April 2017 - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Thursday, 13 April 2017

சுன்னி இஸ்லாமிய சட்டப்படி, விபச்சாரத்தின் மூலம் பெறப்படும் மகளை மணந்துக்கொள்ளலாம்

April 13, 2017 0


"ஒரு ஆண்,தனது மகள் ,விபச்சாரத்தின்(திருமண உறவின்றி புணர்ச்சி கொள்ளுதல்)  மூலம் பெறப்பட்டாள் என்றால்,அவளை மணந்துக்கொள்ளலாம் ; அந்த ஆண் ஒரு பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு,(அதனால்) அவள் கர்பம் தரித்து ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள், அந்தப் பெண் குழந்தையை அவன் மணக்க தடையில்லை,ஏனெனில் விபச்சாரத்தின் மூலம் வெளியிடப்பட்ட விந்து,(அந்த விபச்சாரத்தின் மூலம் பெறப்படும் மகளை) திருமணம் செய்துக்கொள்வதை தடுக்க இயலாது, அப்பெண் (மகள்) அவனுக்கு திருமணம் முடிக்கக் கூடியவளே,அவனது முன்னோர்களுக்கும் திருமணம் முடிக்கக் கூடியவளே" [ ஜஸைரி எனும் பிரசித்தி பெற்ற சுன்னி இஸ்லாமிய உலமாவின் ' அல்-பிக் அல மதஹீப் அர்பியா' (al-Fiqh ala Madahib Arbea)  ,தொகுதி 4,பக்கம் 42) .]

அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :

ويجوز للرجل أن يتزوج بنته المخلوقة من مائه زنا ، فإذا زنى بامرأة وحملت منه سفاحاً وجاءت ببنت فإنها لا تحرم عليه لأن ماء الزنا لا حرمة له ، وكما تحل له تحل لأصوله وفروعه
Read More

இஸ்லாமிய சட்டப்படி, விபச்சாரத்தின் மூலம் பெறப்படும் மகள் மற்றும் அவளின் பெண் உறவினர்களையும் மணந்துக்கொள்ளலாம்

April 13, 2017 0


" விபச்சாரத்தின் (மனைவி வேறொரு ஆணுடன் அல்லது கணவன் வேறொரு பெண்ணுடன் புணர்ச்சி செய்தல்) மூலம் பெறப்படும் மகள் ,அவளது சகோதரி ,பேத்தி போன்ற பெண் உறவினர்களை ஒரு ஆண் மணம் புரிய தடை விதிக்கப்பட்டுள்ளது,இது பல பண்டிதர்களின் கருத்தும் கூட,(எனினும்) மாலிக் மற்றும் ஷாபி அது தகும் என்று கூறுகின்றனர் ஏனெனில் அவள் அவனுக்கு அந்நியமானவள் மற்றும் அவனுடன் உறவு முறையில் இல்லாதபடியால்"   [ புகழ்பெற்ற சுன்னி இஸ்லாமிய ஈமாமான ஈமாம் இப்னு கதமாவின் ' அல்-முக்னி​' (Al-Mughni), தொகுதி 7,பக்கம் 485 ]

அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே :

ويحرم على الرجل نكاح بنته من الزنى ، وأخته ، وبنت ابنه ، وبنت بنته ، وبنت أخيه ، وأخته من الزنى . وهو قول عامة الفقهاء . وقال مالك ، والشافعي في المشهور من مذهبه : يجوز ذلك كله ; لأنها أجنبية منه ولا تنسب إليه شرعا

மலிக் மற்றும் ஷாபி போன்றோர் சுன்னி இஸ்லாத்தின் நான்கு  மத்ஹபில் (பிரிவு) மலிக்கி மற்றும் ஷாபி எனும் இருப்பிரிவை ஸ்தாபித்த புகழ்ப்பெற்ற சுன்னி இஸ்லாமிய ஈமாம்கள்.இவர்களின் சட்ட திட்டத்தை வைத்து தான் சுன்னி முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தை கடைபிடிக்கின்றனர்.இப்படி சுன்னி இஸ்லாத்தின் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ள ஈமாம்களின் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் கருத்தைப் பாருங்கள் ! இப்படித் தான் இஸ்லாத்தின் ஈமாம்கள் பல காம நூல்களை/பகுதிகளை மதத்தின் பெயரால் இயற்றி அதற்கு மதச்சாயம் பூசி,முஸ்லிம்களை முட்டாளாக வைத்துள்ளனர்.முஸ்லிம்கள் சிந்திக்க மாட்டார்களா ? அல்லது இஸ்லாத்தில் சேர்ந்தவுடன் சிந்திக்கும் திறன் அழைந்துபோய் விடுமா ?
Read More

Tuesday, 11 April 2017

மன்னனுக்கு ஆச்சாரியரானவர் ஜகத்துக்கும் ஆச்சாரியரே

April 11, 2017 0



                                                     ||சிவாத்பரதரம் நாஸ்தி||

                                       சைவ ஆச்சாரியர்கள் திருவடி போற்றி !!

