வேதத்தைப் பற்றிய முஸ்லிம்களின் புரட்டு வாதத்துக்கு ஒரு சிறிய பதிலடி - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 16 July 2016

வேதத்தைப் பற்றிய முஸ்லிம்களின் புரட்டு வாதத்துக்கு ஒரு சிறிய பதிலடி


வேதம் என்பதில் முகமது நபியைப் பற்றி கூறுகிறது,அல்லாவைப் பற்றி கூறுகிறது என்றும்,அதனால்,அல்லாவால் அருளப்பட்ட நூலாக இருக்கலாம் என்றும்,பிற்காலத்தில் வேதத்தில் இடைசெருகல் புகுத்தப்பட்டன என்றெல்லாம் முஸ்லிமக்ள் பதிவு போட்டு,நம் மக்களை குழப்புகின்றனர்...இந்த விஷயத்தைக் கொஞ்சம் அலசுவோம்..

முதலில், வேதம் அல்லாவால் அருளப்பட்ட ஒரு நூலா ?? இந்தக் கேள்விக்கு முஸ்லிம்கள் சரியான பதிலைக் கொடுக்கமுடியவில்லை...அல்லாவால் தான் அருளப்பட்டது என்று ஆணித்தரமாக கூறமுடியவில்லை...அல்லாவால்,இந்த நான்கு வேதம் அருளப்பட்டது என்றால்,குரான் அல்லது ஹதீஸில் இருந்து நேரடி ஆதாரம் வையுங்கள் முஸ்லிம்களே....மேலும்,நான்கு வேதம் அல்லாவால் அருளப்பட்டதாக இருக்கலாம் என்று ஒரு யூகத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் கூறுகின்றனர்...ஏனென்றால்,வேதத்தில் ஓரிறைக்கொள்கை இருக்கிறதாம்..ஆனால்,இந்தக் காரணம் அறிவுக்கொவ்வாததாக உள்ளது....ஏனெனில்,இஸ்லாம் இவ்வுலகுக்கு வந்து வெறும் 1400 வருஷங்கள் தான் ஆகிறது...உலகின் மிகப்பழமையான சமயம் சைவ சமயமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்...சர் ஜோன் மார்ஷல் ( Sir John Marshall) எனும் ஆராய்ச்சியாளர்   " Archaeological Survey of India 1902-1928 "  எனும் தமது நூலில், இவ்வாறு கூறுகிறார் :

 "Saivism has been recognised as the most ancient religion which is living in the world" (சைவம் ,இன்றும் நிலைத்திருக்கும் உலகின் மிகப்பழமையான சமயம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது)

சிந்து நாகரிகத்தின் மக்கள் சைவர்களே என்பது அங்கு கண்டெடுக்கப்பட்ட பசுபதி முத்திரை,காளை முத்திரை,சிவலிங்கங்கள் மூலம் தெரிகிறது...சிந்து சமய வெளியின் காலம், கிமு 8000க்கும் மேல்...இந்தக் காலத்தில் யூத மதம் கூட இன்னும் உருவாகவில்லை...ஓரிறைக்கொள்கையை உலகுக்கு முதன்முதலில் கூறிய சமயம் சைவ சமயமே...அதனால்,இந்த சைவ சமயத்தின் நூலான வேதத்தில் ஓரிறைக்கொள்கை இருப்பது ஒன்றும் புதிய விஷமில்லை...வேதத்தில் இருக்கும் ஓரிறைக்கொள்கையை எடுத்துக்கொண்டு,இதனால்,இதுவும் அல்லாவால் அருளப்பட்ட நூலாக இருக்கலாம் என்பது நகைப்புக்குரிய விஷயம்...ஆக,வேதம் அல்லாவால் அருளப்பட்டதா எனும் கேள்விக்கு ஒரு ஆணித்தரமான பதிலை முஸ்லிம்கள் கொடுக்கமுடியவில்லை...எதோ ஒரு யூகத்தால் ஏதோ ஒரு கதை சொல்கிறார்கள்..யூகம் எல்லாம் ஆதாரமாவதில்லை என்பதை அறிவுடையோர் அறிவார்...


