|| சிவாத்பரதரம் நாஸ்தி ||
ஸ்ரீ க்ருஷ்ண பிரான் பல மேன்மைகளை அடைந்தது சிவபிரான் வரத்தால் என்று மஹாபாரதம் கூறுகிறது.
"பிநாகம் என்ற வில்லைத் தரித்தவரும் ..ரிஷிகளால் துதிக்கப்பட்டவருமான தேவதேவர்..அந்த விஷ்ணுவின் பொருட்டு வரங்களைக் கொடுத்தார்...பகவான், ' நாராயணரே ! என் அனுக்கிரகத்தினால் மனிதர்கள் தேவர்கள் கந்தர்வர்கள் இவர்களைக் காட்டிலும் மனத்தினால் சிந்திக்கமுடியாத பலம் ஸ்வரூபம் இவைகளோடு கூடியவராக நீர் ஆகப்போகிறீர்..உம்மை தேவர்களும் அசுரர்களும் சர்ப்பங்களும் பிசாசங்களும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் ஸாபர்ணர்களும் அவ்வாறே நாகர்களும் இன்னும் பற்பல ஜாதிகளில் தோன்றிய எல்லா பிராணிகளும் ஸகிக்கமாட்டார்கள்..உம்மை யுத்தங்களில் தேவனாக இருந்தாலும் ஒருவனும் ஜெயிக்க மாட்டான் ..என் அனுக்ரஹத்தினாலே ஒருவனாவது உம்மை ஆயுதத்தினாலும் வஜ்ரத்தினாலும் நெருப்பினாலும் நீரினாலும் ஈரமானதாலும் உலர்ந்ததாலும் ஜங்கமத்தாலும் ஸ்தாவரத்தாலும் கையினாலும் காலாலும் கட்டையினாலும் மண்னாங்கட்டியினாலும் எவ்விதத்தாலும் ஹிம்சிக்க மாட்டான் ..மேலும் யுத்தத்தை நீர் அடைவீராயின் என்னை காட்டிலும் மேற்பட்டவராவீர்' என்று கூறினார்...பிறகு சூலபாணியான ருத்திரருடைய அனுக்ரஹத்தினாலே இவைமுதலான வரங்களைப் பெற்று அந்தத் தேவரே மாயையினால் உலகை மயக்கிக்கொண்டு சஞ்சரிக்கிறார்" - துரோண பர்வம் ,202ஆம் அத்யாயம்
ஆக,உலகத்தவர் மத்தியில் க்ருஷ்ணர் பெரும்புகழ் கொண்டுள்ளது சிவபிரானது அனுக்ரஹத்தால் ஒழிய வேறில்லை என்பதை அறியலாம்..சிவபிரானை பூஜிப்பவருக்கு இறைவனான சிவபிரான் மேன்மைகளைக் கொடுப்பார் என்பதற்கு சிவனடியார் ஸ்ரீ க்ருஷ்ணர் ஓர் உதாரணம்.

சிவபுராணங்கள் சாத்துவிகம் தான் என்பதை எப்படி நிரூபணஞ் செய்வது?
ReplyDelete