ஆதிகாலம் தொட்டே, சைவ ஆச்சாரியர்கள் அரசர்களுடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்தனர். ஆன்மிகமும் அரசியலும் கலந்ததே சைவம். மூர்த்தி நாயனார் புராண சூசனத்தில் விளக்கம் அளிக்கும் இடத்தில் " சைவம் தழைக்க அரசியற்றல்" என்ற வாக்யத்தை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பிரான் கையாள்கிறார்.அவ்வாக்யத்துக்கு ஏற்ப சைவம் தழைத்துப் பரவ, முதலில் தேசத்தின் தலைவன் சிவதர்மத்தின்படி வாழ வேண்டும்.அப்பொழுது தான் தன் பிரஜைகளை நல்வழிப்படுத்துவான்."யதா ராஜா ததா ப்ரஜா" (மன்னன் எவ்வழி,மக்கள் அவ்வழி) எனும் பழமொழியை நோக்கவும்.அதனால் தான் சைவாச்சாரியர்கள் மடம் அமைத்து, அரசர்களை முதலில் சைவ சீலர்களாக அக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அதனால் தான் சைவ சமயம் பிரிடிஷ் மிலேச்சர்களின் வருகை வரை,அரசியல் பலம் பெற்ற சமயமாகவே இருந்தது. அதனால் தான் மன்னவனுக்கு ஆச்சாரியனாக இருப்பவன்,ஜகத்துக்கு அச்சாரியனாவான் என்கிறது சிவாகமம் :

ஐயம்அற விபரீதம் அதுவும் ஈசன் அருள் மொழியை
ஆராய்ந்த அனகன் ஆசான்
வையகமும் உய்யஉ(ன்)னிச் சைவதன்மம் மன்னவனுக்கு
அளிக்க அவன் மருவும்நீதி
எய்தி இடும் உலக அச்சம் எய்தலாலும் எல்லோரும்
இருபயனும் எய்தலாலே
சைவநெறி தனை அரையற்கு அளித்த ஆசான்
சகத்தினுக்கும் தேசிகனே சாத்துங்காலே  [ சிவதருமோத்தரம்  23(பரம தர்மாதி இயல் ) ]

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் உரை : சிவனருளிச் செய்த வேதாகமங்களை ஐயம் திரிபற உணர்ந்து பாவமில்லாத ஆசிரியரானவரும் ,உலகில் உள்ள ஆன்மாக்கள் ஈடேறும்படி கருதிச் சிவதர்மங்களை விசாரித்து அரசனுக்குப் போதிக்க ,அந்த அரசன் ,சாம பேத தான தண்டம் எனும் நீதியைப் பொருந்தி நடப்பான் ; அவன் நீதிவழி நடக்கவே உலகத்தில் உள்ள ஆன்மாக்களும் நீதிவழி நடவாதோரைத் தண்டிப்பன் என்னும் பயம் பொருந்தி அறத்தின்கண் ஒழுகுவர் ;  அங்ஙனம் நீதி வழி நடக்கும் அரசனும் ஆன்மாக்களும் புத்தி முத்திகளை அடைதலால் அரசனுக்குச் சிவதீக்கையைச்(சிவதீக்ஷை) செய்து சிவதர்மத்தின்வழி நிறுவின ஆசிரியன் மகிமையைச் சொல்லுமிடத்து அவனே "உலகத்துக்கு எல்லாம் ஆசிரியன்" (ஜகத்குரு)

நாவலர் விரிவுரை : "வையகமும்" என்ற உம்மையால் அரசனும் என அறிக. "அச்ச மெய்தலாலும்" என்ற உம்மையால் இயல்பானும் பத்தியானும் என்று அறிக

நாவலரின்  விரிவுரைக்கான அடியேனின்  விளக்கம் : இச்சிவதர்மோத்தரப் பாடலில்,"வையகமும் உய்ய" என்ற பகுதியில்,வையகம் என்று இல்லாமல்,வையகமும் என்று உம்மைச் சேர்த்திருப்பதால், வையகம்(உலகத்தவர்) என்று மட்டும் அல்லமால்,அரசனையும் சேர்த்தே உய்வு அடைவார்கள் என்று பொருள்படுவதாக நாவலர் பிரான் விளக்குகிறார்.

"அச்சம் எய்தலாலும்" எனும் பதத்தில் அரசன் தண்டிப்பான் என்ற அச்சத்தால் மட்டும்  மக்கள் சிவதர்மத்தின் வழி நடப்பார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது,ஏனெனில் இங்கும் உம்மை சேர்ந்திருக்கிறது.ஆகையால்,அச்சம் மட்டுமின்றி,பக்தி மற்றும் இயல்பாகவும்  மக்கள் சிவதர்மத்தின் மேல் பற்றுடன் பின்பற்றுவார்கள் என்று பொருள்கொள்ள வேண்டும்.ஏனெனில் ,மெய்யான பக்திக்கே இறைவன் அருள்வான் என்பதால்,அச்சத்தை மட்டும் கொண்டு புத்தி முக்திகள் எனும் இரு பயனை பெற முடியாது . சிவதர்மத்தின்மீது இயல்பான பற்றாலும் சிவபிரான் மீது மெய்யான பக்தியாலுமே இரு பயனைப் பெற முடியுமாம்.

ஆகையால், இச்சிவாகமத்தின் கருத்தை படித்து,உணர வேண்டிய நிலையில் நம் சைவ சமயத் தலைவர்களும் சைவ மடாதிபதிகளும் உள்ளனர். நம் சைவ மடாதிபதிகள்,நம் தேசத்தின் தலைவனுக்கு சிவதீக்ஷை அளித்து, சிவ நெறியின்வழி நடத்தினாலேயே போதும், சிவதர்மம் தானாகா இந்தியா மட்டுமின்றி உலகம் பூராவும் இன்னும் வேகமாகப் பரவும். மோடி மற்றும் அவருக்குப் பின் வரும்  தலைவர்களுக்கு சிவதர்மத்தை எடுத்துக்கூறுவது சைவ மடாதிபதிகள் மற்றும் சைவப் பண்டிதர்களின் தலையாய கடமையாம். இப்படி செய்தால் மட்டுமே இந்தியா பழம் பாரதமாக அனைத்துத் துறையிலும் தன் பழைய கம்பீரத்தைப் பெற்று உலக அரங்கில் சிம்மமாய் வீர கர்ஜனைப் புரிய முடியும். இம்மேலான பணியை நாம் மேற்கொள்ள எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் அருள்மழை பொழிவானாக ! நமசிவாய !