முதலில் ,வேதம் அல்லாவால் அருளப்பட்டதா எனும் கேள்விக்கே ஒழுங்கான பதில் இல்லாத முஸ்லிம்கள், இந்த வேதத்தில் நபி அறிவிக்கப்பட்டிருக்கிறார்,அல்லா அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள்...இதை நகைப்புக்குரிய விஷயமே...வேதம் அல்லாவால் அருளப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் இல்லாதபோது,அதில் அல்லா மற்றும் நபி அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்வது முட்டாள் தனம் இன்றி வேறு என்ன ??மேலும்,ஏன் முகமது நபியை மட்டும் அறிவிக்க வேண்டும் ??? முகமதுக்கு முன்பு இருந்த இறை தூதர்களையும் அறிவித்திருக்கலாமே ??? உண்மையை சொல்லப் போனால்,வேதத்திலோ,புராணத்திலோ நபியைப் பற்றி குறிப்பிடவில்லை...வேதத்தில் உள்ள சில வாக்கியங்களை எடுத்துக்கொண்டு,அதன் உண்மை அர்த்தத்தை மறைத்து,வேறு அர்த்தத்தை கொடுத்து,இது நபியைத் தான் குறிக்கிறது என்று ஜாக்கிர் நாயக் போன்ற வாஹாபிய வெறியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்....உண்மையிலேயே இந்த வேத வரிகள் நபியைப் பற்றி கூறுகின்றன என்றால், வேதத்துக்கு பாஷ்யம், அர்த்தம் சொன்னவர்கள் ஏன் இதை கூறவில்லை ?? திருமுறை,சிவாகமங்கள்,புராணம்,இதிஹாசத்தில் ஏன் கூறப்படவில்லை ??ஆக,வேதத்தில் நபியைப் பற்றி எல்லாம் ஒன்றும் கூறப்படவில்லை என்பதே உண்மை...


அடுத்தது,வேதம் மாற்றம் அடைந்தது,இடை செருகல் உள்ளது எனும் முஸ்லிம்களின் கருத்து...எந்தக் காலத்தில் யாரால் மாற்றம் அடைந்தது வேதம் என்று கேட்டால்,முஸ்லிம்களுக்கு பதில் சொல்ல முடியாது...வேதத்தில் எந்தப் பகுதி மாற்றம் அடைந்தது என்றாலும் இவர்களால் ஒழுங்கான பதில் கொடுக்க முடிவதில்லை...ஆக,இஸ்லாத்தில் இல்லாத விஷயம்,நம் வேதத்தில் இருந்தால்,அந்தப் பகுதி இடைசெருகல் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்...உதாரணத்திற்கு,அக்னி வளர்ப்பது,விக்கிரக வழிபாடு,தாலி கட்டுவது போன்ற விஷயங்கள் குரான் ஹதீஸில் இல்லை,ஆனால் நம் வேதங்களில் உண்டு....அதனால்,இந்தப் பகுதிகள் இடைசெருகல் என்றும் இந்தப் பகுதிகள்,வேதம் மாற்றமடைந்ததற்கான சான்று என்றும் அறிவில்லாமல் முஸ்லிம்கள் கூறிவிடுவார்கள்...இவர்களுடைய இந்த பதிலே போதும்,இவர்களது அறிவு நிலையை நாம் உணர்ந்துக்கொள்ள...ஒரு சமயத்தில் இல்லாத விஷயம் இன்னொரு சமயத்தில் இருந்தால்,அந்த இரண்டாம்  சமயம் மாற்றமடைந்துள்ளது என்று சொல்வது எவ்வளவு பெரிய மடமை ?? குரான் பார்வையில் இருந்து பார்த்து,வேதம் மாற்றமடைந்தது என்று சொல்ல முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்றால்,அதே உரிமை நமக்கும் உண்டு...வேதத்தின் பார்வையில் குரானை பார்த்தால்,குரானில் பல விஷயங்கள் பிற்காலத்தவரால் நீக்கப்பட்டிருக்கின்றன என்று நாமும் வாதடலாம்...உதாரணத்திற்கு,விக்கிரக வழிபாடு,யாகம் போன்றவை குரானிலிருந்து விலிக்கப்பட்டிருக்கிறது என்று நாமும் வாதாடலாம்....இன்னும் சொல்லப் போனால்,நமக்கு அதிக உரிமை உண்டு...நம் வேதம் கிமு3000இல் தொகுக்கப்பட்டது...குரானோ கிபி 700இல் தான் தொகுக்கப்பட்டது...ஆக,ஒரு சமய நூலின் பார்வையில் இன்னொரு சமயத்தின் நூலைப் பார்த்துவிட்டு,குறை கூறுவது அறிவுக்குப் பொருந்ததா செயல்....தர்க்க ரீதியாக ஒரு சமயம் இன்னொரு சமயத்தை கண்டிப்பதே அறிவுக்குப்பொறுத்தமானது....

ஆக,முஸ்லிம்களின் புரட்டுக்கள் ஒவ்வொன்றையும் அலசி,அவை பொறுத்தமில்லா வெறுங்கதைகள் என்பதை தெரிந்துக்கொண்டோம்...இந்த விஷயத்தை நம் மக்கள் எல்லோரும் அறியும்படி பகிரவும்...

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்