அரபு இஸ்லாமிய படையெடுப்பை முறியடித்த ராஜஸ்தான் சைவ சிம்மம்,பப்பா ரவல் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Sunday, 8 January 2017

அரபு இஸ்லாமிய படையெடுப்பை முறியடித்த ராஜஸ்தான் சைவ சிம்மம்,பப்பா ரவல்


சிவமயம்
ஸ்ரீ பரசிவப் பிரபு திருவடி போற்றி
சைவ சித்தாந்த ஆச்சாரியர்கள் திருவடி போற்றி


சிந்து தேசத்தின் மீது ஆறு முறை படையெடுப்புக்களை அனுப்பியது உமையா கலிப்பா முஹம்மதிய அரசு. அதில் ஐந்து படையெடுப்புக்கள் சிந்து தேசத்துப் படையிடம் படுதோல்வி அடைந்தது.ஆறாம் படையெடுப்பு மட்டுமே,இப்னு கஸீம் தலைமையில் வெற்றிப் பெற்றது,அதுவும் சூழ்ச்சியால்.சிந்தை கைப்பற்றிய முஹம்மதிய அரசு,பாரதத்திற்குள் இன்னும் ஆழமாக வேரூன்ற பல படையெடுப்புக்களை நிகழ்த்தியது.வட நாட்டிலுள்ள ராஜஸ்தான் பகுதியின் மீது முஹம்மதியப் படை பயணித்தது.ஆனால் இந்த படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.அதற்கு மூலக்காரணம் பப்பா ராவல் என்ற சைவ மன்னரது வீரமே.


பப்பா ரவல் கால போஜர் என்றும் அழைக்கப்பட்டார்.அவர் மேவார் ராஜ்ஜியத்தை தோற்றுவித்தவராவார்.பப்பா ராவல் ஸ்ரீ கோரக்ஷநாதர் எனும் பாசுபத சைவப் பிரிவின் ஆச்சாரியரின் சிஷ்யராய் இருந்தார்.ஸ்ரீ கோரக்ஷநாதர்,பப்பா ரவலிடம் குக்ரி எனும் போர் கருவியை அருளி,முஹம்மதியர்களுக்கு எதிராய் போர் புரிய கட்டளையிட்டார். பப்பா ரவல் நீதி தவறாத அரசர் மட்டுமின்றி,ஒரு மாபெரும் போர்த் தளபதியாகவும் திகழ்ந்தார்.இதனை உறுதி செய்கிறது புகழ் மிக்க ராஜஸ்தான் போர்.உமையா முஹம்மதிய படைக்கு எதிராக ஆரம்பத்தில் பப்பா ரவல் மட்டுமே எதிர்த்துப் போரிட்டு வந்தார்.வெறும் 4000 வீரர்களைக் கொண்டு 30 000 முஹம்மதியர்களை எதிர்த்துப் போரிட்டார்.பிற்காலத்தில் மற்ற ராஜபுத்திர அரசர்களுடன் கூட்டுறவு ஏற்படுத்தி முஹம்மதியர்களை எதிர்த்துப் போரிட்டார்.ராஜஸ்தானில் நடந்த பல போர்களின் தொகுப்பே ராஜஸ்தான் போர்.பிற ராஜபுத்ர ராஜ்ஜியங்களின் அரசர்களையும் தளபதிகளையும் ஒன்றிணைத்து, ராஜபுத்திர கூட்டுப் படையை (confederation) உருவாக்கினார் பப்பா ரவல். ராஜபுத்திர கூட்டுப் படை சிறிய ராஜ்ஜியங்களை கொண்டதால்,ஒரு மாபெரும் படையை திரட்ட முடியவில்லை.இந்த கூட்டுப் படையின் மொத்த ராணுவ வீரர் எண்ணிக்கை வெறும் 40 000. பப்பா ரவலுடன் இந்த கூட்டுப் படையில் சேர்ந்த பிற ராஜ்ஜியங்களில் சாலுக்ய ராஜ்ஜியம் மற்றும் குர்ஜர-பிரத்திஹார ராஜ்ஜியம் முக்கிய இடத்தை வகித்தன.இந்த ராஜபுத்திர கூட்டுப் படையை எதிர்த்து,அன்றைய காலக்கட்டத்தின் மிக வலுவான சாம்ராஜ்ஜியமாகத் திகழ்ந்த உமையா எனும் முஹமதிய அரசு 100 000 முஹம்மதிய வீரர்களைக் கொண்ட ஒரு மாபெரும் படையை ராஜஸ்தானுக்கு அனுப்பியது.அதாவது ராஜ புத்திர கூட்டுப்படையைவிட இரண்டறை மடங்கு பெரும்படை அந்த முஹம்மதியப் படை. ராஜபுத்ர படைக்கு தலைமைத் தாங்கினார் பப்பா ரவல் எனும் சைவ மாவீரர். பப்பா ரவல் மஹாசேனாபதியாகத் திகழ,அவருக்குத் துணையாக முதலாம் நாகபட்டர்,இரண்டாம் விக்ரமாதித்யர் போன்றோர் தளபதிகளாய்த் இருந்தனர்.முஹம்மதிய உமையா படைக்கு ஜுனைது இப்னு அப்துல் அல்-ரஹ்மான் அல்-மூரி, தமீன் இப்னு ஸைது அல்-உத்பி போன்றோர் தலைமைத் தாங்கினர்.