குறிப்பு : இங்கு கையாளப்படும் சிவதர்மோத்தரம், 28 சிவாகமங்களில் ஒன்றான சர்வோக்தம ஆகமத்தின் உபாகமமான சிவதர்மோத்தரத்தை,16-ம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீமத் மறைஞானசம்பந்த தேசிகர் (நிகமஞான சம்பந்த தேசிகர்) சம்ஸ்க்ருதத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தருளியது
Read More

போர்க்கலையில் ஈடுபட்ட சைவத் துறவியர்

April 11, 2017 1



                                                        || சிவாத்பரதரம் நாஸ்தி ||

இந்திய வரலாற்றில், அந்நியர்களை எதிர்த்து போராடிய இந்திய சமூகங்களில் சைவ சமூகத்தின் பங்களிப்பு மற்றைய இதர சமூகங்களைவிட பல மடங்கு மகத்தானது மற்றும் முக்யமானது.இச்சைவ சமூகத்தின் வழிகாட்டிகளாக இருந்த சைவ குருமார்களும் இதற்கு ஓர் காரணம்.சைவ குருமார்களின் வழிகாட்டலின்படியே அன்றைய சைவ மன்னர்களும் சைவ வீரர்களும் துருஷ்கர்,பிரிடிஷார்,பொர்துகேயர் என்று வந்தேறி ஆக்கிரமிப்பாளர்களை ஆக்ரோஷமாக எதிர்த்தனர்.சைவகுருமார்களில் இருவகையினர் உண்டு. அந்நியரை எதிர்த்து போர் புரிந்து சிவதர்மத்தை காத்திடும்படி கட்டளையிட்டு,அம்மன்னவனுக்கு அற நெறிகளை போதித்து வந்த சைவ குருமார் ஒரு வகை. போர்க்களத்தில் தாமே ஈடுபட்டு,சைவப் பகைவரை எதிர்க்கும் இன்னொரு வகை சைவ குருமாரும் உண்டு. இரண்டாம் வகையினரைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

மத்ய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ,10-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்த ஒரு கல்வெட்டின்படி,அப்பகுதியை எதிர் தேசத்தரசன் ஒருவன் தாக்கி,அப்பகுதியின் அரசனைக் கொன்றுவிட்டதால்,ஆரணிபத்ர மடத்தின் தலைவராக இருந்த தர்மசிவனார், வில்லேந்தி தாமே போர்க்களத்தில் இறங்கித்,தமது வில்லாற்றலால்,பகவரைக் கொன்றுகுவித்து,பிறகு தாமும் சிவபதம் அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அக்கல்வெட்டில் உள்ளதாவது :

1.
"தவயோகியான தர்மசிவனார்ஆரணிபத்ர மடத்தில் தவமியற்றிக் கொண்டிருந்த வேளையில்,கோபட்டன் எனும் அரசன்  அப்பகுதிக்குத் தன்னுடைய யானைப்படையுடன் புகுந்தான்.அப்பகுதி மன்னவன் கொல்லப்பட ;  இச்செய்தியை கேள்வியுற்ற தர்மசிவனார் (இறந்துப் போன) அவனுக்காக  சற்று நேரம் கண்ணீர் விட்டார் , பிறகு,வெகுண்டெழுந்து  போர்க்களத்தில் தாமே குதித்தார்; சிவபிரானைப் போலவே திகழ்ந்தார்; சிவனிடமிருந்து இறங்கிய வில்லையேந்தி ;  திரிபுரதகனத்தின்போது விளங்கிய சிவனாரைப் போல்,பகைவர்களை விரட்டியடித்து, இறுதியில் தேவர்கள் மலர்தூவ, ஈடில்லாத (சிவ) லோகத்தை அடைந்தார்"

இதேபோல் ஜபல்பூர் கண்டெடுக்கப்பட்ட ஓர் கல்வெட்டும் இன்னொரு வரலாற்றுக் குறிப்பை நமக்கு தெரிவிக்கிறது.கலச்சூரி அரசர்களான ஜயசிம்ஹன் (கிபி 1163-1188) மற்றும் விஜயசிம்ஹன் (கிபி 1188-1210) போன்றோரின் ராஜகுருவாக இருந்த விமலசிவனாரின் கல்வெட்டு இது.இக்கல்வெட்டின் மூலம்,விமலசிவனாருக்கு குருவாகவும்,மன்னன்  நரசிம்ஹனுக்கும் (கிபி 1153-1163) ராஜகுருவாகத் திகழ்ந்த  கீர்த்திசிவனார் என்ற ஆச்சாரியர், ஆன்மிகத் துறையில் மட்டுமின்றி, ராணுவத்துறையிலும் சிறந்து விளங்கியதாக கூறப்பட்டுள்ளது. தமது அரசனான கலச்சூரி மன்னனது அரசை பெரிதாக்க பல பகுதிகளை ஜெயங்கொண்டதாகவும்,ஜெயங்கொள்ளப்பட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாகவும் அக்கல்வெட்டு மேலும் தெரிவிக்கிறது.அக்கல்வெட்டின் சாராம்சம் :

