சுவாமி வேதாசலத்தின் ஆரம்பக்கால சம்ஸ்க்ருத அபிமானம் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Tuesday, 11 April 2017

சுவாமி வேதாசலத்தின் ஆரம்பக்கால சம்ஸ்க்ருத அபிமானம்






சுவாமி வேதாசலம் (மறைமலை அடிகள்)  என்பவர் "சைவ சித்தாந்த சண்டமாருதம்" ஸ்ரீ சோம சுந்தர நாயகரவர்களின் மாணவராக இருந்தவர்.ஆரம்பக் காலத்தில் சைவ சித்தாந்த சம்பிரதாயத்துக்கு ஏற்ப நடந்தவர் தான்.பிற்காலத்தில்,சோமசுந்தர நாயக்கரின் மறைவுக்குப் பிறகு, சில தமிழ் வெறியர்களின் சவகாசத்தாலும்,கிருத்தவ சார்புடைய மேனாட்டு ஆராய்ச்சியாளர்களின் ஆர்ய திராவிட இனவாத புரட்டுக்கும் பலியாகி, வேத சிவாகம நிந்தனைகளை செய்ய ஆரம்பித்து,சிவத்துரோகியானார்..

இவரது ஆரம்பக்கால நூல்களை வாசித்தால்,புரியும்.அதில் பல சம்ஸ்க்ருத வார்த்தைகளை கையாண்டிருப்பார்.  ஒரு உதாரணம் தருகிறேன். "சோமசுந்தரக்காஞ்சியும் சோமசுந்தரக்காஞ்சியாக்கமும்" எனும் அவர் இயற்றிய நூலில் உள்ள சில பகுதிகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.அதில் நீங்களே பாருங்கள், எவ்வளவோ சம்ஸ்க்ருத சொற்களை எந்தவித தடையும் இன்றி கையாண்டுள்ளார்.இந்த நூல் வெளியானது ஏறத்தாழ 1901-ல். ஸ்ரீலஸ்ரீ,சிவாநுபூதி,ஸ்ரீமாந்,உபகரித்து,ஸ்ரீ,பிரமாணம்,சிவசாயுச்சியம்,தருக்கம் ,உபந்நியாசம்,ஸ்ரீமத்,சுவாமி என்று பல சம்ஸ்க்ருத சொற்களை இங்கு கையாண்டிருக்கிறார். தமது வாழ்வின் பிற்பகுதியில் தான்,தன் பெயரை மறைமலை அடிகள் என்று மொழிபெயர்த்துக்கொண்டு,திராவிட கழகத்துடன் கூட்டுச் சேர்ந்துக்கொண்டு, சிவத்துரோகத்தில் ஈடுபட்டார்.தமிழர் மதம்,முற்கால பிற்கால புலவோர் வாழ்க்கை மற்றும் வேளாளர் நாகரிகம் போன்ற ஈன நூல்களை இயற்றி மக்களை,குறிப்பாக ஆன்ம முதிர்ச்சி இல்லா சைவர்களைக்  கெடுத்தார்.இவர் தவறானப் பாதையில் பயணிக்க ஆரம்பித்ததால் தான் சைவ சித்தாந்த சம்பிரதாயத்து சைவப் பண்டிதர்களும் சைவ மடாதிபதிகளும் இவரை புறக்கணித்ததோடு,இவரது அறிவுக்கொவ்வாத தமிழ் வெறி நூல்களுக்கு கண்டனமும் இயற்றினர்.


"திரு நான்மறைவிளக்க ஆராய்ச்சி" எனும் நூலில், சைவப் பண்டிதர்கள் சுவாமி வேதாசலத்தை எப்படி வறுத்தெடுத்துள்ளனர் என்பதைப் பார்ப்போம் :

 1.
 "பல்லாவரம் சுவாமி வேதாசலம் அவர்கள், திருவாசகத்தில் போற்றித் திருவகவலுக்கு எழுதிய விரிவுரையில் "மூவர் நான்மறை முதல்வா போற்றி" யென்னும் 94 ஆம் அடியிலுள்ள மூவர் நான்மறை யென்ற சொற்றொடர், தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞானபோதம் என்னும் நூல்களைக் குறிக்குமென்றும், வடமொழி நான்கு வேதங்களைக் குறிகா தென்றும் எழுதினார்கள்.  இதற்குப் பென்னம்பெரும் எதிர்ப்புத் தோன்றவே, தொடர்ந்து தாம் திருவாசகத்திற்கு உரை எழுதப் போவதாக அறிவித்த அவர், தாம் கொண்டிருந்த எண்ணத்தைக் கை நெகிழவிட்டார். " -  "சேக்கிழார் அடிப்பொடி" தி.ந ராமச்சந்திரன்