இரண்டுப் படைகளும் ராஜஸ்தான் பகுதியில் மோதின.அதில்,முஹம்மதிய படையின் தளபதி ஜுனைதை பப்பா ரவல் வெட்டி வீழ்த்தினார்.இந்த வீரச் செயலால் முஹம்மதியப் படை கதிகலங்கி ஓட்டம் கண்டது.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு,பப்பா ரவலின் புகழ் எங்கும் பரவியது.முஹம்மதியப் படை மத்தியில் அவர் சிம்மசொப்பனமாக திகழ்ந்ததோடு அவர்களின் மதிப்பையும் பெற்றார். ராஜஸ்தான் போருக்குப் பிறகு,உமையா முஹம்மதிய படைகள் சிந்து தேசத்து எல்லையோடு நின்றது. பாரதத்தின் பிற தேசங்களை உமையா கலிப்பா அரசு கைப்பற்ற முடியவில்லை.காஷ்மீரத்தின் மீது ஒரு முறை படையெடுத்தது,ஆனால் காஷ்மீரத்து சிம்மம்,லலிதாதித்ய முக்தபீடரிடம் படுதோல்வியடைந்து சின்னாபின்னமானது.இந்தப் போருக்கு அடுத்து,ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி எனும் நகரை நோக்கி படையெடுத்தார் பப்பா ரவல்.கஜினியை ஏற்கனவே சலீம் எனும் முஹம்மதிய ஆட்சியாளன் கைப்பற்றியிருந்தான்.அவனைப் போரில் தோற்கடித்து, கஜினியை தன் ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவந்தார் பப்பா ரவல்.சலீமின் மகளையும் மணம் புரிந்தார். ஆப்கானிஸ்தான் மட்டுமின்றீ,ஈரான் மற்றும் ஈராக் வரை படையெடுத்து வெற்றியும் பெற்றார் இந்த மாவீரர்.இப்படி பல்முனைகளில் முஹம்மதிய ஆக்கிரமிப்புக்களை தோற்கடித்து,அவர்களின் பலத்தை வெகுவாகக் குறைத்தார்.பப்பா ரவலுக்கு 30 மனைவியர் இருந்தர்.அவர்களில் பலர் ஈரான், அரபு மற்றும் பிற மத்தியக்கிழக்கு முஹம்மதிய தேசத்தவர். பப்பா ரவலின் 100 பிள்ளைகளில் 30 பிள்ளைகள் அவரது முஹம்மதிய மனைவிகளிடத்து உதித்தவர்கள்.இவர்கள் பத்தன்கள் எனப்பட்டனர்.இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பத்தன் முஹம்மதியர்கள் பப்பா ரவலின் வழித் தோன்றல்களே.

பப்பா ரவல் ஒரு சிறந்த சிவபக்தராகையால் ஏகலிங்கர் சிவாலயத்தை கட்டுவித்தார்.தனது வெற்றிகள் யாவும் ஏகலிங்கரின் அருளால் கிட்டியது என்றும்,ஆதலால் அவரே தனது ராஜியத்தின் உண்மையான ஆட்சியாளன் என்றும்,தான் வெறும் மந்திரி மட்டுமே என்றும் அவர் கருதினார்..பாரதத்துக்கு உறுதியான தூணாக விளங்கிய பப்பா ரவல்,பிற்காலத்தில் சந்நியாசம் மேற்கொண்டார்.






1 comment:

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்