2.
"பெயருக்கேற்றாற்போல் (மெய்யாலும்) அவர் கீர்த்திசிவனாரே.(சிவனாரைப் போல்) தமது ரதம் பூமியாலும்,அதன் இருசக்கரங்கள் சந்திர சூரியர்களாலும் செய்யப்படாததாகினும்; அதன் சாரதி பிரம்மாவ இல்லாதபோதிலும் ,(கீர்த்திசிவனாரின்) அம்பு விஷ்ணுவாக இல்லாதபோதிலும் ,அவர் (கீர்த்திசிவனார்) தமது பகைவர்களின் நகரங்களை பஸ்மமாக்கினார் (திருபுர அசுரர்களின் கோட்டைகளை சிவனார் பஸ்மமாக்கியதுபோல்) ; தமது பகைவரிடம் இருந்து ஜெயங்கொள்ளப்பட்ட பகுதிகள்தோறும் நிலவையொத்த வெள்ளை வர்ண சிவாலயங்களால் நிரப்பினார்"


ஆக, சைவ குருமார்களில் ஒரு சாரார்,போர்க்களையிலும் வல்லவர்களாக இருந்திருப்பதை நாம் தெரிந்துக்கொள்ளலாம்.அதனால் தான் சைவ சமூகம்,வந்தேறி துருஷ்கர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் சிம்மசொப்பனமாகவும் இருந்துள்ளது.


ஆதாரங்களுக்கு உதவிய நூல் : The Saiva Age( Genesis and development of Tantrism) of Alexis Sanderson
Read More

சுவாமி வேதாசலத்தின் ஆரம்பக்கால சம்ஸ்க்ருத அபிமானம்

April 11, 2017 0





சுவாமி வேதாசலம் (மறைமலை அடிகள்)  என்பவர் "சைவ சித்தாந்த சண்டமாருதம்" ஸ்ரீ சோம சுந்தர நாயகரவர்களின் மாணவராக இருந்தவர்.ஆரம்பக் காலத்தில் சைவ சித்தாந்த சம்பிரதாயத்துக்கு ஏற்ப நடந்தவர் தான்.பிற்காலத்தில்,சோமசுந்தர நாயக்கரின் மறைவுக்குப் பிறகு, சில தமிழ் வெறியர்களின் சவகாசத்தாலும்,கிருத்தவ சார்புடைய மேனாட்டு ஆராய்ச்சியாளர்களின் ஆர்ய திராவிட இனவாத புரட்டுக்கும் பலியாகி, வேத சிவாகம நிந்தனைகளை செய்ய ஆரம்பித்து,சிவத்துரோகியானார்..

இவரது ஆரம்பக்கால நூல்களை வாசித்தால்,புரியும்.அதில் பல சம்ஸ்க்ருத வார்த்தைகளை கையாண்டிருப்பார்.  ஒரு உதாரணம் தருகிறேன். "சோமசுந்தரக்காஞ்சியும் சோமசுந்தரக்காஞ்சியாக்கமும்" எனும் அவர் இயற்றிய நூலில் உள்ள சில பகுதிகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.அதில் நீங்களே பாருங்கள், எவ்வளவோ சம்ஸ்க்ருத சொற்களை எந்தவித தடையும் இன்றி கையாண்டுள்ளார்.இந்த நூல் வெளியானது ஏறத்தாழ 1901-ல். ஸ்ரீலஸ்ரீ,சிவாநுபூதி,ஸ்ரீமாந்,உபகரித்து,ஸ்ரீ,பிரமாணம்,சிவசாயுச்சியம்,தருக்கம் ,உபந்நியாசம்,ஸ்ரீமத்,சுவாமி என்று பல சம்ஸ்க்ருத சொற்களை இங்கு கையாண்டிருக்கிறார். தமது வாழ்வின் பிற்பகுதியில் தான்,தன் பெயரை மறைமலை அடிகள் என்று மொழிபெயர்த்துக்கொண்டு,திராவிட கழகத்துடன் கூட்டுச் சேர்ந்துக்கொண்டு, சிவத்துரோகத்தில் ஈடுபட்டார்.தமிழர் மதம்,முற்கால பிற்கால புலவோர் வாழ்க்கை மற்றும் வேளாளர் நாகரிகம் போன்ற ஈன நூல்களை இயற்றி மக்களை,குறிப்பாக ஆன்ம முதிர்ச்சி இல்லா சைவர்களைக்  கெடுத்தார்.இவர் தவறானப் பாதையில் பயணிக்க ஆரம்பித்ததால் தான் சைவ சித்தாந்த சம்பிரதாயத்து சைவப் பண்டிதர்களும் சைவ மடாதிபதிகளும் இவரை புறக்கணித்ததோடு,இவரது அறிவுக்கொவ்வாத தமிழ் வெறி நூல்களுக்கு கண்டனமும் இயற்றினர்.


