போர்க்கலையில் ஈடுபட்ட சைவத் துறவியர் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Tuesday, 11 April 2017

போர்க்கலையில் ஈடுபட்ட சைவத் துறவியர்




                                                        || சிவாத்பரதரம் நாஸ்தி ||

இந்திய வரலாற்றில், அந்நியர்களை எதிர்த்து போராடிய இந்திய சமூகங்களில் சைவ சமூகத்தின் பங்களிப்பு மற்றைய இதர சமூகங்களைவிட பல மடங்கு மகத்தானது மற்றும் முக்யமானது.இச்சைவ சமூகத்தின் வழிகாட்டிகளாக இருந்த சைவ குருமார்களும் இதற்கு ஓர் காரணம்.சைவ குருமார்களின் வழிகாட்டலின்படியே அன்றைய சைவ மன்னர்களும் சைவ வீரர்களும் துருஷ்கர்,பிரிடிஷார்,பொர்துகேயர் என்று வந்தேறி ஆக்கிரமிப்பாளர்களை ஆக்ரோஷமாக எதிர்த்தனர்.சைவகுருமார்களில் இருவகையினர் உண்டு. அந்நியரை எதிர்த்து போர் புரிந்து சிவதர்மத்தை காத்திடும்படி கட்டளையிட்டு,அம்மன்னவனுக்கு அற நெறிகளை போதித்து வந்த சைவ குருமார் ஒரு வகை. போர்க்களத்தில் தாமே ஈடுபட்டு,சைவப் பகைவரை எதிர்க்கும் இன்னொரு வகை சைவ குருமாரும் உண்டு. இரண்டாம் வகையினரைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

மத்ய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ,10-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்த ஒரு கல்வெட்டின்படி,அப்பகுதியை எதிர் தேசத்தரசன் ஒருவன் தாக்கி,அப்பகுதியின் அரசனைக் கொன்றுவிட்டதால்,ஆரணிபத்ர மடத்தின் தலைவராக இருந்த தர்மசிவனார், வில்லேந்தி தாமே போர்க்களத்தில் இறங்கித்,தமது வில்லாற்றலால்,பகவரைக் கொன்றுகுவித்து,பிறகு தாமும் சிவபதம் அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அக்கல்வெட்டில் உள்ளதாவது :

1.
"தவயோகியான தர்மசிவனார்ஆரணிபத்ர மடத்தில் தவமியற்றிக் கொண்டிருந்த வேளையில்,கோபட்டன் எனும் அரசன்  அப்பகுதிக்குத் தன்னுடைய யானைப்படையுடன் புகுந்தான்.அப்பகுதி மன்னவன் கொல்லப்பட ;  இச்செய்தியை கேள்வியுற்ற தர்மசிவனார் (இறந்துப் போன) அவனுக்காக  சற்று நேரம் கண்ணீர் விட்டார் , பிறகு,வெகுண்டெழுந்து  போர்க்களத்தில் தாமே குதித்தார்; சிவபிரானைப் போலவே திகழ்ந்தார்; சிவனிடமிருந்து இறங்கிய வில்லையேந்தி ;  திரிபுரதகனத்தின்போது விளங்கிய சிவனாரைப் போல்,பகைவர்களை விரட்டியடித்து, இறுதியில் தேவர்கள் மலர்தூவ, ஈடில்லாத (சிவ) லோகத்தை அடைந்தார்"

இதேபோல் ஜபல்பூர் கண்டெடுக்கப்பட்ட ஓர் கல்வெட்டும் இன்னொரு வரலாற்றுக் குறிப்பை நமக்கு தெரிவிக்கிறது.கலச்சூரி அரசர்களான ஜயசிம்ஹன் (கிபி 1163-1188) மற்றும் விஜயசிம்ஹன் (கிபி 1188-1210) போன்றோரின் ராஜகுருவாக இருந்த விமலசிவனாரின் கல்வெட்டு இது.இக்கல்வெட்டின் மூலம்,விமலசிவனாருக்கு குருவாகவும்,மன்னன்  நரசிம்ஹனுக்கும் (கிபி 1153-1163) ராஜகுருவாகத் திகழ்ந்த  கீர்த்திசிவனார் என்ற ஆச்சாரியர், ஆன்மிகத் துறையில் மட்டுமின்றி, ராணுவத்துறையிலும் சிறந்து விளங்கியதாக கூறப்பட்டுள்ளது. தமது அரசனான கலச்சூரி மன்னனது அரசை பெரிதாக்க பல பகுதிகளை ஜெயங்கொண்டதாகவும்,ஜெயங்கொள்ளப்பட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாகவும் அக்கல்வெட்டு மேலும் தெரிவிக்கிறது.அக்கல்வெட்டின் சாராம்சம் :

2.
"பெயருக்கேற்றாற்போல் (மெய்யாலும்) அவர் கீர்த்திசிவனாரே.(சிவனாரைப் போல்) தமது ரதம் பூமியாலும்,அதன் இருசக்கரங்கள் சந்திர சூரியர்களாலும் செய்யப்படாததாகினும்; அதன் சாரதி பிரம்மாவ இல்லாதபோதிலும் ,(கீர்த்திசிவனாரின்) அம்பு விஷ்ணுவாக இல்லாதபோதிலும் ,அவர் (கீர்த்திசிவனார்) தமது பகைவர்களின் நகரங்களை பஸ்மமாக்கினார் (திருபுர அசுரர்களின் கோட்டைகளை சிவனார் பஸ்மமாக்கியதுபோல்) ; தமது பகைவரிடம் இருந்து ஜெயங்கொள்ளப்பட்ட பகுதிகள்தோறும் நிலவையொத்த வெள்ளை வர்ண சிவாலயங்களால் நிரப்பினார்"


ஆக, சைவ குருமார்களில் ஒரு சாரார்,போர்க்களையிலும் வல்லவர்களாக இருந்திருப்பதை நாம் தெரிந்துக்கொள்ளலாம்.அதனால் தான் சைவ சமூகம்,வந்தேறி துருஷ்கர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் சிம்மசொப்பனமாகவும் இருந்துள்ளது.


ஆதாரங்களுக்கு உதவிய நூல் : The Saiva Age( Genesis and development of Tantrism) of Alexis Sanderson

1 comment:

  1. இதைப்ப்ற்றி நானும் ட்விட்டர் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளேன்! https://twitter.com/GhorAngirasa/status/919238850068795392 மத்திய ப்ரதேசம், காச்மீரம், கௌடம் முதலிய இடங்களில் ப்ரகாசித்த சித்தாந்த சைவம் இன்று அங்கே இல்லாமல் இருப்பது வருத்தமாகவே உள்ளது.

    ReplyDelete

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்