முதலில்,ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் நுழைந்த போது,எந்த அரசு மிகபலமானதாக இருந்தது தெரியுமா ? மராட்டிய அரசு தான்.ஆங்கிலேயர்களின் வாயாலேயே இக்கருத்து உறுதியாகிறது. சார்லஸ் மெட்கல்பி (Charles Metcalfe) எனும் பிரிடிஷ் அதிகாரி ஒருதடவை சொன்னார் " இந்தியாவில் இரண்டே வலுவான சக்திகள் இருக்கின்றன,ஒன்று பிரிடிஷ்,மற்றொன்ரு மராட்டியர்,மற்றைய (இந்திய) அரசுகள் இவற்றில் எதோ ஒன்றின் அதிகாரத்வத்தை ஏற்கின்றன.இங்குள்ள நிலத்தில் ஒவ்வொரு அகலத்தையும் நாம் விட்டுக்கொடுக்கும்போது,அவற்றை மராட்டியர் கைப்பற்றிவிடுவர்" .உலகப்புகழ்பெற்ற பிரெஞ்சு மாவீரன் நெப்போலியனை வாட்டலூ போரில் (Battle of Waterloo) தோற்கடித்த ஆர்தர் வெல்லஸ்லி (Arthur Wellesly) ,மராட்டியரை எதிர்த்து தான் பங்குபெற்ற அஸாய் போர் (Battle of Assaye) ,தான் முன்னம் பங்குபெற்ற வாட்டர்லூ போரைவிட மிக கடினமானது என்று கூறியுள்ளார்.23 செப்டம்பர் 1803இல், அஸாய் போரில் மராட்டியத் தளபதிகள் தௌலத் ஷிந்தியா மற்றும் ரகுஜி பொன்ஸ்லேவை ஆர்தர் வெல்லஸ்லி சந்தித்தார்.இப்போரில்,நவீன ஆயுதங்களின் உதவிகள் மூலம் ஆர்தர் வெல்லஸ்லி வெற்றிபெற்ற போதிலும்,பிரிடிஷ் படை பெருத்த உயிர் சேதத்தை சந்தித்தது.இப்போருக்குப் பின்,ஆர்தர் வெல்லஸ்லி " இத்தகைதோர் பெரும் வெற்றியை பெற வாப்பிருந்தாலும்,23ஆம் தேதி நான் சந்தித்த பெரும் சேதத்தை இனியொரு முறையெனும் நான் சந்திக்க விரும்பவில்லை" என்று கூறினார். அவரே ஒரு பிரிடிஷ் தளபதியை இவ்வாறு எச்சரித்தார் , " மராட்டிய காலாட்படையை நேருக்கு நேர் அல்லது நெருக்கமான போராட்டத்தில் உன் படையை சந்திக்குமாறு செய்யாதே,இல்லையேல் உனது படை அவமானத்தில் மூழ்கிவிடும்".
பிரிடிஷ் இந்தியாவுக்குள் நுழைந்த போது,முகாலய சாம்ராஜ்யம் மராட்டிய சாம்ராஜ்யத்தின் காலடியில் கிடந்தது.முகாலயர்களை மராட்டியப் பிடியிலிருந்து காப்பாற்றியதே பிரிடிஷ் படை தான்.27 ஆண்டு போரில்,மராட்டியப் ராஜ்யம் முகாலய ராஜ்யத்தின் ஆதிக்கத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.மராட்டிய படையில் வெறும் 150 000 வீரர்களே இருந்தனர்.முகாலயப் படையிலோ 500 000 வீரர்கள் இருந்தனர்.இது போதாது என்று முகாலய அரசுக்கு போர்த்துகீஸ்யர்,பீஜபூர் சுல்தானியம்,கொல்கொண்டா சுல்தானியம் போன்ற அரசுகளும் உதவி புரிந்தனர்.Gunpowder nations அதாவது பீரங்கி மற்றும் அன்றையக்கால துப்பாக்கி ரக ஆயுதங்களுக்கு முக்யத்வம் கொடுத்த மூன்று அரசுகளில் ஒன்று முகாலய அரசு.இவ்வளவு செல்வாக்கும் பலமும் உள்ள பெரும் முகாலய அரசைத் தான் ,புதிதாக உருவான சிறிய மராட்டிய அரசு தோற்கடித்தது.இந்தப் போருக்குப் பிறகு முகாலய அரசு,மராட்டிய அரசின் அடிமையாகவே திகழ்ந்தது.
