனைத்தும் சிவபிரானையே குறிக்கிறது.ஏனெனில் எண்குணத்தான் என்று இறைவனை புகழ்ந்த வள்ளுவர்,அந்த இறைவனையே குறிக்கும் பல சொற்களை கையாண்டார்.எண்குணத்தான் என்பது சிவபிரானை மட்டும் குறிக்கும் என்று மேலே நாம் பார்த்தோம்.ஆக,திருக்குறளில் இறைவனை குறிக்கும் சொற்கள் அனைத்தும் இறைவனாகிய சிவபிரானை மட்டுமே குறிக்கும் என்பதே உண்மை.

நான் இங்கு கொடுத்தது சில ஆதாரங்கள் தான்.சங்க இலக்கியத்தில் ஆயிரக்கணக்கில் சிவப்பர பாடல்கள் உண்டு.விஷ்ணு,இந்திரன் போன்ற சாதாரண தேவர்களை சங்க இலக்கியம் புகழ்ந்துள்ளது,ஆனால் சிவபிரான் மற்றும் அவரது அம்சமான ஸ்கந்தப் பெருமான் போன்றவர்களை மட்டுமே இறை ஸ்தானத்தில் சங்க இலக்கியம் வைத்துள்ளது.

//  திருமாலே மோட்சத்தினை தரும் தெய்வம் என வடமொழி வேதமும், சங்கத்தமிழ் இலக்கியம் (பரிபாடல் போன்றவை) கல்வெட்டாக தெரிவிக்கின்றன//

சங்க இலக்கியம்  மட்டுமின்றி,சதுர்வேதமும் சிவபிரான் மட்டுமே இறைவன் என்று ஸ்தாபிக்கின்றன.வேதத்தின் 108 உபநிஷத்துக்களும் சிவபிரானையே இறைவனாக போற்றுகிறது. அதனைத் தனியாக ஒரு பதிவில் பார்ப்போம்.

//  உலகின் எந்த மதமானாலும் அது அத்வைத, விசிட்டாத்வைத, துவைத மதத்தின் சாயல் படியாது இருக்காது என்கிறார் சுதந்திர போராட்ட வீரர் எனது இதயதெய்வம் ஸ்ரீ ஸூப்ரமணிய சிவம் //

சுப்ரஹ்மண்ய சிவா என்ன சமயப் பண்டிதரா ? தேச விடுதலைப் போராட்டத்தில் அவர் சிரேஷ்டர்,சிறந்தவர்.ஆனால் அதற்காக சமய விஷயத்தில் அவர் கருத்தைப் பார்ப்பது நகைப்புக்குரியது.சைவம் என்பது,இந்த மூன்று மதங்களைச் சாராத தனியொரு மதம்.இன்னும் சொல்லப் போனால்,சைவத்திலிருக்கும் சிலக் கொள்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றை மட்டும் முன்னிறுத்தி பரவினதே பிற மதங்கள்.உதாரணத்திற்கு சைவத்தில் உள்ள திருமடம் அமைக்கும் கொள்கையை பௌத்த,சமண மதங்கள் கையாண்டன.சிவாகமங்களில்,நான்கு ஆதிசைவ மடங்கள் பற்றி பல குறிப்புகள் உண்டு.அது மாதிரியே சைவத்தில் உள்ள "இறைவனுக்கு பிறக்கு இறப்பு இல்லை","இறைவனுக்கு உருவம் இல்லை" போன்ற கொள்கைகளை இஸ்லாம் போன்ற மதங்கள் ,சில மாற்றங்களுடன் பின்பற்றுகின்றன.அதே போல்,சைவத்தில் விஷ்ணு தேவர் ஒரு பெரும் சிவனடியார் முதல்வராக போற்றப்படுகிறார்.அவரை இறைவனாக வைணவம் முன்னிறுத்துகிறது. இதைத் தான் வாயவ்விய சம்ஹிதை இவ்வாறு கூறுகிறது : "பிற நூல்களிற் கூறப்பட்டதெல்லாம் சிவாகமத்தில் இருக்கின்றது. சிவாகமத்திற் காணப்படாதது பிறிதோர் இடத்திலும் இல்லை" .இதன் உட்கருத்து,இறைவனான சிவபிரான் அருளிய சிவாகமங்களில் கூறப்பட்ட சிறந்த கொள்கைகள் பிற மதங்களில் நாம் காணலாம்,ஆனால் சிவாகமங்களில் இல்லாத உன்னத விஷயங்களை பிற மதங்களில் காண முடியாது.