2.
" ஸ்ரீ வேதாசலம் பிள்ளை கொள்கையை மறுத்து யான் எழுதிய "தற்காலச்சமயநிலை இரண்டாம்பாகம்" "தென்றமிழ்த்தனிமாட்சி" முதலிய பத்திரிகைகளை நினைவுகூரச் செய்தன.  யான் ஒருவிடயத்திற்கு ஒரு பிரமாணங்காட்டியிருத்தல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கிற்று.  அதுநிற்க.
ஸ்ரீ.வேதாசலம்பிள்ளை ஸ்ரீ.கா.சுப்பிரமணியபிள்ளை முதலிய சிலர் பிராமணர் மேற்கொண்ட பொறாமையினாலே ஏறக்குறையப் பதினைந்து வருஷகாலமாகப் புதுக்கொள்கைகளும் புதுஅருத்தங்களும் புதுத்திருத்தங்களும் கற்பிக்கின்றார்கள். "-  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்கள் தமையனார் புதல்வரும், அவர்கள் மாணாக்கரும் ஆன ஸ்ரீமத் கைலாச பிள்ளையவர்கள்

3.
" ..........ஸ்ரீமாந். வேதாசலப் பிள்ளையவர்கள் திருநெல்வேலியில் காந்திமதியம்மை கோயின் மண்டபத்திலே, பாண்டி நாட்டார் சைவரல்லர் சமணர்கள் என்றும், சாதி இல்லை என்றும் பிரசங்கஞ் செய்த காலத்தில், எம்மைக்கொண்டு சாத்திர வாயிலாக அவர் பிரசங்கத்தை மறுத்துப் பிரசங்கஞ் செய்வித்து அப்பிரசாரகரால் ஏவப்பட்டு எமது பிரசங்கதிற் குறிப்பெடுத்தற்காகச் சபையில் வந்திருந்த ம-ள-ள-ஸ்ரீ பண்டிதர் சிவராமபிள்ளையவர்களும், அவர் மாணாக்கர் நால்வரும் பிரசங்கத்திற் குறிப்பெடுத்தற் கிடம் பெறாமையால் நாண முற்றுப் பாதிப்பிரசங்கத்தில் சபையைவிட்டோடவும் அது கேட்டறிங்த பிரசாரகரும்(சுவாமி வேதாசலம்) நாணி மற்றைத்தினமே  திருநெல்வேலியைவிட்டுப் அம்பாசமுத்திரம் ஓடவும் செய்த பெரியதோருண்மைச் ................" - யாழ்ப்பாணம், ஸ்ரீலஸ்ரீ.சுவாமிநாதபண்டிதரவர்கள்.

இப்படி இந்த சுவாமி வேதாசலம் சந்திக்காத எதிர்ப்பே இல்லை.சைவப் பண்டிதர்கள் அனைவரும் அவரது கருத்துக்களை கடைசிவரை எதிர்த்தனர்,மறுத்தனர்,கண்டித்தனர்.


இந்தச் சிவதர்மோத்தரப் பகுதியை இவர் படிக்கவில்லையா,அல்லது படித்தும் அதன் பொருள் அவருக்கு விளங்கவில்லையா என்று தெரியவில்லை :

ஒப்பிலி யநாதி முத்தனோதிய  வேதமாதிக்
கொப்புயர் வுரைப்பார் நிந்தை யுரைப்பவ ருன்னு  வாரும்
வெப்பெரி நிரயந்  தன்னுள் வீழ்ந்துவெந் துருகி வீயார்
எப்பொழு தேறு  வாமென்  றிளைத்திளைத்  தேங்குவாரே-   
( ஆறாவது பாவவியல்-8 ,சிவதருமோத்தரம் )

பொருள் : தனக்கு நிகரில்லாத அநாதிமலமுத்தராகிய  சிவன் அருளிச் செய்த வேதாகமங்களுக்கு ஒப்பாகவேனும் உயர்வாகவேனும்  பிறிதொருநூலைச் சொல்லுவோரும் ,(அவ்வேதாகமங்களை)  நிந்தை சொல்லுவோரும்,  (நிந்தையை மனசினாலே)   நினைப்பவரும்,  வெம்மையையுடைய எரிவாய் நரகத்தின்கண் வீழ்ந்து, ,(உடம்பெல்லாம்) வெந்து,(ஊனெய்யெல்லாம்) உருகி,  (இங்ஙனம் துயறுறவும் ,அந்த யாதனா சரீரத்தினின்றும்)  நீங்காதராகி  ,(இந்நரகத்தினின்றும்)  எக்காலங்கரையேறுவோமென்று வாடி வாடி ஏங்குவர் ....


குறிப்பு : இந்த நூலில் ,சம்ஸ்க்ருத சொற்கள் மீது இடப்பட்டுள்ள கோடுகள் என்னுடையதல்ல, நூலகத்தில் எடுக்கப்பட்டு,இணையத்தளத்தில் தரவேற்றப்பட்ட நூல் இது...



No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்