ஆக,பிரிடிஷ் படைக்கு ,இந்தியாவில் மிக வலுவாவான பகையாளியாக இருந்ததோடு,அன்றைய காலக்கட்டத்தின் உலகின் மிகப்பெரும் அரசுகளில் ஒன்றான முகாலய அரசை அடக்கி,மண்டியிடச் செய்த வீரமிக்க வம்சம் தான் மராட்டிய ராஜ்யம்.இப்பொழுது மைசூர் அரசுக்கு வருவோம்.இந்த அரசு மராட்டிய அரசின் பரப்பளவைவிட மிகச் சிறியதே.மராட்டிய ராஜ்யம் 2.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. திப்பு சுல்தான் மற்றும் அவன் அப்பன் ஹைதர் அலி ஆண்ட மைசூர் அரசோ 0.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கூட வராது.அது ஒரு மிகச்சிறிய அரசு தான்.
ஹைதர் அலி பல முறை போரில் தோற்றிருக்கிறான்.சில உதாரணங்களைப் பார்ப்போம். கந்தே ராவ் என்ற பிராமணரின் படையிடம் தோற்றான்,ஹைதர் அலி .இரண்டாம் முறை கந்தே ராவும் ஹைதர் அலியும் போர்க்களத்தில் சந்திக்க இருந்தனர்.ஆனால்,முன்பு கந்தே ராவிடன் தான் தோற்ற சம்பவம் ஹைதர் அலிக்கு அச்சத்தைக் கொடுத்தது.அதனால் கந்தே ராவை போரில் சந்திக்காமல்,முஸ்லிமுகளுக்கே உரிய சூழ்ச்சியை கையாண்டான்.கந்தே ராவுக்கு ,சில கடிதங்களை அனுப்பினான்.அக்கடிதத்தில் ,நாஞ்சிராஜன் என்ற அரசன், கந்தே ராவின் தளபதிகளிடம் கந்தே ராவுக்கு துரோகம் செய்து அவரை தன்னிடம் ஒப்படைத்து விடுமாறு இருந்தது.இதை உண்மை என்று நினைத்துக்கொண்டு,தனக்குப் பின்னால் ஒரு பெரும் சதித்திட்டமே உருவாக்கப்பட்டுள்ளது என்று பயந்த கந்தே ராவ்,ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு தப்பினார்.தலைமை இல்லாத கந்தே ராவ் படையை ஹைதர் அலி சுலபமாக வெற்றிப் பெற்று,மைசூர் பகுதியை கைப்பற்றினான்.சாவனூர் நவாபின் நிலங்களையும் ஆக்கிரமித்தான் ஹைதர் அலி.சாவனூர் நவாப்,மராட்டிய பேஷ்வாக்களின் ஆளுமையின் கீழ் உள்ளதால்,ஹைதர் அலிக்கு தக்கப் பாடம் புகட்ட படை திரட்டிக் கொண்டு வந்தனர்.ஹைதர் அலியை போரில் தோற்கடித்து,அவனிடம் அபராதமாக 35 லட்சம் ரூபாயை கப்பமாக வசூலித்தனர் மராட்டியர்கள்.இரண்டாம் முறை,மராட்டியர்களுடன் ஹைதர் அலி பிரச்சனையில் மாட்டிக் கொண்டான்.மராட்டியர்களிடமிருந்து தன்னை காப்பாற்ற பிரிடிஷ் படையிடம் உதவி கோரினான்.ஆனால் பிரிடிஷ் அரசாங்கம் மறுத்தது.மராட்டியர் 35 000 வீரர்களுடன் ஹைதர் அலியை போரில் சந்திக்க வந்தனர்.ஹைதர் அலி,மராட்டியப் படையை கண்டு பயந்து,பின்வாங்கி ஓடினான்.