//சரபர் ஸ்ரீநரசிம்ஹரை அடக்கியதாக பல வருடமாக பொய்பிரசாரம் செய்வது யார்?  http://aggraharam.blogspot.in/2013/03/blog-post_21.html படித்து உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.//

பிரமாண்டப் புராணத்தில்,நரசிம்மர் சரபரை அடக்கியதாக உள்ளது என்று கூறுகிறார்.முதலில் புராணம் என்பது ஆதார நூல் வரிசையில் கடைக்கோடியில் இருப்பது.புராணங்களில் இடைசெருகல்கள் மிகுதியாக காணப்படுவதால்,புராண ஆதாரத்தை சந்தேகிக்க நேரிடும்.புராணத்தைவிட ஸ்மிருதி வலிமையானது,ஸ்மிருதியைவிட ஸ்ருதி வலிமையானது.நரசிம்மம் சரபத்தை அடக்கியதாக எந்த ஸ்ருதி(வேதம்) ஆதாரமும் இல்லை.ஆனால் நரசிம்மத்தை சரபர் கொன்றதாக வேத ஆதாரம் உண்டு.ஸ்ரீ சரப உபநிஷத்தில் :

1. " எவர் விஷ்ணுவையும் விஷ்ணுவின் அவதாரங்களான மச்சம்,கூர்மம்,வராகம்,நரசிங்கம் முதலியவற்றையும் வாட்டி பீடிக்கின்றாரோ அந்த ருத்ரருக்கு நமஸ்காரம் ஆகுக

2."பயங்கரமான சரப வேஷம் தாங்கி உலக பீடிதமாயிருந்த நரசிம்ஹத்தை ஹிம்சித்தவரும்,பாதங்களால் ஹரியை ஹரிக்கின்றவரும்,புருஷ ரூப விஷ்ணுவை வதம் செய்யாமல் தேவரீரது பராக்கிரமத்தை மாத்திரம் காட்டியருள வேண்டும் என்று சர்வ தேவர்களாலும் மகாராத்திரியில் பின்தொடர்ந்து பிரார்த்திக்கப்பட்டவரும்,கிருபையினால் நரசிங்கத்தின் உடம்பினது  தோலை கிழித்து உரித்து எடுத்து,வஸ்திரமாக அணிந்துக் கொண்டவரும்,மஹாப்லமுள்ள வீரபத்திர மூர்த்தி ஆனவரும், ஆகிய எவர் உண்டோ,அந்த ருத்திரர் ஒருவரே தியேயர்"

இதே போல்,உபநிஷத் வாக்கியம் காட்ட முடியுமா இவர் ? கடைசியில்,சரப உபனிஷத்,பிற்காலத்து இடைசெருகல் என்று அத்வைதிகள்,விசிஷ்டாத்வைதிகள்,மாத்வர்கள் கூறுவது போல் கூறலாம்.ஆக,வேதம் மொத்தத்தையும் எந்தக் கேள்வியோ,மாற்றுக் கருத்தோ இல்லாமல் பின்பற்றுபவர்கள் சைவர்கள் மட்டுமே என்பது வெளியாம்.நாங்கள் வேதத்தின் கர்மகாண்டத்தையும்,ஞானகாண்டமாகிய 108 உபநிஷத்துக்களையும் பின்பற்றுகிறோம்.ஆக,உண்மையான வைதீகர் சைவர் அன்றி பிறர் அல்லர்.