"திரு நான்மறைவிளக்க ஆராய்ச்சி" எனும் நூலில், சைவப் பண்டிதர்கள் சுவாமி வேதாசலத்தை எப்படி வறுத்தெடுத்துள்ளனர் என்பதைப் பார்ப்போம் :

 1.
 "பல்லாவரம் சுவாமி வேதாசலம் அவர்கள், திருவாசகத்தில் போற்றித் திருவகவலுக்கு எழுதிய விரிவுரையில் "மூவர் நான்மறை முதல்வா போற்றி" யென்னும் 94 ஆம் அடியிலுள்ள மூவர் நான்மறை யென்ற சொற்றொடர், தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞானபோதம் என்னும் நூல்களைக் குறிக்குமென்றும், வடமொழி நான்கு வேதங்களைக் குறிகா தென்றும் எழுதினார்கள்.  இதற்குப் பென்னம்பெரும் எதிர்ப்புத் தோன்றவே, தொடர்ந்து தாம் திருவாசகத்திற்கு உரை எழுதப் போவதாக அறிவித்த அவர், தாம் கொண்டிருந்த எண்ணத்தைக் கை நெகிழவிட்டார். " -  "சேக்கிழார் அடிப்பொடி" தி.ந ராமச்சந்திரன்

2.
" ஸ்ரீ வேதாசலம் பிள்ளை கொள்கையை மறுத்து யான் எழுதிய "தற்காலச்சமயநிலை இரண்டாம்பாகம்" "தென்றமிழ்த்தனிமாட்சி" முதலிய பத்திரிகைகளை நினைவுகூரச் செய்தன.  யான் ஒருவிடயத்திற்கு ஒரு பிரமாணங்காட்டியிருத்தல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கிற்று.  அதுநிற்க.
ஸ்ரீ.வேதாசலம்பிள்ளை ஸ்ரீ.கா.சுப்பிரமணியபிள்ளை முதலிய சிலர் பிராமணர் மேற்கொண்ட பொறாமையினாலே ஏறக்குறையப் பதினைந்து வருஷகாலமாகப் புதுக்கொள்கைகளும் புதுஅருத்தங்களும் புதுத்திருத்தங்களும் கற்பிக்கின்றார்கள். "-  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்கள் தமையனார் புதல்வரும், அவர்கள் மாணாக்கரும் ஆன ஸ்ரீமத் கைலாச பிள்ளையவர்கள்

3.
" ..........ஸ்ரீமாந். வேதாசலப் பிள்ளையவர்கள் திருநெல்வேலியில் காந்திமதியம்மை கோயின் மண்டபத்திலே, பாண்டி நாட்டார் சைவரல்லர் சமணர்கள் என்றும், சாதி இல்லை என்றும் பிரசங்கஞ் செய்த காலத்தில், எம்மைக்கொண்டு சாத்திர வாயிலாக அவர் பிரசங்கத்தை மறுத்துப் பிரசங்கஞ் செய்வித்து அப்பிரசாரகரால் ஏவப்பட்டு எமது பிரசங்கதிற் குறிப்பெடுத்தற்காகச் சபையில் வந்திருந்த ம-ள-ள-ஸ்ரீ பண்டிதர் சிவராமபிள்ளையவர்களும், அவர் மாணாக்கர் நால்வரும் பிரசங்கத்திற் குறிப்பெடுத்தற் கிடம் பெறாமையால் நாண முற்றுப் பாதிப்பிரசங்கத்தில் சபையைவிட்டோடவும் அது கேட்டறிங்த பிரசாரகரும்(சுவாமி வேதாசலம்) நாணி மற்றைத்தினமே  திருநெல்வேலியைவிட்டுப் அம்பாசமுத்திரம் ஓடவும் செய்த பெரியதோருண்மைச் ................" - யாழ்ப்பாணம், ஸ்ரீலஸ்ரீ.சுவாமிநாதபண்டிதரவர்கள்.

இப்படி இந்த சுவாமி வேதாசலம் சந்திக்காத எதிர்ப்பே இல்லை.சைவப் பண்டிதர்கள் அனைவரும் அவரது கருத்துக்களை கடைசிவரை எதிர்த்தனர்,மறுத்தனர்,கண்டித்தனர்.


இந்தச் சிவதர்மோத்தரப் பகுதியை இவர் படிக்கவில்லையா,அல்லது படித்தும் அதன் பொருள் அவருக்கு விளங்கவில்லையா என்று தெரியவில்லை :

ஒப்பிலி யநாதி முத்தனோதிய  வேதமாதிக்
கொப்புயர் வுரைப்பார் நிந்தை யுரைப்பவ ருன்னு  வாரும்
வெப்பெரி நிரயந்  தன்னுள் வீழ்ந்துவெந் துருகி வீயார்
எப்பொழு தேறு  வாமென்  றிளைத்திளைத்  தேங்குவாரே-   
( ஆறாவது பாவவியல்-8 ,சிவதருமோத்தரம் )

பொருள் : தனக்கு நிகரில்லாத அநாதிமலமுத்தராகிய  சிவன் அருளிச் செய்த வேதாகமங்களுக்கு ஒப்பாகவேனும் உயர்வாகவேனும்  பிறிதொருநூலைச் சொல்லுவோரும் ,(அவ்வேதாகமங்களை)  நிந்தை சொல்லுவோரும்,  (நிந்தையை மனசினாலே)   நினைப்பவரும்,  வெம்மையையுடைய எரிவாய் நரகத்தின்கண் வீழ்ந்து, ,(உடம்பெல்லாம்) வெந்து,(ஊனெய்யெல்லாம்) உருகி,  (இங்ஙனம் துயறுறவும் ,அந்த யாதனா சரீரத்தினின்றும்)  நீங்காதராகி  ,(இந்நரகத்தினின்றும்)  எக்காலங்கரையேறுவோமென்று வாடி வாடி ஏங்குவர் ....


