தக்ஷன் வேள்வியை சிவபிரான் அழித்ததன் உட்கருத்து - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Monday, 12 December 2016

தக்ஷன் வேள்வியை சிவபிரான் அழித்ததன் உட்கருத்து

                                                      || சிவாத்பரதரம் நாஸ்தி || 

நண்பர்களே, சிவபிரான் தக்ஷன் வேள்வியை தகர்த்த சரித்திரம் பெரும்பாலான புராணங்களிலும் இதிஹாசங்களிலும் கூறப்பட்ட ஒரு பிரபலியமான சம்பவம்.புராணேதிஹாசங்கள் மட்டுமின்றி வேதத்திலேயே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி சங்க இலக்கியம் மற்றும் தேவாராதி திராவிட ஸ்ருதிகளிலும் (தமிழ் மறைகள்) வெகுவாக புகழப்பட்ட ஒரு விஷயம்.அனைத்து சாஸ்திர புகழ்ச்சிக்குட்பட்ட இச்சம்பவம் கூறும் உண்மை பொருள் என்ன ? அதைப் படிப்படியாக ஆராயலாம்.முதலில் வேதத்தில் தக்ஷன் வேள்வியை தகர்த்த சரித்திரத்தைப் பார்ப்போம்.


1.
பூஷாப்ராச்யததோருணத் தஸ்மாத்பூஷாப்ரபிஷ்டபா கோந்த கோஹிதம் தேவா அப்ருவந் | " - எஜுர் வேத தைத்திரிய சம்ஹிதை 
பொருள் : அவர்கள் பூஷன் உண்ணுமாறு அதனைக் கொடுத்தார்கள் ; ருத்திரர் அவன் பற்களை உடைத்தார் ; தேவர்கள் சிவபிரானை யஞ்ஞத்தினின்று விலிக்கச்,சிவபிரான் யஞ்ஞத்தை அழித்தார்

2.
"தத்பகாய தக்ஷினாத : ஆஸிநாய பர்யாஜஹ்ரு :| தத்பகோவீஷாஞ் சக்ரே தஸ்யாஷிணி நிர்ததாஹ " -சதபத ப்ராஹ்மணம்
பொருள் : வலப்பக்கத்தில் இருக்கும் பகனுக்கு அதைக் கொடுத்தார்கள் ; அவன் அதனைப் பார்த்தான் ; அவர் அவன் கண்களைத் தகித்தார்

3.
"யோதக்ஷயஜ்ஞே ஸூரசங்காத்  விஜித்ய விஷ்ணும் பபந்தோரக  பாசேந வீர: தஸ்மை ருத்ராய நமோ அஸ்து " - சரப உபநிஷத்
பொருள் : எந்த வீரர் தக்ஷயாகத்திலே தேவக்கூட்டங்களை ஜெயித்து விஷ்ணுவை நாகபாசத்தினால் (பாம்புக் கயிற்றால்) கட்டினாரோ ,அந்த ருத்திரருக்கு நமஸ்காரம் ஆகுக


மேலே உள்ள ஆதாரங்களில் முதல் வசனத்தில் , சிவபிரானை யாகத்திலிருந்து விலக்கி வைத்ததால்,யாகத்தை சிவபிரான் அழித்ததாக வருகிறது.யாகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதால் ஏன் அதை அவர் அழிக்க வேண்டும் ? வேதம் இதற்கும் பதில் சொல்கிறது :

4.
"ஸம்ஸ்தயாகாநாம்ருத்ர : பசுபதி : கர்த்தா |
ருத்ரோயாகதேவ :| விஷ்ணுரத்வர்யு :| " - பாசுபத ப்ரஹ்ம உபநிஷத்

கருத்து :  ருத்ரன் யாகதேவன்,விஷ்ணு அத்வர்யு..
அத்வர்யு= யக்ஞம்  செய்விக்கும் ருத்விக்கு என்பவர்களில் ஒருவர்.இவர் பணி யாகம்
அங்ஙனம் நடத்த விதி சொல்லுவது.

ஆக,சிவபிரானே யாகத்தின் பலனை கொடுப்பவர்(யாக தேவன்)  என்றும்,அதனால் அவரையே யாகத்தின் மூலம் வழிபட வேண்டும் என்றும் வேதம் வலியுறுத்துகிறது.எந்த ஒரு வழிபாட்டின் மூலமும் சிவபிரானை,அவரது அடியவரான பிற தேவர்களுடன் சமப்படுத்தி வழிபடக் கூடாது என்பதை ஒரு ப்ரார்த்தனையாகவே வேதம் கூறுகிறது :


5.
"மாத்வாருத்ர பிக்ருதாமா நமோ நமோபிர்மாதுஷ்டு தீவ்ருஷபமாஸஹதி" - ருக்வேதம்

பொருள் : சுரச்சிரேஷ்ட பிரபுவாகிய ஹே ருத்திரமூர்த்தி ! உன்னை இதர தெய்வங்களோடு நமஸ்காரங்களாலும் ,துஷ்ட ஸ்தோத்திரங்களாலும் ,ஆஹ்வானங்களாலும் கோபிக்கச் செய்ய மாட்டோம்

புராணமும் இதே கருத்தை வேறுவிதமாகக் கூறுகிறது :

6.
"யோமஹாதேவ மந்யே ந்ஹீக தைவேநதுர்மதி: ஸக்ருத் ஸாதாரணம் ப்ரூயாத் ஸோந்த்ய ஜோநாந்த்யஜோந்த்யஜ:"

பொருள் : எவன் அந்நியமான ஹீன தெய்வங்களோடு சமானமாக ஒரு வார்த்தையாவது மஹாதேவரைப் பேசுவானோ ,அந்தத்துர்மதியே சண்டாளன் ஆவான் அன்றி லோகப் ப்ரதீயால் சண்டாளன் என்று அழைக்கப்படுபவன் சண்டாளான் ஆகான்

ஆக,தக்ஷயாக அழிப்புச் சம்பவம் மூலம்,வேதங்களும் புராணங்களும் கூறவரும் உட்கருத்து ,வழிபட தக்க ஒரே இறைவன் சிவபிரானேயாம்.அவனையே மட்டுமே யாகத்தின்மூலம் வழிபட வேண்டும் ,ஏனெனில் அவனே யாகதேவன். சிவபிரானை வழிபடாமல், கண்ட ஹீன தெய்வங்களை எல்லாம் வழிபடுவதன் மூலம் யாக பலன் கிட்டாது.ஆக,இன்று நம் நாட்டில் ஆயிரக்கணக்கான யாகம் நடத்தப்பட்டும் பெரிதாக நன்மை ஏதும் ஏற்படவில்லை ஏனெனில்,சிவபிரானை யாகத்தின்மூலம் அவர்கள் வழிபடவில்லை.அதனால் தான் யாகப் பலனை சிவபிரான் அருளவில்லை.இனியேனும் யாகம் நடத்த இருப்பவர்கள் ,இதைக் கருத்தில் கொண்டு முழுமுதல் இறைவனான சிவபிரானையே யஞ்ஞத்தின் மூலம் வழிபடுக.அப்பொழுதான் பலன் கிட்டும்.இல்லையேல் நாட்டுக்கும் மக்களுக்கும் கேடு தான் பெருகும்.


No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்