//திருமண் இல்லாவிட்டால் திருமாலையே வணங்குவாராம் சைவத்தின் போர்வாள் சிரிப்புத்தான் வருகிறது. அப்படியானால் ஏசுநாதருக்கு திருமண் இல்லை வணங்குவீரா?//

முட்டாள் தனமான கேள்வியாக இவர் கேட்கிறாரே.வைணவாலயங்களில் விஷ்ணு தேவரின் விக்ரஹம் சர்வ சாஸ்திரங்களிலும்கூறியப்படி விபூதி அணிவிக்கப்பட்டு இருந்தால்நான் அவ்விக்ரஹத்தை வணங்குவேன் என்றுதான் சொன்னேன் ஒழிய நாமம் இல்லாமல் இருந்தால் வணங்குவேன் என்று சொல்லவில்லை.ஏசுவின் விக்ரஹம் நாமம் அணியவில்லை அதேபோல் விபுதியையும் அல்லவா அணியவில்லை.அதை எப்படி வணங்குவது இதை எல்லாம் சிந்திக்க மாட்டாரா சர்வ சாஸ்திரங்களும் விஷ்ணு விபுதி ருத்ராக்ஷம் அணிபவர் என்றே கூறுகின்றன.இங்குபடிக்கவும் :

1. http://swordofsivadharma.blogspot.my/2016/11/blog-post_4.html

2.http://swordofsivadharma.blogspot.my/2016/07/blog-post_30.html



5 comments:

  1. https://aggraharam.blogspot.in/2017/05/blog-post.html

    ReplyDelete
  2. 1) சங்க இலக்கியம் மட்டுமின்றி,சதுர்வேதமும் சிவபிரான் மட்டுமே இறைவன் என்று ஸ்தாபிக்கின்றன???

    ஓங்கு பரிபாடல்!

    மா அயோயே! மாஅயோயே!
    மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
    மணி திகழ் உருபின் மா அயோயே!
    தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
    ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,

    திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
    மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
    தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
    மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
    மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்

    மாயா வாய்மொழி உரைதர வலந்து
    'வாய்மொழி ஓடை மலர்ந்த
    தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
    நீ' என பொழியுமால், அந்தணர் அரு மறை!


    2) முதலில் புராணம் என்பது ஆதார நூல் வரிசையில் கடைக்கோடியில் இருப்பது???? சரப உபநிஷத்?

    The Sharabha Upanishad (Sanskrit: शरभ उपनिषत्, IAST: Sharabha Upaniṣad) is a minor Upanishads of the Atharva Veda. In a Telugu language anthology of 108 Upanishads of the Muktika in the modern era, narrated by Rama to Hanuman, it is listed at serial number 50. The Upanishad is not part of the anthology of 52 popular Upanishads in north India by Colebrooke, nor is it found in the Bibliotheca Indica anthology of popular Upanishads in south India by Narayana. It is one of the 13 Shaiva Upanishads.

    (A)POINT TO BE NOTED: "In a Telugu language anthology of 108 Upanishads of the Muktika in the modern era, narrated by Rama to Hanuman, it is listed at serial number 50."

    (B)ALSO NOTE: The Upanishad is not part of the anthology of 52 popular Upanishads in north India by Colebrooke, nor is it found in the Bibliotheca Indica anthology of popular Upanishads in south India by Narayana.

    புராணம் என்பது ஆதார நூல் வரிசையில் கடைக்கோடியில் இருப்பது என்றால், சரப உபநிஷத் as per (B) ஆதார நூல் வரிசையிலேயே இல்லையே!!!

    3) சங்க இலக்கியங்களில் உன்னத இடத்தைப் பிடித்திருப்பது திருக்குறள்.அதுவே ஒரு சைவ நூல் என்பதை சான்றொர் பலர் நிறுவிட்டனர்.திருக்குறளின் உரைகளில் சிகரமாய் உள்ள பரிமேலழகர் உரையும்,திருக்குறள்,சிவாகமங்களின் கருத்தைக் கூறுவதாக வஜ்ர மலை என ஸ்தாபித்து விட்டது?????

