|| சிவாத்பரதரம் நாஸ்தி ||
திராவிடக் கழகத்தவரும் முஸ்லிம்,கிருத்தவர் போன்ற அந்நிய மதத்தவர்களும் வேதத்தின் உண்மைகளை அறிவுப்பூர்வமாக தகர்க்க முடியாததால்,அதில் தவறு இருப்பது போல் சில புளுகுகளை கற்பித்துக்கொண்டு இருப்பார்கள்.அதில் ஒன்று தான் வேதம் ஏற்றத் தாழ்வை கற்பிக்கிறது எனும் புரட்டு.இதற்கு ஆதாரமாக இவர்கள் கூறும் பகுதி,புருஷ சூக்தம்.ரிக் வேத ,புருஷ சூக்தத்தில்,விராட புருஷனின் தலை,கை,தொடை,பாதங்களில் இருந்து முறையே பிராமணர்,க்ஷத்திரியர்,வைஸ்யர்,சூத்திரர் உருவாகினர் என்று உள்ளதாம்.சூத்திரர் காலில் இருந்து வந்ததாலும்,பிராமணர் தலையில் இருந்து வந்ததாலும் பிராமணரை உயர்த்தியும் சூத்திரரை தாழ்த்தியும் உள்ளதாம்.
முதலில், இவர்கள் சில கட்டுரைகளில் பிரம்மன் உறுப்புகளில் இருந்து நால்வர்ணம் இவ்வாறு உற்பத்தியாகிறது என்று கூறுகின்றனர்.இது தவறு.விராட புரஷன் என்பது இறைவனான பரசிவத்தையே குறிக்கிறது.புருஷ சூக்தத்தில் ,விராட புருஷனுக்கு ஆயிரக்கணக்கான தலைகள் முதலிய உறுப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.இது இறைவனது எங்கும் நிறைந்திருக்கும் தன்மையை,விஸ்வ ரூபத்தை குறிக்கிறது :
1.
"எங்கும் கண்ணையும் எங்கும் முகத்தையும் எங்கும் கையையும் எங்கும் அடியையும் உடையவராய் ,தமது கரங்களினாலும் சிறகுகளினாலும் மண்ணையும் விண்ணையும் இயைத்துப் படைப்பவர் அந்தக் கடவுள் ஒருவரே" - ரிக் வேதம் (10/81/3)
2.
"(சிவபெருமானாகிய) புருஷர் ஆயிரம் தலைகளையும் ஆயிரம் கண்களையும் ஆயிரம் கால்களையும் உடையவர்" -ஸ்வேதாஸ்வதார உபநிஷத் (3/14)
ஆக,விராட புருஷர் என்பவர் பிரம்ம தேவர் கிடையாது,மாறாக இறைவனையே குறிக்கிறது.இப்பொழுது புருஷ சூக்த கருத்துக்கு வருவோம்.
விராட புருஷராகிய இறைவன் (பரசிவம்) கால்களில் இருந்து சூத்திரர் வந்ததாக கூறப்படுவது எங்ஙனம் இழிவு ? முதலில்,இறைவனது வடிவில் உள்ள உறுப்புக்களில்,இந்த உறுப்பு உயர்ந்தது,இந்த உறுப்பு தாழ்ந்தது என்று வகைப்படுத்த முடியுமா ? இழிந்த உறுப்பை எப்படி இறைவன் கொண்டிருக்க முடியும் ? அது அவரது இறைத்தன்மைக்கே இழுக்கல்லவா ? அப்படியிருக்க எங்ஙனம் இறைவனது பாதம் இழிவானது ?
சைவம்,வைணவம் போன்ற இந்தியச் சமயங்களில்,இறைவனை புகழும்போது ,அவனது திருவடியைத் தானே புகழ்கிறோம் ? ஸ்ரீ ராஜராஜசோழருக்கு "சிவபாதசேகரன்" என்ற பட்டம் உள்ளது,அதன் அர்த்தம் "சிவபிரானின் திருவடிகளை மகுடமாகக் கொண்டவர்" .இறைவனது திருவடி போற்றி,இறைவனது திருவடி வாழ்க என்று தானே புகழ்கிறோம் ? எங்கேயாவது இறைவனது தலை போற்றி,இறைவனது கைகள் போற்றி,இறைவனது தொடைகள் போற்றி என்றா புகழ்கிறோம் ?ஆக,இறைவனது தலைமைத்துவத்தையும்,ஆன்மாக்களாகிய நம்முடைய அடிமைத்திறத்தையும் சுட்டிக் காட்டவே இறைத் திருவடிகளை புகழ்கிறோம்.அப்படிப்பட்ட இறைத் திருவடிகளில் இருந்து வந்ததாக கூறப்படும் சூத்திரர் எங்ஙனம் தாழ்ந்தவர் என்று வேதம் சித்தரிப்பதாக இந்த வேத விரோத மிலேச்சக் கூட்டங்கள் கூறுகின்றன ?
மேலும்,சைவ சமயத்தின் ஆதார நூல்களான 28 சிவாகமங்களில் ஒன்றான காமிகாகமம்,சிவபிரானின் திருவடிகள் என்று வர்ணிக்கப்படுகிறது. விராட புருஷனின் (சிவன்) திருவடி இழிவு என்றால், காமிகாகமும் இழிவு என்றல்லவா ஒதுக்கப்பட வேண்டும் ? ஆனால் பெரும்பாலான சிவாலயங்கள் காமிகாகமத்தை தான் பின்பற்றுகின்றன. அதனால் திரும்பத் திரும்ப இந்த மிலேச்சக் கூட்டங்களின் குற்றச்சாட்டு சரிந்து விழுந்துக்கொண்டே உள்ளன.
இறுதியாக, ஏன் விராட புருஷனின் உறுப்புகளில் இருந்து நால்வர்ணம் பிறந்ததாகக் கூறப்படுகிறது என்றால்,ஒரு மனிதனுக்கு அனைத்து உறுப்புக்களும் ஒற்றுமையாக இயங்கினால் தான் அவன் ஒழுங்காக வாழ முடியும்.அதே போல்,இச்சமூகத்தில் உள்ள நால்வர்ணத்தவருக்கும் ஒருத்தரின் தயவு இன்னொருத்தருக்குத் தேவை,ஆகையால் ஒற்றுமையாக வாழ வேண்டும்,அப்பொழுது தான் சமூகம் உயரும்.இதைத் தான் குறியிடாக(symbolic) புருஷ சூக்தம் கூறியது. இதை எல்லாம் அறியாத மிலேச்ச மூடர்கள்,இப்படி சிறுபிள்ளைத்தனமாக பிதற்றினால்,அவர்கள் முகத்தில் இந்த ஆதாரங்களை தூக்கி வீசுங்கள் !
Post Top Ad
Monday, 12 December 2016
Home
சிவ தர்மம்
சிவாகமம்
சூத்திரர்
வேதம்
விராட புருஷனும் சூத்திர வர்ணமும் மிலேச்சர்களின் புரட்டும் !!!
விராட புருஷனும் சூத்திர வர்ணமும் மிலேச்சர்களின் புரட்டும் !!!
Tags
# சிவ தர்மம்
# சிவாகமம்
# சூத்திரர்
# வேதம்
About சிவபாத சேகரன்
வேதம்
Labels:
சிவ தர்மம்,
சிவாகமம்,
சூத்திரர்,
வேதம்
Subscribe to:
Post Comments (Atom)
சைவ க்ஷத்திரியத்வம்
இணையத்தள உரிமையாளன்
சைவத்தின் போர்வாள் (வேதாசலம் பிள்ளை)

No comments:
Post a Comment