குறிப்பு : இந்த நூலில் ,சம்ஸ்க்ருத சொற்கள் மீது இடப்பட்டுள்ள கோடுகள் என்னுடையதல்ல, நூலகத்தில் எடுக்கப்பட்டு,இணையத்தளத்தில் தரவேற்றப்பட்ட நூல் இது...



Read More

"எம்மதமும் சம்மதம்" எனும் குருட்டு வாதத்துக்கு கண்டனம்

April 11, 2017 0
                                                         


                                                        || சிவாத்பரதரம் நாஸ்தி ||

ஹிந்துக்களில் பெரும்பான்மையினர் "எம்மதமும் சம்மதம்" என்று கூறிவருகின்றனர்.அதனால் வெள்ளியன்று தர்க்காவிலும்,ஞாயிறு அன்று சர்ச்சிலும் மண்டியிட தவறுவதில்லை.அவ்வளவு ஏன்,பூஜை அறையில் ஏசு படம் போன்றவற்றையும் வைத்து வழிபடுகின்றனர்.இது சமீபத்தில் உருவான முட்டாள் தனமான சமய விபச்சாரமே அன்றி இதற்கு எந்த சைவ,வைணவ நூல்களிலும் ஆதாரம் இல்லை.சிலர் வேதத்தில் உள்ள சில வாக்யங்களை நம் முன் நீட்டி,இந்த அபிப்பிராயத்தை நிலை நாட்டப் பார்க்கின்ரனர்.அவர்கள் காட்டும் வேத வாக்யம் :

"இந்திரன்,மித்ரன்,வருணன்,அக்னி,திவ்யன்,சுபர்ணன்,கருத்மான்... முதலிய பல பெயர்களால் அறிவாளிகள் கடவுளைச் சொல்லுகிறார்கள்,ஆயினும் கடவுள் ஒருவரே" - ரிக் வேதம் 1/164/46

இந்த வேத வாக்யத்தின் உட்கருத்துப் புரியாமலேயே பலர் இதனைப் பயன்படுத்துகின்றனர்.இறைவனௌக்கு சிவன்,ருத்திரன்,அக்னி,இந்திரன்,விஷ்ணு என்று பலப் பெயர்கள் உண்டு.ரிஷிகள் இப்படி இறைவனைப் பலப் பெயர்களால் வேதத்தில் அழைத்துள்ளனர்.இந்தப் பலப் பெயர்கள்,இறைவனால் படைக்கப்பட்ட தேவர்களைக் குறிப்பவை அல்ல என்பதை விளக்கவே வேதம் இப்படியோர் விளக்கத்தை கொடுத்துவிடுகிறது.

தேவர்களிலும் இந்திரன்,விஷ்ணு,ருத்ரன்,அக்னி எனும் பெயருள்ளவர்கள் இருக்கிறார்களே ,வேதம் அவர்களைக் குறிப்பதாக ஏன்  இருக்கக் கூடாது என்று கேட்கலாம்.ஓர் உதாரணம் கூறுகிறேன்.மனிதரில், ஈஸ்வரன்  என்று பலர் பெயர் வைத்துள்ளார்கள். ஆதலால் இவர்கள் தான் இறைவனா ? இல்லை தானே ? அந்தப் பெயர் மனிதர்களுக்கு இரவல் தானே ? இறை நாமத்தை வைத்துக்கொண்டனர்,அவ்வளவே.அதே போல் தான் இந்திரன்,விஷ்ணு,அக்னி போன்றவை தேவ பதவிகளின் பெயர்கள்.பெரும்புண்ணியம் செய்த ஆத்மா,இந்திர,விஷ்ணு போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றன.இப்படி பல கோடி ஆத்மாக்கள் விஷ்ணு,பிரம்ம,இந்திர பதவிகளுக்கு வந்து போயுள்ளன.இறைவன்,தன் நாமங்களான இந்திரன்,விஷ்ணு போன்றவற்றை,தேவர்களுக்கு சூட்டியுள்ளார்.அவ்வளவே.மற்றபடி,அந்தப் பெயர்களுக்கு உரிய உண்மையான உரிமையாளன் இறைவன் மட்டுமே.


ஆக,இந்த மந்திரத்தின் உண்மையான விளக்கத்தைப் பார்த்தோம்.வேதம் எல்லா மதங்களும் ஒன்று என்று சொல்லவில்லை என்பதற்கு மேலும் சில ஆதாரங்களைப் பார்ப்போம் :

1) "அந்த ருத்ரனுக்கு மேலான பதியுமில்லை : ரக்ஷகனும் இல்லை : உற்பத்தி ஸ்தானமும் இல்லை : அவனே காரணன் : அவனே காரணாதிபதிகளுக்கு அதிபன் : அவனை பிறப்பிக்கின்றவனும் ,அவனுக்கு அதிபனும் இல்லை " - ஸ்வேதாஸ்வதார உபநிஷத்

2) "ஏகோ ருத்ர ஏக ஏவருத்ரோ நத்விதீயாயதஸ்துர்ய" -அதர்வசிர உபநிஷத்

பொருள் : சர்வகர்த்தாவான ருத்திரன் ஒருவனே உளன் : இரண்டாமவன் உளன் என யாரும் ஒருபடுகின்றிலர்

3) "சம்சார துக்க நாச முக்திப்ராப்தியின் பொருட்டு விஷ்ணு முதலிய சர்வதேவர்களையும் விட்டு எப்பொழுதும் தியேயனாகவுள்ள சிவனையே தியானிக்க வேண்டும்" -சரப உபநிஷத்