    பரிமேலழகர் – (3 வகையான 8 பிரிவுகளைக் காட்டுகிறார்)
    (1)சைவ ஆகமத்தில் கூறப்பட்ட எண்வகைப்பட்ட குணங்கள் - தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பன.
    (2) அணிமா முதலாக உடையன எட்டை எண்குணம் என்பர்
    (3) கடையில்லா அறிவை முதலாக உடையன என்பர்

    என்று மூன்று கூற்றுக்கள் இருப்பதாக பரிமேலழகர் கூறியதைத் திரித்து சிவனையே வள்ளுவர் கூறுகின்றார் என்னும் நீர், "திருமாலுக்கு அடிமை செய்" என்னும் அவ்வையின் ஒரே வரியை மறந்ததும் ஊழோ?

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅயது எல்லாம் ஒருங்கு

    பரிமேலழகர் உரை: அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.
    ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)
    சிவனார் உலகளந்ததாக சரித்திரமே இல்லையே! அதுவும் வேதத்திலே சொல்லுமே பார்ப்போம்? த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய என்று வேதம் சிவனாரை குறித்தது என்பீரோ?

    தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு
    பரிமேலழகர் உரை: (நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது.) தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.

    ----------------

    நீர் சிவனை வழிபடும் அல்லது திருமாலை அல்லது யாரை வேண்டுமானாலும் வழிபடும். ஆனால் அதற்காக பொய்யை பரப்புவது சால்பல்ல!

    "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்!!!"

    நீர் என்னை சிவ துவேஷி என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. நான் நடுநிலை கொண்ட தமிழன். அவ்வளவே!

    ReplyDelete
  3. இந்துவாக வாழ்வோம். நம்மை பாழாய்படுத்திய சைவ வைணவ சண்டை குப்பைகளை பெருக்கி துடைத்து குப்பையில் போடுவோம்.மதங்கள் பரிணாமம் அடைய வேண்டும். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் பரிணாமம் அடைய வேண்டும்.தடுத்தால் வீழ்ச்சிதான்.பழையன கழிய வேண்டும்.புதியன் சேர வேண்டும்.அதுதான் உயிரின் தத்துவம்.தேங்கிய குட்டைநீா் நாறிவிடும். ஸ்ரீராமகிருஷ்ணா்-சுவாமிவிவேகானந்தா் -ஸ்ரீசாரதா அம்மையாா் சந்நிதியில் அனைவரும் பேதங்களை மறந்து பிரார்த்தனை செய்வதை காணுங்கள். ஸ்ரீ நாராயணகுரு 59 சந்நிதியில் 58 யை உடைத்து ஒரு கோவில் ஒரு சிலை ஒருவிளக்கு என்று மதத்தை எவ்வளவு எளிமைபடுத்தியிருக்கின்றாார் படிக்கவில்லையா ?மதவெறி கண்ணை மறைக்குதா ? இந்து சமுகத்தை பாழாக்க வேண்டாம்.

    ReplyDelete
  4. நரசிம்மமும் வேண்டாம்.சரபேசுவரரும் வேண்டாம். இரண்டுமே கட்டுக்கதைகள்தாம்.

    ReplyDelete
  5. அனைத்து இந்துக்களுக்கும் -குறிப்பாக தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட சாதி மக்களுக்கு சரியான சமய அனுஷ்டானங்களை குறைந்த அளவாவது கற்றுக் கொடுக்க வேண்டும்.வீடுதோறும் மாலையில்சிவபுராணம் பாடும் பழக்கத்தையாவது கொண்டு வாருங்கள். கிறிஸ்தவ -அரேபிய மத சமூகங்கள் கல்வி தொண்டு செய்து ஒங்கிவருகின்றன.தொளுகை இசுலாமிய மக்களை எவ்வளவு ஒழுங்கு படுத்துகின்றது தெரியுமா ? இந்துக்கள் ஆதிவாசிகள் போல் வாழ விட்டு விட்டதால் சாராயக்கடைகளை நாடு சினிமாவை நாடி ......பல கேடுகளை நாடி ஒடி வீணடித்து வருகின்றார்கள். மாபெரும் கலாச்சார சீரழிவை இந்துக்கள் சந்திக்க இருக்கின்றோம். கவனம்.

    ReplyDelete

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்