மராட்டியர்கள் கேட்ட அபராதத் தொகையில் சிலவற்றை தான் செலுத்திவிடுமாறு மன்றாடினான் ஹைதர்.ஆனால் அவன் செலுத்த சம்மதித்த தொகை மிகவும் குறைந்ததால்,அதற்கு மறுப்பளித்து,அவன் படை மீது தாக்குதல் நடத்தினர் மராட்டியர்கள்.பெங்களூர் வரை மராட்டியர் கைப்பற்றியவுடன்,இரண்டாம் முறை ஹைதர் அலி பிரிடிஷ் அரசாங்கத்திடம் உதவி கோரினான்.மறுபடியும் அவர்கள் மறுக்க,வேறு வழியின்றி, மராட்டியர்களிடம் சமாதான ஒப்பந்தம் நடத்தினான் ஹைதர்.மராட்டியர்களிடம் கப்பமாக,மொத்த தொகை 3.6 மில்லியன் ரூபாயையும்,ஆண்டு தோறும் 1.4 மில்லியன் ரூபாயை கப்பமாக தான் செலுத்துவதாக ஒப்புக் கொண்டான்.அதன் பிறகு ,Eyre Coote என்ற பிரிடிஷ் தளபதியிடம் தொடர்ந்து மூன்று தடவை தோற்றான் ஹைதர் அலி. இப்படி பல தோல்விகளைச் சந்தித்தான் ஹைதர் அலி.அவன் மகனும் அவனைப் போல் பல தோல்விகளைச் சந்தித்தான்.
1767இல்,மராட்டிய தளபதி மாதவராவ் பேஷ்வா,ஹைதர் அலியையும் திப்பு சுல்தானையும் எதிர்த்து போரிட்டார்.அதில் மாதவராவ் வெற்றி பெற்று,மைசூர் அரசின் தலை நகரான ஸ்ரீரங்கப்பட்டினத்துக்குள் நுழைந்தார்.மராட்டியர்களின் ஆளுமையை ஹைதர் அலி ஏற்றுக்கொள்ள,மராட்டிய பேஷ்வா,ஹைதர் அலிக்கு மைசூர் நவாப் எனும் பட்டத்தை அளித்தார்.ஆனால்,மராட்டியர்களின் ஆளுமையை எதிர்த்த திப்பு,தென்னிந்தியாவில் உள்ள சில மராடிய கோட்டைகளைக் கைப்பற்ற திட்டமிட்டான்.இதனால் மராட்டியர்களுடன் நேரடியாக பிரச்சனையில் மாட்டிக் கொண்டான்.துப்பு சுல்தானுக்கு பாடம் கற்பிக்க,மராட்டிய பேஷ்வா,தனது தளபதி நானா பத்னவிஸை அனுப்பினார்.ஜூன் 1786இல்,திப்பு சுல்தானின் பல கோட்டைகளை,பாதாமி,கித்தூர் கஜேந்திரகாத் போன்ற இடங்களில் மராட்டிய தளபதி பத்னமிஸ் கைப்பற்றி,திப்பு சுல்தானை தோற்கடித்தார்.குறிப்பாக கஜேந்திரகாத் போர்,திப்பு சுல்தானின் அஹங்காரத்துக்கு கொடுத்த செருப்படி என்று சொல்லலாம்.இதனால் கர்வமடங்கிய திப்பு சுல்தான்,தான் கைப்பற்றிய சில மராட்டிய பகுதிகளை மராட்டிய அரசிடமே ஒப்படைத்து விடுவதாகவும்,மேலும் போர் அபராதத் தொகையாக 4.8 மில்லியன் ரூபாயையும் 1.2 மில்லியன் ரூபாயை ஆண்டுதோறும் கப்பமாக தான் செலுத்துவதாகவும் ஒப்புக்கொண்டு,மராட்டிய பேஷ்வாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டான்.