இந்த மூன்று வேதப் பகுதிகளான உபநிஷதங்கள்,ஏக இறைவனாக பரசிவத்தை மட்டுமே வர்ணித்து,அவனை மட்டுமே வணங்கச் சொல்கிறது.பிற தேவர்களான விஷ்ணு,பிரம்மா போன்றோரை வணங்குவதால் முக்தி இல்லை என்கிறது.அப்படியிருக்க எங்ஙனம் எல்லா மதத்தின் தெய்வங்களையும் வணங்கலாம் என்று நவீன ஹிந்துக்களில் பலர் கூறுகின்றனர் ? எல்லா சமயங்களின் தெய்வங்களும் ஒன்று என்று வேதம் கூறுவதாக ஒரு ஆதாரத்தை எடுத்து வைக்க முடியுமா ? இந்த சவாலை ஹிந்துக்கள் ஏற்கத் தயாரா ?

இன்னும் சிலர், " வேதத்தில் இறைவனாகக் கூறப்படும் சிவன் ஏன் அல்லா,ஏசுவாக இருக்கக் கூடாது ? சிவன்,அல்லா,ஏசு இவர்கள் மூவரும் ஒருவராக இருக்கலாமே,அதனால் சிவனை வேதம் வணங்கச் சொல்வதால்,அல்லாவையும் ஏசுவையும் வணங்கலாம் என்று அர்த்தமாகிறதே ? " என்று சிலர் கேள்விகளைக் கேட்கலாம். இதற்கும் வேதம் மற்றும் பிற சைவ சாஸ்திரங்கள் பதில் அளிக்கின்றன.

1. "கோமோஷோபாய :" (மோக்ஷத்துக்கு உபாயம் எது ?)
    "விபூதி தாரணா தேவ : " (விபூதி தாரணமே அதற்குபாயம் ) -ஜாபாலோபநிஷத்

2. "பரமஹம்ஸாநாமஸம்வர்த்த காருணி ச்வேதகேது ருபுநிதாக ஜடபரததத்தாத்ரேய ரைவதகபுஸுண்டப்ரப்ருதயோவிபூதிதாரணாதேவமுக்தா :ஸ்யு : ஸஏஷ பஸ்மஜ்யோதி ரிதிவை யாஜ்ஞவல்க்ய :| "
(பரமஹம்ஸ ஸந்நியாஸிகளான சம்வர்த்தகாருணி, ஸ்வேதகேது,  துர்வாஸர்,ரிபு,நிதாகர், ஜடபாதர்,தத்தாத்ரேயர், ரைவதகர்,புஸுண்டர் முதலானவர்கள் விபூதியை தரித்ததாலேயே, மோக்ஷத்தையடைந்தவர்களானார்கள்...அப்படிப்பட்ட இந்த யஜ்ஞவல்கியரும்  பஸ்மஜ்ஜோதியென்று  பெயர் பெற்றார் ) - ப்ருஹஜ்ஜாபால உபநிஷத்

3."திரிபுண்டரத்தை நிந்திக்கிறவர் எவரோ,அவர் சிவனையே நிந்திக்கிறவர் ஆவர்.அதனை எவர் தரிக்கின்றனரோ,அவர் சிவனையே தரிக்கின்றவர் ஆவர்" - ப்ருஹத் ஜாபால உபநிஷத்".

4."சிவம்..ஹரிஹர ஹிரண்ய கர்ப ஸ்ருஷ்டாரம் " (சிவபிரான்,பிரம்ம விஷ்ணு ருத்திரர்களை சிருஷ்டித்தவன் ) -பஸ்மஜாபால உபநிஷத்

5.
"ப்ரஹ்ம விஷ்ணு புரந்தராத் யமர வர ஸேவிதம் மாமேவ ஜ்யோதி : ஸ்வருபம் லிங்கம் மாமேவோபாஸித்வயம் " (பிரம்ம விஷ்ணு இந்திராதி தேவசிரேஷ்டர்களால் சேவிக்கப்பட்டு வரும் ஜோதிஸ்வரூபமான என்னையே  லிங்காகாரமாய் உபாசிக்க வேண்டும் ) - பஸ்மஜாபால உபநிஷத் 

இங்கு கொடுக்கப்பட்ட முதல் மூன்று உபநிஷதங்களில் விபூதியின் பெருமை விளக்கப்பட்டுள்ளது.இவ்வுலகில்,விபூதியை சின்னமாகக் கொண்ட ஒரே சமயம் சைவ சமயம் மட்டுமே .ஆக,விபூதியே முக்திக்கு வழி என்று ஜாபால உபநிஷத் கூறுவது,சைவ சமயத்தின் வழி ,அதன் சின்னங்களை அணிந்து,சைவ ஒழுக்கம் வழுவாமல் இருந்தால் மட்டுமே முக்தி கிட்டும் என்று கூறப்பட்டுள்ளது.ஆக,விபூதியைச் சின்னமாகக் கொள்ளாத வைணவம்,இஸ்லாம்,கிருத்தவம்,பௌத்தம் போன்ற மதங்களின் தெய்வமும் சிவனும் ஒன்று என்ற வாதம் அடிபடுகிறது.மேலும்,விபூதியை ஏற்காத இந்த மார்க்கங்கள் மூலம் முக்தி இல்லை என்பதும் ஜாபால உபநிஷத் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

அடுத்தது,திரிமூர்த்திகளான பிரம்ம,விஷ்ணு,ருத்திரரை சிவபிரானே படைத்தார் என்று கூறப்படுகிறது.மும்மூர்த்திகளைப் பற்றி இஸ்லாம்,கிருத்தவம் கூறவில்லை.மும்மூர்த்திக்கொள்கையை அவர்கள் ஏற்கவும் இல்லை.ஆக,எப்படி மும்மூர்த்திகளைப் படைத்த சிவனும்,மும்மூர்த்திக் கொள்கையை ஏற்காத இஸ்லாம்,கிருத்தவத்தின் தெய்வங்களும் ஒன்று ? நிச்சயமாக ஒன்று இல்லை.

