மன்னனுக்கு ஆச்சாரியரானவர் ஜகத்துக்கும் ஆச்சாரியரே - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Tuesday, 11 April 2017

மன்னனுக்கு ஆச்சாரியரானவர் ஜகத்துக்கும் ஆச்சாரியரே




                                                     ||சிவாத்பரதரம் நாஸ்தி||

                                       சைவ ஆச்சாரியர்கள் திருவடி போற்றி !!

ஆதிகாலம் தொட்டே, சைவ ஆச்சாரியர்கள் அரசர்களுடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்தனர். ஆன்மிகமும் அரசியலும் கலந்ததே சைவம். மூர்த்தி நாயனார் புராண சூசனத்தில் விளக்கம் அளிக்கும் இடத்தில் " சைவம் தழைக்க அரசியற்றல்" என்ற வாக்யத்தை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பிரான் கையாள்கிறார்.அவ்வாக்யத்துக்கு ஏற்ப சைவம் தழைத்துப் பரவ, முதலில் தேசத்தின் தலைவன் சிவதர்மத்தின்படி வாழ வேண்டும்.அப்பொழுது தான் தன் பிரஜைகளை நல்வழிப்படுத்துவான்."யதா ராஜா ததா ப்ரஜா" (மன்னன் எவ்வழி,மக்கள் அவ்வழி) எனும் பழமொழியை நோக்கவும்.அதனால் தான் சைவாச்சாரியர்கள் மடம் அமைத்து, அரசர்களை முதலில் சைவ சீலர்களாக அக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அதனால் தான் சைவ சமயம் பிரிடிஷ் மிலேச்சர்களின் வருகை வரை,அரசியல் பலம் பெற்ற சமயமாகவே இருந்தது. அதனால் தான் மன்னவனுக்கு ஆச்சாரியனாக இருப்பவன்,ஜகத்துக்கு அச்சாரியனாவான் என்கிறது சிவாகமம் :

ஐயம்அற விபரீதம் அதுவும் ஈசன் அருள் மொழியை
ஆராய்ந்த அனகன் ஆசான்
வையகமும் உய்யஉ(ன்)னிச் சைவதன்மம் மன்னவனுக்கு
அளிக்க அவன் மருவும்நீதி
எய்தி இடும் உலக அச்சம் எய்தலாலும் எல்லோரும்
இருபயனும் எய்தலாலே
சைவநெறி தனை அரையற்கு அளித்த ஆசான்
சகத்தினுக்கும் தேசிகனே சாத்துங்காலே  [ சிவதருமோத்தரம்  23(பரம தர்மாதி இயல் ) ]

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் உரை : சிவனருளிச் செய்த வேதாகமங்களை ஐயம் திரிபற உணர்ந்து பாவமில்லாத ஆசிரியரானவரும் ,உலகில் உள்ள ஆன்மாக்கள் ஈடேறும்படி கருதிச் சிவதர்மங்களை விசாரித்து அரசனுக்குப் போதிக்க ,அந்த அரசன் ,சாம பேத தான தண்டம் எனும் நீதியைப் பொருந்தி நடப்பான் ; அவன் நீதிவழி நடக்கவே உலகத்தில் உள்ள ஆன்மாக்களும் நீதிவழி நடவாதோரைத் தண்டிப்பன் என்னும் பயம் பொருந்தி அறத்தின்கண் ஒழுகுவர் ;  அங்ஙனம் நீதி வழி நடக்கும் அரசனும் ஆன்மாக்களும் புத்தி முத்திகளை அடைதலால் அரசனுக்குச் சிவதீக்கையைச்(சிவதீக்ஷை) செய்து சிவதர்மத்தின்வழி நிறுவின ஆசிரியன் மகிமையைச் சொல்லுமிடத்து அவனே "உலகத்துக்கு எல்லாம் ஆசிரியன்" (ஜகத்குரு)

நாவலர் விரிவுரை : "வையகமும்" என்ற உம்மையால் அரசனும் என அறிக. "அச்ச மெய்தலாலும்" என்ற உம்மையால் இயல்பானும் பத்தியானும் என்று அறிக

நாவலரின்  விரிவுரைக்கான அடியேனின்  விளக்கம் : இச்சிவதர்மோத்தரப் பாடலில்,"வையகமும் உய்ய" என்ற பகுதியில்,வையகம் என்று இல்லாமல்,வையகமும் என்று உம்மைச் சேர்த்திருப்பதால், வையகம்(உலகத்தவர்) என்று மட்டும் அல்லமால்,அரசனையும் சேர்த்தே உய்வு அடைவார்கள் என்று பொருள்படுவதாக நாவலர் பிரான் விளக்குகிறார்.

"அச்சம் எய்தலாலும்" எனும் பதத்தில் அரசன் தண்டிப்பான் என்ற அச்சத்தால் மட்டும்  மக்கள் சிவதர்மத்தின் வழி நடப்பார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது,ஏனெனில் இங்கும் உம்மை சேர்ந்திருக்கிறது.ஆகையால்,அச்சம் மட்டுமின்றி,பக்தி மற்றும் இயல்பாகவும்  மக்கள் சிவதர்மத்தின் மேல் பற்றுடன் பின்பற்றுவார்கள் என்று பொருள்கொள்ள வேண்டும்.ஏனெனில் ,மெய்யான பக்திக்கே இறைவன் அருள்வான் என்பதால்,அச்சத்தை மட்டும் கொண்டு புத்தி முக்திகள் எனும் இரு பயனை பெற முடியாது . சிவதர்மத்தின்மீது இயல்பான பற்றாலும் சிவபிரான் மீது மெய்யான பக்தியாலுமே இரு பயனைப் பெற முடியுமாம்.

ஆகையால், இச்சிவாகமத்தின் கருத்தை படித்து,உணர வேண்டிய நிலையில் நம் சைவ சமயத் தலைவர்களும் சைவ மடாதிபதிகளும் உள்ளனர். நம் சைவ மடாதிபதிகள்,நம் தேசத்தின் தலைவனுக்கு சிவதீக்ஷை அளித்து, சிவ நெறியின்வழி நடத்தினாலேயே போதும், சிவதர்மம் தானாகா இந்தியா மட்டுமின்றி உலகம் பூராவும் இன்னும் வேகமாகப் பரவும். மோடி மற்றும் அவருக்குப் பின் வரும்  தலைவர்களுக்கு சிவதர்மத்தை எடுத்துக்கூறுவது சைவ மடாதிபதிகள் மற்றும் சைவப் பண்டிதர்களின் தலையாய கடமையாம். இப்படி செய்தால் மட்டுமே இந்தியா பழம் பாரதமாக அனைத்துத் துறையிலும் தன் பழைய கம்பீரத்தைப் பெற்று உலக அரங்கில் சிம்மமாய் வீர கர்ஜனைப் புரிய முடியும். இம்மேலான பணியை நாம் மேற்கொள்ள எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் அருள்மழை பொழிவானாக ! நமசிவாய !

குறிப்பு : இங்கு கையாளப்படும் சிவதர்மோத்தரம், 28 சிவாகமங்களில் ஒன்றான சர்வோக்தம ஆகமத்தின் உபாகமமான சிவதர்மோத்தரத்தை,16-ம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீமத் மறைஞானசம்பந்த தேசிகர் (நிகமஞான சம்பந்த தேசிகர்) சம்ஸ்க்ருதத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தருளியது

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்