இவ்வளவு தோல்விகளையும் சந்தித்த திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் மாவீரர்கள் என்று எதன் அடிப்படையில் கூறுகின்றனர் என்று தெரியவில்லை.ஹைதர் அலியோ மராடியர்களிடம் மூன்று தடவை போரிட்டும் அனைத்திலும் தோற்றுப் போய் கப்பமும் அபராதத் தொகையும் கட்டினான்.திப்பு சுல்தானோ ,அவன் அப்பன் மாதிரியே மராட்டியப் பகுதிகளில் சிலவற்றை முட்டாள்தனமாக ஆக்கிரமித்துப்,பிறகு மராட்டிய பேஷ்வாவின் படையிடம் பல தோல்விக்ளைச் சந்தித்து,அவர்களின் ஆதிக்கத்துக்கு முன் மண்டியிட்டு,தன் அப்பனைப் போலவே கப்பமும் அபராதமும் செலுத்த சம்மதித்தான்.திப்பு சுல்தான் ,பிரிடிஷ் படையை எதிர்த்து நான்கு பெரும் போர்களில் போரிட்டான்.அதில் முதல் போரில் மட்டும் வெற்றிப் பெற்றான்.மற்ற இரண்டுப் போரில்,தனது பகுதிகளை பிரிடிஷிடம் இழந்தான்.கடைசிப் போரில் படுதோல்வி அடைந்து கொல்லப்பட்டான்.அவனிடம் ராக்கேட் இருந்ததாலும்,பிரிடிஷ் அதிகாரிகளின் கவனக்குறைவாலும்,பிரிடிஷை முதல் போரில் தோற்கடித்தான். இதை வைத்துக்கொண்டு திப்பு சுல்தான் மாவீரன் என்று சொல்வது எவ்வளவு அறிவீனம் ? மராட்டிய அரசு கூடத்தான் முதலாம் மராட்டிய-ஆங்கிலேயப் போரில்,பிரிடிஷ் படையை தோற்கடித்தது. இன்னும் சொல்லப் போனால்,மராட்டியப் படை,நெப்போலியனை தோற்கடித்த ஆர்த்தர் வெல்லஸ்லி போன்ற பிரிடிஷ்படையின் மிகச் சிறந்த தளபதிகளை சந்தித்து அவர்களை நடுங்க வைத்தது.திப்பு சுல்தானோ,அப்படிப்பட்ட சிறந்த பிரிடிஷ் தளபதிகளை போரில் சந்திக்கவில்லை.ஒருவேளை,மராட்டிய படையிடம் திப்பு சுல்தானின் ராக்கெட்டுக்கள் இருந்திருந்ததோடு,அரசியல் உட்பூசலும் இல்லாமல் இருந்திருந்தால்,பிரிடிஷ் படை இன்னும் பல தோல்விகளைச் சந்தித்திருக்கும்.அல்லது மராட்டியர்களின் எதிர்ப்பு அதிகரிக்கிறது என்று இந்தியாவை விட்டே ஓடியிருக்கலாம்.
திப்பு சுல்தானை மாவீரன் என்று புகழும் மூடர்களே,திப்பு சுல்தானையும் ஹைதர் அலியையும் பல போர்களில் தோற்கடித்து,அவர்களிடம் அபராதத் தொகையையும் கப்பமும் பெற்றதோடு,மாவீரன் நெப்போலியனை தோற்கடித்த ஆர்த்தர் வெல்லஸ்லி போன்ற மிகச்சிறந்த பிரிடிஷ் தளபதிகளைக் கொண்ட பிரிடிஷ் படையை தோற்கடித்தும் நடுங்க வைத்தும் சாதித்த மராட்டிய பேஷ்வாக்கள் அவர்களைவிட இன்னும் பல மடங்கு சிறந்த மாவீரர்கள் என்பதை ஏன் உங்கள் புல்லறிவு ஏற்க மறுக்கிறது ?

மராட்டிய மன்னன் சிவாஜி தன் பெத்த மகனை ஔரங்கசீப்பிடம் அடமானமாக வைத்து உயிர் பிச்சை வாங்கிதான் வாழ்தான்
ReplyDelete