கடைசி உபநிஷத்,தன்னை சிவலிங்கம் மூலம் வழிபட வேண்டும் என்று சிவபிரான் கட்டளையிடுகிறார்.சிவலிங்க வழிபாட்டை கிருத்தவம்,இஸ்லாம் ஏற்கவில்லை.ஆக,எப்படி சிவனும்,அல்லாவும்,ஏசுவும் ஒன்று ?

ஆக,வேதம் ஏக இறைவனாக கூறும் சிவனும்,இஸ்லாம் கிருத்தவத்தின் தெய்வங்களான அல்லாவும் ஏசுவும் ஒன்று அல்லர். அதனால்,வணங்கப்பட வேண்டிய ஒரே இறைவன்,சிவ பிரான் மட்டுமே.பிற மதங்களின் தெய்வங்களை வணங்கக்கூடாது.இதை அதர்வசிகா உபநிஷத் தெளிவாகக் கூறுகிறது :

"மற்றதெல்லாம் (பிற தெய்வங்களை வழிபடுவதை) விட்டுச்,சுகத்தைச் செய்பவராகிய  சிவனொருவரே தியானிக்கப்பட (வணங்கப்பட ) வேண்டியவர்"

சுருங்கச் சொல்ல வேண்டுமெனில்,28 சிவாகமங்களில் ஒன்றான சர்வோக்தம ஆகமத்தின்,உபாகமமான சிவதர்மோத்தர மொழிபெயர்ப்பில்,இவ்வாறு கூறப்படுகிறது :

"இவ்வாறெடுத்த உடம்பிலேயே இருளாகிய ஆணவ மலத்தின் சக்தியை நீக்கிப் பேரின்பத்தை வழங்குவதாய் சைவ  சாத்திரத்திற் சொல்லப்பட்ட மார்க்கங்களை  ஆய்ந்து உணராமல்,மலபந்தமுடையவரால் சொல்லப்பட்ட மேன்மையற்ற புன் சமயங்கள் சொல்லும் மார்க்கங்களை பொருளென மதித்து விரும்புகிறவர்கள், தமக்கெதிராய் அருகிலிருக்கும் நிறைந்த அமிர்தத்தை விட்டு, கூழை உண்ண விரும்புகிறவர்களுக்கு ஒப்பாவார்கள்.." - ( சிவதர்மோத்தரம் 10:9)

இறுதியாக,சாதாரண வழக்கில் விளக்க வேண்டுமெனில்,ஓர் உதாரணம் தருகிறேன்.இரண்டுப் பெண்கள் உள்ளார்கள்.முதலானவள்,தன் கணவனுக்கு மட்டுமே பணிவிடை செய்வாள்.பிற ஆண்களை சகோதரனாகவே பாவிப்பாள்.இரண்டாமவளோ," நான் திருமணம் செய்துக்கொண்டவரும் ஆண்,பக்கத்து வீட்டில் உள்ளவரும் ஆண்.இருவரும் ஆண் என்பதால்,இருவருமே எனக்கு கணவர்" என்ற கொள்கையுடன் இருப்பவள்.இவர்களில் முதலானவள் சைவர்களுக்கு உவமை.இரண்டாமவள்,எம்மதமும் சம்மதம் என்று கூறும் ஹிந்துக்களுக்கு உவமை.
Read More

ஜாகீர் நாயக்கின் அயோக்கியத்தனத்தை தோலுரித்த மலேசிய உலமா

April 11, 2017 0


|| சிவாத்பரதரம் நாஸ்தி ||


மலேசியாவில் உள்ள ஒரு உலமா ,"உஸ்தாஸ்" அபு ஷபிக் என்பவர் ஜாகிர் நாயக்கின் அயோக்கியத்தனத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார் ...அவர் கருத்தின் மொழிபெயர்ப்பு :

"ஏற்கனவே முஸ்லிமாக இருப்பவர்களை முஸ்லிம் அல்லாதவர் போல் நடிக்க வைத்து,தனது நிகழ்ச்சிகளில் முஸ்லிம் அல்லாதவர் முஸ்லிமாக தன் முன்னால் மாறுவது போல் நடிக்க வைக்கிறார்....வேதனையான விஷயம் இது...முஸ்லிமான ஒரு நபரை காபீராக்கியதற்கு ஒப்பான செயல் இது.மலிவான விளம்பரம் தேடுவதற்கு நீ அவர்களை காபீராக்கிவிட்டு,பிறகு பொது மக்கள் முன்னிலையில் இஸ்லாத்தில் சேர சொல்கிறாய்....அல்லாஹ் மன்னிப்பானாக..."

இப்படித் தான் ஒரு தடவை போலி சங்கராச்சாரி ஒருவரை செட்டப் செய்து தன் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை புகழும்படி செய்துள்ளான் இந்த அயோக்கியன் ஜோக்கர் நாய்...
Read More

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்